Archive For The “இது புதுசு” Category
ராமச்சந்திரன் ஸ்டேஷன் மாஸ்டரைக் கவனித்துப் பார்த்தான். ‘சரவணா.. சாரிடா.. வெரி சாரி.. இனிமே கவனிச்சு சரியா வரையறேண்டா.. நாளைக்கு வந்து நிச்சயம் வரஞ்சு தரேன். இன்னிக்கு ரயில் ஓடாதாம்.. வர முடியலே.. மன்னிச்சுக்கோ..’ ‘நீ தப்பு ஏதும் பண்ணலேடா.. எதுக்காக வருத்தப் படறே.. நான் தாண்டா தப்புப் பண்ணிட்டேன். உன் பங்குக்கு எடுத்து வச்ச பணத்திலே அப்பா கருமாதி காரியம் எல்லாம் நடத்தினேன். இதுவும் பொய் தாண்டா. நான், இவ கேட்டாளேன்னு ரெட்டை…
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 8 ராமச்சந்திரன் கண்ணை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு தடவை இமை மூடும் போதும் இந்த உலகமே பிடிக்கு வழுக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இடமும் காலமும் நடப்பும் பிரமையுமாக ஒரு பிரவாகத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாக, மேல் கீழாகப் பயணம் போகிறான். முன்னால், இன்னும் முன்னால் போய், தொடங்கிய இடத்துக்கு வருகிறான். கண்ணைத் திறக்கும் போதெல்லாம் எதிரே உட்கார்ந்து பாட்டிலிலிருந்து கிளாஸில் நிறைக்கிற ஸ்டேஷன் மாஸ்டர்…
‘கணபதி, வீச்சுப் பொரட்டா வாங்கிட்டுப் போ’ வண்டிக்காரன் சொன்னான். ‘போறதுக்குள்ளே ஆறிடுமே அண்ணே’ ‘நீ சூடா இருக்கேயில்லே.. அது எப்படி ஆறும்?’ பஸ் ஸ்டாண்ட். ‘சார், நீங்க இருங்க.. ஸ்டேஷன் மாஸ்டர் ஐயா பணம் கொடுத்து விட்டிருக்காரு வண்டிச் சத்தத்துக்கு.. நீங்க எடுக்க வேணாம்… பழனியண்ணே.. இந்தாங்க…. சார், இறங்கிக்கலாம்.. நீங்க இறங்குங்க.. மூட்டையை நான் இறக்கறேன்.. இதிலே பூரா படமா இருக்கா சார்? கனமாக் கனக்குது. பழனியண்ணே.. நீங்க…
ராத்திரி வண்டி குறுநாவல் பகுதி 7 அ ————————————————————————- ‘இப்ப என்னன்னு சொல்லு விஷயத்தை…நான் அவசரமாப் போகணும்..’ ‘ஒண்ணுமில்லேய்யா, என் தம்பி வந்திருக்கான். நாளைக்கு முத்துப்பட்டியிலே பொண்ணு பார்க்கப் போகப் போறானாம்’ ‘மவராசனாப் போய்ட்டு வரட்டும்’ ‘நாமளும் கூட வரணுமாம்’ ‘நான் எதுக்குடி? அப்புறம் பொண்ணுக்கு என்னைப் பிடிச்சுப் போயிடுத்துன்னு வச்சுக்க… அவனுக்குக் கல்யாணம் ஆகணுமா, வேணாமா?’ ‘ஆமா.. உன் மூஞ்சிக்கு நான் ஒருத்தியே சாஸ்தி.. பழனியண்ணே நல்லாச் சொல்லுங்க…
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 7 பசும்புல் மணத்துக் கொண்டு ஜட்கா வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது. ஆள் அரவமில்லாத கப்பி ரோட்டில் வெய்யில் காய்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடுகள் பாதையோரத்துக் குத்துச் செடிகளை மேய்ந்து கொண்டிருந்தன. வண்டியோடு ஓடி வந்த நாய் ஒன்று அலுத்துப் போய்த் திரும்பி நடந்தபோது ஒப்புக்குக் குரைத்தது. இந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு நம்மேல் ஏன் இத்தனை கரிசனம் என்று ராமச்சந்திரனுக்குப் புரியவில்லை. இங்கே உட்காராதே.. வரையாதே.. சரி…..
‘என்ன மிஸ்டர் ராமச்சந்திரன்… போகலாமா?’ ’எங்கே?’ ‘சரியாப் போச்சு. நீங்க போகச் சொன்னீங்களே.. மறந்தே போச்சு.. இப்பப் போனா மதியம் சாப்பாட்டுக்குப் போய்ச் சேர்ந்துடலாமா?’ ‘எத்தனை தடவை சாப்பிடறது? இப்பத்தானே சாப்பிட்டீங்க? அதுவும் மறந்து போச்சா?’ ‘சாரி.. சாரி.. இந்தப் புஸ்தகத்திலே ஒரேயடியா முழுகிப் போயிட்டேன்.. இது ஒண்ணுதான் எங்க அப்பா எனக்குன்னு விட்டுட்டுப் போன சொத்து.. இந்தப் பக்கத்துலே பாருங்க.. பேரு எழுதியிருக்கு.. இந்தப் படம் யாரு தெரியுமா?…