Archive For The “இது புதுசு” Category

இன்னொரு குதிரை – சிறுகதை

By |

இன்னொரு குதிரை –  சிறுகதை

இன்னொரு குதிரை   குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான்.  அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள்.   வாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது ‘எழவு விழ’, ‘நாசமாகப் போக’, ‘சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்பு தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்கு காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாகக் கொண்டவை.   கங்கையூரில் நகரசபை தேர்தல்…




Read more »

சகர் – சிறுகதை

By |

சகர் – சிறுகதை

சகர்   எதிர் ஃப்ளாட் என்று அந்தப் பெண் சொல்லி முடிக்கும் முன்பே வாசல் கதவு மூடி விட்டது.  சலிப்பு. ஆபீசுக்குக் கிளம்பும் அவசரம். சமையல்கட்டில் கத்தரிக்காய் வதக்கல் கரிந்து போகிற பயம். இதுவரைக்கும் எத்தனை பேர் கதவைத் தட்டித் திறந்து கருகின வதக்கலை குப்பையில் போட வேண்டி வந்ததோ.   எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த ப்ளாட்டிலும் அதே மாதிரி படம் எழுதியிருந்ததால் வருகிறவர்கள்…




Read more »

இன்னொரு சிறுகதை – நண்டுமரம் தொகுப்பில் இருந்து

By |

இன்னொரு சிறுகதை – நண்டுமரம் தொகுப்பில் இருந்து

ரங்கா சேட்   ‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’   பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார்.   மகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி பஸ் உள்ளே போட்டார்கள்.   ‘எதுக்கு மாமா கூஜாவும் மண்ணாங்கட்டியும்?’   முந்திரிக்காய் கூஜா மூடி லூசாகி வென்னீர் காலில்  சிந்தின அவஸ்தையைப் பொறுக்க…




Read more »

ஆழ்வார் – சிறுகதை

By |

ஆழ்வார் – சிறுகதை

அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில் குனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே பழைய கட்டிடம். கீழ்ப்பகுதியில் எல்லாம் கடைகள். ஒரு மாவு மெஷினும் உண்டு. கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, மாவு மெஷினிலிருந்து ஏதோ கரகரவென்று பொடியாகப் பிளாஸ்டிக் வாளியில் சுமந்து கொண்டுவந்து தெருவில் கொட்டி, நான்கைந்து பேர் கர்மசிரத்தையாகக் கையளைந்து…




Read more »

போகம் தவிர் – சிறுகதை : நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

By |

போகம் தவிர் – சிறுகதை : நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

போகம் தவிர்                  பசித்தது.   காலையில் சாரங்கன் எழுந்திருக்கும்போது சிறு பொறி போல ஆரம்பித்து, வயிற்றில் அக்னியாக வளர்ந்து உடம்பையே வளைத்து எரிக்க முற்படும் பசி.   தட்டு நிறைய இட்லி. பொன் நிறத்தில் வடை. சுருட்டி வைத்த அதே நிற தோசைகள். அரிசிச் சோறு. புளிக் குழம்பு. தேங்காய் அரைத்து விட்ட அவியல். கிண்ணம் நிறைய பால் பாயசம்.  கத்தரி, வெண்டை, கீரைகள், புடல், பாகற்காய் என்று பச்சைக் காய்கறி. ஆப்பிள், மா,…




Read more »

ஜவஹர்லால் நேரு மறைந்த தினத்தில் ஒரு படப்பிடிப்பும பிறகும்

By |

ஜவஹர்லால் நேரு மறைந்த தினத்தில் ஒரு படப்பிடிப்பும பிறகும்

அந்தப் பித்தளைக் குடம் திரும்ப வந்து சேரல்லேன்னு சொக்கலிங்கம் ஆசாரியார் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டுப் போனார். சகலை புகார் பண்ணியிருக்காராம்.   ஆசாரியும் அவர் சகலையும் என்ன விதமான ஆட்கள் என்று  புரியவில்லை. நாடு முழுக்க துக்கம் அனுஷ்டிக்கிற நேரம். இந்த வார்த்தை எடுப்பாக இல்லையா? அனுஷ்டித்தல். ஜாமான் மாதிரி கிடையாது. நாலு பேர் கூடியிருக்கப்பட்ட இடத்துலே கவுரவமாகச் சொல்லலாம். குடத்தோடு பெண்கள் இருந்தாலும் சரிதான்.   அது சரி. துக்கம் அனுஷ்டிக்கிற நேரம் என்பதால் …




Read more »