Archive For The “இது புதுசு” Category

பிரபஞ்சங்கள் இடையே சஞ்சரிக்கும் ஷேப் ஷிஃப்டர் பெண்கள்

By |

என் நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் shape shifter பிசாசுகள் வந்த போது சாரி, நாங்க இங்கே நீண்டநாள் தங்கின பிசாசுகள். நீங்க – உள்ளே வந்தவை இருந்த இரண்டைக் கேட்டன. நாங்க புதுசா வந்திருக்கோம். இப்போ போயிடுவோம் என்று மரியாதையோடு சொல்லின கர்ப்பூரத்தை வம்பிழுத்த இரண்டும். நீங்க இங்கே இடம் எடுத்துக்கறதுன்னா எடுத்துக்குங்க என்று வீட்டுப் பிசாசுகள் சகஜம் காட்ட, வேண்டாம், நாங்க போகணும் என்று பிரியத்தோடு மறுத்தன வந்த இரண்டும். வீட்டுப் பைசாசங்கள் வெளியே…




Read more »

வந்த பைசாசங்களும் இருந்த பைசாசங்களும்

By |

வந்த பைசாசங்களும் இருந்த பைசாசங்களும்

என் நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து மசகு போல் அடர்த்தியான களிம்பு ஏதோ அடையடையாக அப்பிய கிழிந்த பிடவை உடுத்திய இரண்டும் அந்தச் சேலையையே மேலே தலைப்பு உயர்த்தி மார்பை மூடியிருந்தன. அவை பெருத்த முலைகள் என்று கர்ப்பூரத்துக்குத் தோன்றியது. கழுதைக்குப் பேர் கர்ப்பூரமா, எழுந்திருடா என்று அவன் தலைக்கு வெகு அருகே தலை குனிந்து ஒன்று கிரீச்சிட குமட்டி வாந்தி எடுத்தபடி கிடந்தான் அவன். மிகுந்த சிரமத்துடன் கண் திறந்து பார்க்க, தலையில் மயிர்…




Read more »

கர்ப்பூரனைச் சந்திக்க வந்த இரண்டு பைசாசங்கள்

By |

கர்ப்பூரனைச் சந்திக்க வந்த இரண்டு பைசாசங்கள்

திண்ணை டாட் காம் இணையத் தளத்தில் நாவல் தினை அல்லது சஞ்சீவனியிலிருந்து கர்ப்பூரம் நடுராத்திரிக்கு இரண்டு பிசாசுகளைக் கண்டான். அவன் படுக்கையில் அவன் தலைமாட்டில் ஒன்றும் கால்மாட்டில் இன்னொன்றுமாக துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தன அவை. அவற்றின் கண்கள் குழிந்திருந்தன. பாதி திறந்த இமைகளில் பீழை கனமாக ஒட்டியிருந்தது. வாய் தான் முழு துர்நாற்றத்துக்கும் காரணம் என்று தெரிய வாய் திறந்து வாச்சி வாச்சியாக நான்கு வரிசை மஞ்சள் பல் காட்டி ஏன்யா என்று ஒரு பிசாசு…




Read more »

இசையோடு அரசாளும் நேரம்

By |

இசையோடு அரசாளும் நேரம்

மிளகு பெருநாவல் அத்தியாயம் 56-இல் இருந்து உளிகள் விடிந்ததிலிருந்து ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. தனி உளி எழுப்புவது ஒலி இல்லை. பூவில் தேன் அருந்தப் போய் அமரும் தேனியின் மெல்லிய இறகுச் சிலிர்ப்பு போன்றது அது. பத்து உளிகள் சேர்ந்தால் எழும் ஓசை, காதலனொருவன் அன்புக் காதலிக்கு அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகக் கன்னத்தில் தரும் முத்தத்தின் சத்தம் போன்றது. சென்னா செவிமடுத்தது, கடல் அலை தனக்குள் பாடியபடி கரைக்கு வந்து, திரும்பப் போய், மறுபடியும் வந்து, திரும்ப…




Read more »

தமிழ்க் குறுநாவலும் Breakfast at Tiffany-யும்

By |

தமிழ்க் குறுநாவலும் Breakfast at Tiffany-யும்

என் குறுநாவல் தொகுப்பு இரா.முருகன் குறுநாவல்கள் – வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஒன்பது குறுநாவல்களின் தொகுப்பு என் அன்புக்குரிய பதிப்பாளர் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் நிறுவனத்தால் நேற்று மறுபதிப்பு கண்டிருக்கிறது. 1990-களில் எழுதிய முதல் குறுநாவல்கள் விஷம், விஷ்ணுபுரம் தேர்தல் முதல் கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் எழுதிய பசுவன் வரை இத்தொகுப்பில் உண்டு. முன்னுரை இங்கே =================================================================================================================== முன்னுரை இரா.முருகன் குறுநாவலுக்கு என்ன இலக்கணம் என்று தெரிந்து கொள்ளாமல் நான் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இங்கே…




Read more »

மருந்துப் பூப்பூத்த கோகர் மலை – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

By |

மருந்துப் பூப்பூத்த கோகர் மலை – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் சகல இன சஞ்சீவனி பெருமருந்து தயாரிக்க மூலிகை தேடியலைந்த கதையிலிருந்து இங்கே கொஞ்சம் போல. அப்போது சட்டென்று அவருடைய நாற்பரிமாணக் கூறுகளைச் சற்றே மாற்றி அரூபனாக்கி அவரை பேழையிலிருந்து இறக்கினான் குழலன். பிரதி நீலன் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து நீலனைக் கண்ணிமைக்கும் முன் பேழையில் இட்டதும் அவன் தான். பாவம் அந்தப் பிரதி நீலன். இவர் போல இருப்பதால் இங்கே அழைத்து வரப்பட்டு உயிரும் நீத்தார் அந்த அப்பாவி மனிதர். இப்போது…




Read more »