Archive For The “Yugamayini column” Category
நாவல் ‘தினை’ – அத்தியாயம் 3 திண்ணை.காம் இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து- நாவல் தினை – அத்தியாயம் மூன்று புலவன் அருகே வந்து புன்னகைத்தான். ’ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி பெற்ற பேரிலை பெறாதவர்க்கு’. ஏதோ ஓலையைப் பார்த்து வேகமாகப் படித்தான். “செய்யுள் வடிவான புறப்பாட்டு என்று புதியதாக வரப்போகிற பாக்களின் பெரிய தொகுப்பில் சேர்க்கக் கூல வாணிகரும் அந்தணப் புலவரும் கேட்டபடி இருக்கிறார்கள். தரமான குறிஞ்சித் திணைப் பாடல்கள் கணிசமாகத் தேறவில்லையாம். இந்தப் பாடல்…
நேற்று ராத்திரி நான் தான் ஏரிக்குக் காவல் சக்கரவர்த்தினியம்மா. எப்பவுமே நான் தான். என்னை ஏரிக்காவல் கந்தய்யான்னு கூப்பிடுவாங்க. நாற்பது வருஷமா காவல் இருக்கேன். ஆனா நேற்று ராத்திரி எப்படியோ அசந்துட்டேன். ஏரிக்குள்ளே எங்கே இருந்துன்னு இவங்களுக்கு தெரியாம நீர்வரத்து ஏறிட்டிருந்திருக்கு. இன்னும் அரை மணி நேரம் அப்படியே விட்டிருந்தா ஏரி உடைஞ்சிருக்கும். தொண்டை கமற நிறுத்தி, தொடர்கிறார் கந்தய்யா. நடுராத்திரிக்கு பூ வாடை. கண்ணைத் திறந்தா அம்பாள் கொண்டை போட்டு சித்தாடை கட்டிக்கிட்டு காலில் தண்டையும்…
ப்ளாஸ்க் எங்கே? இங்கே என்று ரயிலில் எங்கள் கம்பார்ட்மெண்டில் வந்த நாலு சிப்பாய்களில் தமிழ் பேசும் ராணுவக்காரன் என் ப்ளாஸ்கை நீட்டினான். “நாங்க கடைசியா இறங்கறபோது பார்த்தோம்… சீட் ஓரமா கிடந்துது.. சரி எப்படியாவது பார்த்து கொடுத்திடலாம்னு எடுத்து வந்தேன்” நான் சொன்ன நன்றியை அப்புறம் ஒருநாள் சாவகாசமாக வாங்கிக்கறேன் என்பது போல் சிரித்தபடி கையசைத்துப் போனான் அவன். அவர். “போகலாமா பீமா. ட்ரைவர் எங்கே போனாரு?” கெத்தாக கார் உள்ளே உட்கார்ந்தேன். “நான் தான் ட்ரைவர்”…
”தீபாவளிக்கு துணி எடுக்க லோன் வாங்க, இருபதம்சத் திட்டத்திலே எந்த அம்சம் சரிப்படும்?” நிருபர் அக்கறையாக விசாரித்தார். “அது ஐந்தம்சத் திட்டத்திலே இல்லே வரும்? குடும்பக் கட்டுப்பாடு”. கேஷியர் கருப்பையா சீரியஸாகச் சொன்னார். “குடும்பத்தைக் கட்டுப்படுத்தினா, லோனே தேவை இல்லையே”, என்றார் மேனேஜர். எமர்ஜென்சி அறிவித்தபின் வரும் இரண்டாவது தீபாவளி இது. சின்னக் கரடி என்று பெயர் கொண்ட சிங்கம்புலி சைக்கிளில் வந்து பேங்க் எதிரே கால் ஊன்றி நின்றபடி மெகஃபோனில் கூவினார்: “வங்கிகள் வாங்கிகளாக இருக்கக்…
நான் எழுதிய அரசூர் நான்கு நாவல் வரிசையில் (அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே) இரண்டாம் நாவல் விஸ்வரூபம் பற்றி இணையத்தில் நண்பர் வித்யா ஆனந்த் எழுதியிருப்பதும், என் குறிப்புகளும். வித்யா ஆனந்த் ————— காலத்தை நேர்கோடாகவே பார்த்துப் பழகிய நமக்கு அதை சிதறிய துணுக்குகளாகக் காட்டி ஒரு வித்தியாசமான விருந்து படைக்கிறது இரா முருகன் EraMurukan Ramasami அவர்கள் எழுதியுள்ள விஸ்வரூபம். இந்தக் கதையின் prequel அரசூர் வம்சம் படித்துவிட்டு இதைப் படித்தால்…
18 அக்டோபர் 2018 வியாழக்கிழமை அரசூர் வம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு 2008-ல் வெளியாகி, அந்த ஆண்டின் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது. பத்தாண்டுகள் கழித்து, அரசூர் நாவல்களில் இரண்டாவதான ‘விஸ்வரூபம்’ ஆங்கில மொழியாக்கத்தை, சரஸ்வதி பூஜை தினமான இன்று தொடங்கி இருக்கிறேன். மற்ற எழுத்தாக்கங்களும் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கின்றன. வாணியைச் சரண் புகுந்தேன் – அருள் வாக்களிப்பாள் எனத் திடமிகுந்தேன் பேணிய பெருந்தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள். சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்