Archive For The “இது புதுசு” Category
பகல் பத்து ராப் பத்து – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1 முன்னுரையாகச் சில சொற்கள் – என் குறுநாவல்களில் மும்பாயைக் களனாகக் கொண்டது ‘பகல் பத்து ராப்பத்து’. 1990-களின் மத்தியில் மும்பை வங்கிக் கிளைகளில் கிளையண்ட் சர்வர் கம்ப்யூட்டிங்கில் யூனிக்ஸ் பிரதிஷ்டை செய்து சைபேஸ் டேட்டாபேஸ் கட்டி எழுப்புவது தொடங்கி நாங்களே உருவாக்கிய சி-மொழி அடிப்படையான மென்பொருளும், ஹப், டெர்மினல் கான்சண்ட்ரேட்டர் இன்னோரன்ன வன்பொருளும் சீராக நிறுவி வெற்றிகரமாக இயங்க…
விடிந்து கொண்டிருந்தது. கனவான்க்ள் அரை டிராயர் அணிந்து காலில் சராய்களோடு ரிங் ரோடில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அல்லது தலையில் கம்பளி முண்டாசும், கையில் கோலுமாகப் பால் வாங்கப் போய்க் கொண்டிருந்தார்கள். காக்கி நிக்கரும், கையில் குண்டாந்தடியுமாக மளிகைக் கடைக்காரர்களும் மற்றவர்களும் உடன்படாதவர்களை அடக்க வலிமை பெற உடற்பயிற்சி.செய்யப் போனார்கள். சௌத் எக்ஸ்டென்ஷன் வரை நடந்து வந்த பிறகு தான் கார் ஞாபகம் வந்தது. போக வேண்டும். போனால், திரும்பவும் சந்தேகமான போலீஸ்காரர்கள். கண்டிப்பான ஆஸ்பத்திரிப் பணியாளர்கள், பேரழகும்…
‘இந்தப் பாவாடை உங்கள் வீட்டிலிருந்து கீழே விழுந்து கிடந்தது’. பீகாரி உள்பாவாடையைச் செல்லமாகக் கையில் எடுத்துத் தவழ விட்டுக் கொண்டு படியேறி வருகிறான். ‘உங்களுடையதா?’ ‘பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது’ அவள் ஆமோதித்தாள். ‘எனக்கும் தான்’ என்கிறான் அவன். ரெண்டு பேரும் சிரிக்கிறார்கள். ‘குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?’ ‘உள்ளே வா’. படபடவென்று மோட்டார் சைக்கிள் பேயாக வந்து நிற்கப் போத்தி உள்ளே நுழைகிறான். ரயில் போகிற தாளத்தில்…
அத்தியாயம் 7 கடைசி இதழையும் உதிர்த்தாகி விட்டது. ஜவ்வந்திப் பூவின் காம்பு டியூப்லைட் வெளிச்சம் அப்பிய தெருவில் தெறித்து விழுந்தது. கொஞ்சம் தள்ளி இன்னும் நிறையப் பூ இரைந்து கிடந்தது. சேகரன் வருவதற்குள் அதையும் எடுத்து வந்து உதிர்த்துக் கொண்டிருக்கலாம். எதிரே சப் ஸ்டேஷனில் கூழாங்கல் பரப்பில் கம்பீரமாக நின்று டிரான்ஸ்பார்மர்கள் ஹூம்ம்ம் என்று பாடிக் கொண்டிருக்க, ஓடைப் பாலத்துச் சுவரில் போத்தி தனியாக உட்கார்ந்திருந்தான். வழியெல்லாம் பூ. அலங்காரமாக அணிந்து கொண்டு போனவன்…
அத்தியாயம் – 6 ஒரு டாக்டரும் இரண்டு நர்ஸ்களும் டாக்டாக் என்று அறைக்குள் நுழைந்தபோது போத்தியை உயிர்ப்பிக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. நிலைமை இப்போது என்னால் கட்டுபடுத்தக் கூடியதாக உள்ளது என்று தோன்றியது. சின்னப் போத்திக்கும் அப்படியே தோன்றியிருக்க வேண்டும் நாய்க்குட்டி போல, என் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தான். டாக்டர் எங்களை வெளியே போக உத்தரவிட்டு விட்டு சின்னக் கதவை மூடினார். நான் வெளியே மரபெஞ்சில் அம்ரந்து ஒரு சிகரெட்டை எடுக்க, உட்கார்ந்தபடிக்கே தூங்கிக் கொண்டிருந்த…
‘பக்கத்தில் போகாதே … ஷாக் அடிக்கும்’. சர்தார்ஜி என்னைப் பார்த்து அலறுகிறான். தரைக்குக் கீழே வரும் மின்சார வயரை பீகாரி எப்படியோ துண்டிக்க முற்பட்டு, மின்சாரம் தாக்கிக் கிடக்கிறான். யார் யாரோ ஸ்கூட்டர்களில் போய் யாரை எல்லாமோ அழைத்து வந்தார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. பீகாரி இறந்து போய் இரண்டு மணி நேரம் ஆகி விட்டது. லாஜ்வந்தி அலறும்போது விம்முகிற மாரிபில் பார்வை அசந்தர்ப்பமாகப் பதிகிறது. நிலைக்கிறது. மனமில்லாமல் பிய்த்துக் கொள்கிறது. வீட்டு சொந்தக்காரர்…