Archive For The “இது புதுசு” Category
பகல் பத்து ராப்பத்து குறுநாவல் அத்தியாயம் 6 ப்ரீதி வெராண்டாவில் வந்து நின்றாள். ஐந்து மணிக்குக் கார் அனுப்புவதாக விக்ரம் சொல்லியிருக்கிறான். பெரைரா நேரே ஓட்டலுக்கு வந்து விடுவானாம். பெரைரா சரி என்றால் எல்லோருக்கும் சரி தான். பெரைரா ஆர்ட் பிலிம் எடுக்க என்.எப்.டி.சிக்கு கடன் கேட்டு மனுப் போட்டிருக்கிறானாம். யார் கண்டது, எல்லாம் கூடி வரும் பட்சத்தில் ஷபானா ஆஸ்மி போல, தீப்தி நவ்வால் போல, ஸ்மிதா பட்டீல்…
குறுநாவல் பகல் பத்து ராப்பத்து அத்தியாயம் 5 ’மணி என்ன நசீம்பாய்?’ சாந்தாபாய் பின்கழுத்து வியர்வையைத் துடைத்தபடி கேட்டாள். யாருக்கோ பாட்டில் கழுவுகிற பிரஷ் எடுத்துக் கொடுத்தபடி மூன்று விரலைக் காட்டினான் அவன். மூன்று மணி. ஏதாவது சாப்பிட்டால்தான் கொஞ்சம் போலாவது தெம்பு வரும். பணம் வைக்கிற தகர டப்பாவைப் பார்த்தாள். பரவாயில்லை…அறுபத்தைந்து ரூபாய்க்கு வியாபாரமாகி இருக்கிறது. கிளம்புகிறதுக்குள் ஒரு இருநூறு தேறினால், ஜம்னாதீதி முகத்தில் விட்டெறியலாம். சாப்பிடறே…..
குறுநாவல் ‘பகல் பத்து ராப்பத்து; அத்தியாயம் 4 ராமபத்ரன் ஓபராய் ஓட்டலை ஒட்டி நிழலில் நின்றார். டிபன்வாலா நேரம் தவறாமல் கொண்டு வந்து கொடுத்த காரியரில் வத்தல் குழம்பும் தயிர் சாதமும் சாப்பிட்ட திருப்தி. நல்ல வேளையாக அகிலாண்டம் புளியோதரை வைக்கவில்லை. ‘சூனாம் தே..’ தட்டுக்கடைக்காரன் டூத் பேஸ்ட் போல ட்யூபில் அடைத்த சுண்ணாம்பை நீட்டினான். கடற்காற்று மெரின் டிரைவ் பக்கமிருந்து சீராக வீச ஆரம்பித்திருக்கிறது. …
பக்லவா ஆசை ——————– நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நக்யுப் மஹ்ஃபுஸின் ’கெய்ரோ மூன்று நாவல் தொகுதி’ படித்தேன். எகிப்திய தி.ஜானகிராமன் என்று அவரை நான் சொல்லத் தயார். சிதறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள், சின்னச்சின்ன சோரங்கள், மனக் குமைச்சல், இசை மேல் விருப்பம் என்று பொதுவான நகாசும், கதை முடிச்சுகளும் தட்டுப்படுகின்றன. மாமியார் மருமகள் சண்டை மருமகளின் அப்பாவை வரவழைத்து நீதி கேட்பதில் நிற்கிறது. சிக்கலான பிரச்சனை. சிர்கேஸிய பாணி கோழிக்கறியை அவர்களில் யார் யாருக்குச்…
குறுநாவல் பகல் பத்து ராப்பத்து அத்தியாயம் 3 ப்ரீதி குளித்துக் கொண்டிருந்த பொழுது டெலிபோன் ஒலித்தது. விக்ரம்… கோகுல் .. டெல்லியிலிருந்து பல்பீர் .. சீனாக்காரி அண்ணி.. பாத்டப்பிலிருந்து ஒரு கையை உயர்த்தி எடுக்க, ரிசீவர் தண்ணீரில் மிதந்தது. ‘மாதம் ஆறாயிரம் வாடகை… ஃப்ளாட்டில் ஃபோன், கீஸர் பாத்டப், மைக்ரோ அவன் என்று சகலமானதும் ரொப்பியிருக்கிறேன்.. ரெண்டு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் .. ஏதாவது ஒண்ணு நோக்காட்டில்…
அத்தியாயம் 2 ’பாஞ்ச் ரூப்யோ கோ தோ .. பாஞ்ச் கோ தோ ..’ சாந்தாபாய் யந்திரமாகக் கூவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் தவழும் கிருஷ்ணன். பொடிப்பொடியாகத் தரையில் விழுந்து கொண்டிருந்த கிருஷ்ணன் கோலத்தைச் சுற்றி விரையும் கால்கள். இது ஆபீஸ் போகிற கூட்டம். கொலாபாவும், நாரிமன் பாயிண்டும் இன்னும் சமுத்திரக் கரையை ஒட்டிய மகா உயரக் கட்டிடங்களுமே இவர்களின் காலை நேர லட்சியம். சாந்தாபாயும், கோலக் குழல் கிருஷ்ணனும், விக்டோரியா…