Archive For The “இது புதுசு” Category
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நூல். அதிலிருந்து – அவன் இந்திய பாணியில் இரு கரம் கூப்பிக் கும்பிட்டுக் கேட்டான் – துரையவர்கள் யாருன்னு புலப்படலே. அமேயர் பாதிரியாருக்கு உறவா? பாதிரியாருக்கு எப்படி உறவு இருக்க முடியும்? மன்னிக்கணும். அதைச் சொல்லியாச்சு. ஆமா, ஆனா உங்க கிட்டே சொல்லலே. கொச்சு தெரிசா கிட்டே சொன்னேன். நான் கேட்டதாலே, என்கிட்டே சொன்னதாகவும் அர்த்தமாகும். …
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ – ஆல்பர்ட் பிரபு கம்பீரமும், பொறுப்பும் கருணையும் இடைகலந்த குரலில் சத்தம் தாழ்த்தி அவனிடம் சொன்னார் – நான் கொச்சு தெரிசா இல்லை. லார்ட் ஆல்பர்ட். நானூறு வருஷமா உலவறேன். இது என் வீடு. அப்போது அவருடைய கையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் சொன்னது – நல்லது. நீங்க எனக்கு பாவமன்னிப்பு…
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல் இது. நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி கீழே தொடர்கிறது- மூன்றில் ஒருத்தர் பிரஞ்சுக் காரர் இல்லையோ? மிகச் சரிதான். பிரஞ்சுக் காரர்களுக்கும் காலம் காலமாக இங்கிலாந்து பேரரசு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து, இங்கிலீஷ் பண்பாட்டைப் போதித்து வருகிறது. சதா பெண்களோடு சிருங்காரம் பாராட்டுவதிலும், கெட்டுப் போன ஒயினும், முந்தாநாள் சாப்பிட்ட மீனும் உலர்ந்து துர்வாடை அடிக்கும் அவர்களின் வாய்க்குள் நாவு நுழைத்து முத்தம்…
வாழ்ந்து போதீரே – அரசூர் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ- கூடத்தில் சரவிளக்கு பாதிக்கு மட்டும் வெளிச்சம் வர எரிந்து கொண்டிருந்தது. ஆல்பர்ட் பிரபு தினசரி மிடுக்காக நடந்து வலது புறம் திரும்பும் இடத்தில் போட்டு வைத்த பெரிய மர மேஜையைச் சுற்றி மூன்று வேலைப்பாடமைந்த நாற்காலிகள். மேஜையும் நாற்காலிகளும் ஆல்பர்ட் பிரபு காலத்து மரவேலைப் பொருட்கள் போல் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய சந்ததியினர் வாங்கி வைத்திருக்கலாம். குடியும்,…
வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இங்கே- இப்படி யார் யாரையோ வீட்டுக்குக் கூப்பிட்டு அரிசி வடித்துக் கொட்டித் தின்ன வைத்து ராத்திரி முழுக்க விளக்கைப் போட்டுக் கொண்டு கூட்டாலோசனை செய்து கொண்டிருக்கிறவன் தான் காரணம். இந்த வீட்டுக்குள் அவன் வந்தது முதலே ஆல்பர்ட் பிரபுவை மதிக்கிறதுமில்லை. கண்டு கொள்வதும் இல்லை. வீட்டுச் சொந்தக்காரர், நானூறு வருஷம் முன் மகா பிசகாக ஏதோ…
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி வாழ்ந்து போதீரே அத்தியாயம் முப்பத்தைந்து ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் பிரபு நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது. எழுந்ததும் தான் தெரிந்தது, அவர் கூடுதலாகவே உறங்கி விட்டிருந்தார் என்று. பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்ள…