Archive For The “இது புதுசு” Category

ராத்திரி வண்டி – குறுநாவல்

By |

ராத்திரி வண்டி – குறுநாவல்

ராத்திரி வண்டி  –  குறுநாவல்     ’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது.  அட்சரா பதிப்பகம் வெளியிட்ட என் முதல் குறுநாவல் தொகுப்பான ‘தகவல்காரர்’ நூலில் இடம் பெற்றது.   இந்தக் குறுநாவலின் கதையாடல் பற்றிக் குறிப்பிட வேண்டும். நனவோடை சற்றே மாற்றமடைந்து கதைப் போக்கில் அவ்வப்போது முன்னால் வந்து வந்து போகும் இந்தக் கதையாடல், இதற்கு அப்புறம் எழுந்த என் அரசூர் நாவல்களுக்கான நடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு…




Read more »

நைஜீரிய உபசாரம்

By |

நைஜீரிய உபசாரம்

 உடைப்பு Things Fall Apart நாவல் கிடைத்தது. நைஜீரிய எழுத்தாளரான நோபல் பரிசு பெற்ற சினுவா அச்பெ எழுதிய இந்த நூல் சின்னச்சின்ன சம்பவங்கள் மூலம் நகரும் கதையமைப்பு கொண்டது. அவ்வப்போது நைஜீரியர்கள் பயணம் வைத்து நண்பர்களையும், உறவினர்களையும் சந்திக்கும்போது கோக்கோ கொட்டைகளைத் தின்னக் கொடுத்து உபசரிப்பது நாவலில் சீராக நடக்கிறது. ’காப்பி சாப்பிடுங்க’ மாதிரி ’கோக்கோகொட்டை தின்னுங்க’ உபசாரம் அங்கே பரவலானது. ஃபூ-ஃபூ என்ற வாழைக்காய்ப்பொடி கரைத்துச் சமைத்த பண்டத்தையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு கூட்டையும் பரிமாறி…




Read more »

விடிவதற்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். ஆடிஆடிப் போன காளை வண்டி

By |

விடிவதற்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். ஆடிஆடிப் போன காளை வண்டி

மனை                        பகுதி 8   நடு இரவிலும் உறங்காத மனை.   மற்ற மனைக்காரர்கள் எல்லாம் வந்து பேசியபடி இருக்க, கார்த்தியாயினியின் உடலைப் பழந்துணியால் மூடி இருந்தது. குழந்தை நந்தினி அழுதழுது பகவதியின் மடியில் உறங்கிப் போயிருக்க, சித்ரனுக்காகக் காத்திருந்த பகவதி.   குரல்கள்..அடங்கி ஒலிக்கிற குரல்கள்.   ‘புழைக்கு அப்புறத்து மாப்ளாமாரைக் கூப்பிட்டால் அப்புறப்படுத்தி விடலாம்’.   ‘உள்ளூர்க்காரர்களே போதும்’.   ‘வேண்டாம்… சமயம் கிடைக்கும் போது சொல்லிக் காண்பிப்பார்கள்’.   ‘ஏதேது.. சம்பந்தம் வைத்துக்…




Read more »

அந்தத் தளிரை இழுத்துக் கொண்டு ஆடியாடிப் போன நம்பூத்ரி – மனை குறுநாவல் பகுதி 8

By |

அந்தத் தளிரை இழுத்துக் கொண்டு ஆடியாடிப் போன நம்பூத்ரி – மனை குறுநாவல் பகுதி 8

குறுநாவல்  மனை  இரா.முருகன்              பாகம் 8   ‘வா சனியனே’   அந்தப் பச்சைத் தளிரை இழுத்தபடியே ஆடியாடிப் போகிற மூத்த நம்பூதிரி.   நீலகண்டன் கார்த்தியாயியை எட்டி உதைத்துத் தள்ளினான்.   ‘ரான்.. ரான்.. தள்ளாதீர்கள்.. வல்லாத்த ஷீணம்.. நானே போகிறேன்.. குழந்தையையாவது தயவு செய்து..’   ‘உன் வம்சத்தின் நாற்றக் காற்றே இங்கே அண்ட வேண்டாம்.. ஒழிந்து போ..’   பலம் கொண்ட மட்டும் தள்ளிய நீலகண்டனின் கைகளும் கால்களும்… மதில் சுவரில் பலமாகத்…




Read more »

உப்பு வணிகமும் பழநிக்கு நடைப் பயணமும்- புரவி மாத இதழில் என் பத்தி வாதவூரான் பரிகளிலிருந்து

By |

உப்பு வணிகமும் பழநிக்கு நடைப் பயணமும்- புரவி மாத இதழில் என் பத்தி வாதவூரான் பரிகளிலிருந்து

ஆடு மேய்ச்ச மாதிரியும் இருக்கணும்,  அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும் என்பது தெற்கத்தி  சீமையில் பரவலாக  உதிர்ந்த பழமொழி.   இப்போது பழமொழியின் இடத்தை சினிமா பஞ்ச் டயலாக் அபகரித்துக் கொண்டிருக்கிறது. நிற்க.   இன்னொரு பழைய புத்தகம் படிக்கக் கிடைத்தது. சில நூறு வருடம் முன், என்றால் கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறாம் ஆண்டு முதல் நகரத்தார் என்ற நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் அவ்வப்போது மேற்கொண்ட பக்திப் பயணம் பற்றிப் பேசுவது. அவர்கள் திரைகடல் ஓடியும் திரவியம்…




Read more »

பம்மிப் பம்மி நுழைந்து கொண்டிருந்த இரவு – குறுநாவல் மனை பகுதி

By |

பம்மிப் பம்மி நுழைந்து கொண்டிருந்த இரவு – குறுநாவல் மனை பகுதி

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி  7   மனைக்கு உள்ளே அந்தர்ஜனங்களின் நாமஜபத்தை மீறி எழுகிற மூத்த நம்பூதிரியின் குரல்.   ‘யார் இந்த தரித்திரம்? எப்படி உள்ளே வந்தது?’   குழந்தை நந்தினி விளையாடியபடி மனையின் உட்புறம் ஓடி, படியேறி வந்து கொண்டிருந்த மூத்த நம்பூதிரியின் பெரிய வயிற்றில் மோதிக் கொண்டு நின்றது.   ‘இது யார் குடுமியும் பானை வயிறுமாக? ராட்சசனா? ஏன் என்னைப் பார்த்து உருட்டி விழித்து சத்தம் போடணும்?’   பயத்தில்…




Read more »