Archive For The “இது புதுசு” Category

கபிதாளும் கருந்தேள்களும் கர்ப்பூரமும் சுவாசித்திருந்த காலம்

By |

கபிதாளும் கருந்தேள்களும் கர்ப்பூரமும் சுவாசித்திருந்த காலம்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து கபிதாள். கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி உச்சரிப்பில் கொபிதா என அழைக்க ஆசை அவனுக்கு. கொபிதாளே! பௌர்ணமி, அமாவாசை ராத்திரிகளில் எல்லாம் சேர்ந்து வந்தால் இரண்டு பேரும் ராத்திரி தந்த சுத்தி செய்து, குளித்து வாசனை திரவியங்களை தாராளமாக உடம்பில் வாரியெடுத்துப் பூசி மெல்லிய கருத்த ஆடை தரித்து கதவடைத்துக் கட்டிலுக்கு பரஸ்பர அணைப்பில் விரைவார்கள்….




Read more »

’இருபதம்சத் திட்டம் அது இந்தியாவின் சட்டம், நம் இந்தியர்க்கு மட்டும், இனி இன்ப வாழ்வு கிட்டும்’

By |

’இருபதம்சத் திட்டம் அது இந்தியாவின் சட்டம், நம் இந்தியர்க்கு மட்டும், இனி இன்ப வாழ்வு கிட்டும்’

1975 – எமர்ஜென்சி காலத்தில் நிகழும் நாவல் 1975-இல் இருந்து நாங்கள் வாசல் முன்னறை நாற்காலிகளில் உட்கார்ந்ததுமே ஏதோ கடிக்க உணர்ந்து துள்ளினோம். கேளு நாயர் மற்ற உயிரினங்களோடு, மூட்டைப் பூச்சியும் சிறு அளவில் வளர்த்து வருவதாகத் தெரிந்தது. “அது போன மாசம் நிறைய இருந்து மருந்து அடிச்சுக் கொலை செஞ்சாச்சு. இன்னும் கொஞ்சம் இருக்கு. அதுவும் இன்னிக்கு ராத்திரி போய் ஒழிஞ்சுடும்”. தலை கலைத்து வாராமல் விட்ட யட்சிக் களையோடு பாருகுட்டி – பாருக்குட்டி இல்லை,…




Read more »

சீர்காழி கோவிந்தராஜனும் லூசியானோ பாவரொட்டியும்; கூடவே உம்ம் கல்தூம்

By |

சீர்காழி கோவிந்தராஜனும் லூசியானோ பாவரொட்டியும்; கூடவே உம்ம் கல்தூம்

எங்கள் ஊர் காந்தி வீதியில் புது புரோட்டா ஸ்டால் தொடங்கும்போதோ, தெருமுனை வீட்டுப் பெண் பெரியவளாகி சடங்கு சுற்றும் சுபநிகழ்ச்சி என்றாலோ, வெகுவாகக் கவனத்தைக் கவர ஐம்பது வருடம் முன் ஏற்பாடான நிகழ்வு சவுண்ட் சர்வீஸ் ஒலிபரப்பு. ’விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ என்று சீர்காழி கோவிந்தராஜன் கணீரென்று பாடி ஒலிபரப்பைத் தொடங்கி வைத்தால், காதும் மனசும் அவரிடம் ஓடிவிட, விழா களைகட்டிவிடும். அசரீரி பாடும் சினிமா பாட்டா, பக்திப் பாடலா, தத்துவப் பாடலா, ஹை பிட்சில்…




Read more »

கதர்க்கொடி கப்பல் காணுதே பாட மாட்டாளாம் – வெள்ளைக்காரன் மேலே பிரேமை

By |

கதர்க்கொடி கப்பல் காணுதே பாட மாட்டாளாம் – வெள்ளைக்காரன் மேலே பிரேமை

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து சுவர் மீண்டும் ஒளிர்ந்தது. நீங்கள் ஒதுங்கி இருப்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில். பெருந்தேளர் அரசாளும் காலத்திலிருந்து முப்பது நூற்றாண்டு பின்னால் கடந்து சேர்ந்த காலம் அது. பேசிய சுவர் இருளடைந்தது. காலப் படகில் புதியதாக நீட்டப்பட்ட குசினிக்குள் இருந்து வானம்பாடி ஒரு வெள்ளித் தட்டில் தினை உருண்டைகளும், அரிசிப்பொரி உருண்டைகளும் வாழைப் பழங்களுமாக வைத்து எடுத்து வந்து மருத்துவரிடம் அளித்தாள். வேகவைத்த நிலக்கடலை இரண்டு குவளை நிறையத் தட்டில் இருந்தது….




Read more »

பிரபஞ்ச வெளியில் சங்கை தீர்க்க, உலகளாவிய நீர் பிரிதல் வேண்டா

By |

பிரபஞ்ச வெளியில் சங்கை தீர்க்க, உலகளாவிய நீர் பிரிதல் வேண்டா

நாவல் தினை அல்லது சஞ்சீவனி – ஒரு சிறு பகுதி எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. ஒரு சௌகரியத்துக்காகக் கற்பித்துக்கொண்ட காலக் கணக்கு எங்கோ நின்று இயக்கம் நிலைத்து விட்டது. இறங்க வேண்டாம் காலப் படகு பழுது நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சுவர் சற்று வெளிச்சத்தோடு அறிவித்து அதே தகவலை இயந்திரக் குரலில் சகஜமான குரலில் பரத்துகின்றது. இருட்டில் மருத்துவர் நீலர் ஏ…




Read more »

சரவணன் மாணிக்கவாசகம் மதிப்பீடு – தினை அல்லது சஞ்சீவனி நாவல்

By |

திரு சரவணன் மாணிக்கவாசகம் நாவல் தினை அல்லது சஞ்சீவனிக்கு எழுதிய மதிப்புரை ———————————————————————————– முழுநீள Fantasy நாவல்கள் தமிழில் வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆங்கிலத்தில் Fantasy genre மட்டுமே படிக்கும் வாசகர்கள் உண்டு. ஆறு தலைகள், ஆயிரம் கைகள், சூரிய பகவானின் ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்ற Fantasyகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் தான் நாமும். புனைவில் Fantasy அம்சம் கலக்கையில் லாஜிக் என்பது இல்லாது போய் எதுவும் சாத்தியம் என்றாகி விடுகிறது. இவருடைய முந்தைய நாவலான மிளகு…




Read more »