Archive For The “இது புதுசு” Category

ஒரு யட்சிக் கதை – ஒரு மனையைப் பற்றியும்

By |

ஒரு யட்சிக் கதை – ஒரு மனையைப் பற்றியும்

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி 1 (’இரா.முருகன் குறுநாவல்கள்’ நூலில் இருந்து) ======================================================   இந்தக் குறுநாவல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு காலகட்டத்தைப் பற்றியது. கதை நடக்கும் இடம் கேரளத்தின் வள்ளுவநாடு பிரதேசம் (இன்றைய மலைப்புரம் பகுதி).   கதைக் களன் தான் மலையாள நாடே தவிர, கதை சுத்த சுயம்புவான தமிழ்க் கற்பனை.   என் கற்பனையில் உருவானது.   கதையில் நிஜங்கள் –   1) நம்பூதிரி சமுதாயப் பழக்க வழக்கங்கள்…




Read more »

காரை பெயர்ந்த தரையில் நேர் கோடாகக் கிடக்கும் தண்ணீர்க் குழாய்களைத் தவிர்த்தபடி

By |

குறுநாவல் பகல் பத்து ராப்பத்து   அத்தியாயம் 9   ’முன்னூற்று முப்பத்தஞ்சு ரூபாய்’.   ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.   மொட்டை மாடி அரை இருட்டு.   காரை பெயர்ந்த தரையில் நேர் கோடாகக் கிடக்கும் தண்ணீர்க் குழாய்களைத் தாண்டித் தவிர்த்தபடி.   ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.   நீளக் கட்டிய பிளாஸ்டிக் கயிற்றுக் கொடியில் உலர்த்தி எடுக்க மறந்துபோன மார்க் கச்சையின் கொக்கி காதில் பிறாண்ட ..   யாரோடது…




Read more »

இஸ்தான்புல்லும் ஓரான் பாமிக்கும் பேப்பர் ஹல்வாவும்

By |

இஸ்தான்புல்லும் ஓரான் பாமிக்கும்  பேப்பர் ஹல்வாவும்

ஓரான் பாமிக்கின் ’இஸ்தான்புல்’ அல்புனைவு நூல் அடுத்துப் படிக்கக் கிடைத்தது.  இஸ்தான்புல் நகரின் அழகை உயர்த்திக் காட்டும் டான்யூப் நதிக்கரைக்கு புத்தகம் நகர்கிறது. கரையோரம் நடக்கும் எழுத்தாளர் பழைய நினைவுகளை அசைபோடும்போது அங்கே கூவிக்கூவி சிறு வியாபாரிகள் விற்கும் காகித அல்வா வாங்கி உண்டதை நினைவு கூர்கிறார். எனக்கு அங்கே கொறிக்க காகித அல்வா கிடைத்தது. காகிதத்தைப் போட்டு அல்வா கிண்டித்  தின்ன முடியுமா? அல்லது, நம்ம கோழிக்கோடு மிட்டாய்த்தெரு இனிப்புப் பலகாரக் கடைகளில் கோழிக்குஞ்சு எசென்ஸ்…




Read more »

எரிக்கா ஜாங்க், மில்ஸ் அண்ட் பூன், மற்றும் சர்சோங்கா ஸாக்

By |

எரிக்கா ஜாங்க், மில்ஸ் அண்ட் பூன், மற்றும் சர்சோங்கா ஸாக்

குறுநாவல்   பகல் பத்து ராப்பத்து    அத்தியாயம் 8 அ   மூவாயிரத்துச் சில்லரை பணம் அழுது ஆளுக்கு இரண்டு என்று சாப்பிட்ட மேத்தி ரொட்டியும் சர்சோன் – கா – சாகும் .. அப்புறம் ப்ரீதிக்கு மட்டும் ஐநூறு ரூபாய்க்கு, பெரிய படகு போன்ற கிண்ணத்தில், நடுவே தீப்பற்றி எரிய எடுத்து வந்த ஐஸ்க்ரீம்…   விக்ரம் அங்கிருந்தே டாக்ஸி பிடித்துப் போய்விட்டான்.   ‘ஜெயந்த்.. நீ காரை ஓட்டாதே.. ஒண்ணு நரகத்துக்குப் போவோம்.. இல்லே போலீஸ்…




Read more »

அவனுக்குள் போய்ச் சிரிப்பைக் கெல்லிய ரெண்டு கோப்பை ‘பகல் பத்து ராப்பத்து’

By |

அவனுக்குள் போய்ச் சிரிப்பைக் கெல்லிய ரெண்டு கோப்பை ‘பகல் பத்து ராப்பத்து’

குறுநாவல்  பகல் பத்து ராப்பத்து  அத்தியாயம் 8   ‘ஆவிக்னான் பட்டணத்துக்காரிகள்.. கேள்விப் பட்டிருக்கியா ப்ரீதி?’   பெரைரா காரை ஓட்டிக் கொண்டே கேட்டான்.   சோடியம் வேப்பர் விளக்குகளின் சீரான வெளிச்சத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டிருந்தது விக்டோரியா டெர்மினஸ்.   பரபரப்பெல்லாம் ஓய்ந்து வெறிச்சோடிக் கிடந்த தெருவில் வாழைப்பழ வண்டிக்காரர்களின் குரல் தான் மிச்சம் இருந்தது.   ‘ஆவிக்னான்.. பிகாஸோ வரைஞ்ச ஓவியம் தானே? தெரியும். காலேஜ்லே ஆர்ட் அப்ரிசியேஷன் ஒரு பாடம் எடுத்துப் படிச்சதுலே…




Read more »

குறுநாவல் பகல் பத்து ராப்பத்து – டங்கல் என்பது யார் பெயர்?

By |

குறுநாவல்  பகல் பத்து ராப்பத்து அத்தியாயம் 7   டங்கல்.   இது ஒரு மனிதனின் பெயரா இல்லை ஏதாவது வஸ்துவா என்று சாந்தாபாய்க்குப் புரியவில்லை.   மதியத்திலிருந்து சாரிசாரியாக வந்த ஆரஞ்சு நிறத் தலைப்பாகைக் காரர்கள் விக்டோரியா டெர்மினஸ் முன்னால், மலைப்பாம்பு கிடப்பது போல, நீள வளைந்து போகிற சங்கிலி போல, கையைக் கோர்த்து நின்றபோது, உரத்த குரலில் திரும்பத் திரும்பச் சொன்னது ‘டங்கல்’.   ஆஸாத் மைதானத்தில் அப்புறம் அவர்கள் பிரம்மாண்டமான கூட்டமாகக் கூடி…




Read more »