Archive For The “இது புதுசு” Category
’அரசூர் வம்சம்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான The Ghosts of Arasoor இன்று மறுபதிப்பு கண்டுள்ளது. Zero Degree Publishing ஆங்கில imprint வெளியீடு இது. ’தினை அல்லது சஞ்சீவனி’ அடுத்து ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்படும். தலைப்பு Horse Tail ஆக அநேகமாக இருக்கும்.
குயிலி கவனித்தாள் – ‘இந்த ஊரில் சந்தித்த ஐந்து நிமிடத்தில் பகடி சொல்லிப் பழக எப்படி இத்தனை பேர் முற்படுகின்றார்கள் தெரியவில்லை. அல்லது கோகர் மலைபோல் முழுக்கக் கட்டிச் சமைத்த உயிரும் உடலும் ஊடாடும் புனைவு வெளியோ.” குயிலி வானம்பாடியைப் பார்த்தாள். “வெள்ளை உள்ளம் எல்லோருக்கும் பொதுச் சொத்தாக இருக்கும்” என்று அவள் மனதிலிருந்து குயிலியின் மனத்தோடு பேசிச் சொன்னாள் வானம்பாடி, “யார் வேண்டும் சிறுமியரே உமக்கு” கிழவியம்மாள் கேட்க, நீங்கள் தான் என்றாள் குயிலி. “ஆமாம்,…
முழு அத்தியாயம் படிக்க இங்கே சொடுக்கவும் மிளகு பெருநாவலில் இருந்து – —————————————— ”இல்லே நான் அப்படி எல்லாம் கர்ப்பம் தாங்கலே. உங்க தொடுப்பு வெள்ளைக்காரியைக் கேட்டுப் பார்த்தேளோ?” ஒரு பத்து நிமிஷம் கனமான மௌனம் நிலவும் அங்கே. ”இல்லே, இது அதுக்கெல்லாம் ரொம்ப முன்னாடி.” “அப்போ தில்ஷித் கவுரை ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்கோ. கேட்டுண்டு மஞ்சள் குங்குமம் பிளவுஸ் பீஸ் கொடுத்து அனுப்பலாம்”. வசந்தி சகஜமான மனநிலைக்கு வந்திருப்பாள். “அவள் அப்புறம் முழுசா பத்து…
நாளை, ஏப்ரல் 23 2023 உலகப் புத்தக தினம். வாசிப்பில் ஈடுபாட்டை மீண்டெடுக்க நல்ல நூல்களை எழுதியும், வெளியிட்டும், படித்தும், புத்தகங்கள் பற்றிப் பேசியும், கேட்டும், வாசக அனுபவத்தைத் தனித்திருந்து நுகர்ந்தும், கூடியிருந்து குழாத்தில் பகிர்ந்தும் புத்தக தினம் சிறக்கட்டும். புத்தக தின வெளியீடாக என் அடுத்த நாவல் ’தினை அல்லது சஞ்சீவனி’ வெளிவர உத்தேசித்தது, நேர்த்தியான கெட்டி அட்டையோடு தமிழில் முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக வெளியிட முடிவு செய்ததால் அதற்கான நேரம் எடுக்கிறது. இன்னும் ஒரு…
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து யார் வேண்டும் சிறுமியரே உமக்கு” கிழவியம்மாள் கேட்க, நீங்கள் தான் என்றாள் குயிலி. “ஆமாம், பசி வயிற்றைக் கிள்ளிப் பாடாகப் படுத்துகிறது” என்று எதுவும் செயற்கை இல்லாமல் பேசி அவள் தோழி ஆமோதித்தாள். ”மாம்பழச் சாறும், இஞ்சியும் சீனியும் பெய்த நீரில் தேன் கலக்கிய களைப்பு மாற்றும் பானமும் பருகுவீர் முதலில்” என்று அன்போடு அழைத்தாள் முதுபெண். காலலம்பி வீடு புக்கார் இரு கன்னியரும். சுடுமண் வெண்குவளை இரண்டில் பழச்சாறும்…