Archive For The “Yugamayini column” Category
குமரேசனைக் காணவில்லை. இரண்டு நாளாக குமரேசன் சிகையலங்கார நிலையம் பூட்டு வைத்திருக்கிறது. நாலு நாள் பஞ்சு மிட்டாய்த் தாடியைத் தடவியபடி நிற்கிற கோவாப்பரேட்டிவ் சொசைட்டி பிரசிடெண்ட் காளைலிங்கமும், முக்கால் வழுக்கைத் தலையில் மீதி பயிர்செய்த பூமியில் அரை மில்லிமீட்டர் வளர்ந்த அதீத முடியால் அசௌகரியம் கொண்ட ராமுடு வாத்தியாரும், ஒட்ட வெட்டிவரும்படி கட்டளையிடப்பட்டு காசும் வெறுப்புமாக ஒதுங்கும் சின்னப் பசங்களுமாக குமரேசன் கடைக்கு வெளியே கல் படியில் உட்கார்ந்து காத்திருந்து திரும்பிப் போகிறார்கள். இந்தத் தகவலை நான்…
என் வாசகர்களும் நானும் இரா.முருகன் என் புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்த ஒரு வாசகர் சொன்னார், ‘ரெண்டு நாளா இந்த புத்தக வேலையிலே தான் இருந்தேன்’. பதிப்பாளரின் அலுவலகத்தில் அவரைப் பார்த்த நினைவு இல்லாததால், ‘என்ன மாதிரி வேலை?” என்று கேட்டேன். ‘இது வாராவாரம் திண்ணை பத்திரிகையோட இண்டர்நெட் தளத்திலே வந்துச்சு இல்லே? நூற்று நாலு அத்தியாயமும் தேடி எடுத்து அதே ஆர்டர்லே கட் அண்ட் பேஸ்ட் செஞ்சு எம்.எஸ் வேர்ட் ஃபைல் ஓப்பன் பண்ணி சேர்த்து…
New Novel ‘1975’ -“சார் ஜாதி இல்லேன்னாலும் அடையாளத்துக்காகச் சொல்றேன். நான் போத்தி. அவர் நாயர். எப்படி எனக்கு அவர் மாமா ஆக முடியும்?”
By Era Murukan |
Excerpt from the novel 1975 மதியம் சாப்பிடப் போகும்போது மேனேஜர் சொன்னார், “நாட்டுச் செக்கு, தறிமேடை, தேனி வளர்ப்பு, எது வேணும் உங்களுக்குன்னு ரீஜனல் ஆபீசிலே கேட்கறாங்க. நாம ஜில்லாவுக்கு லீட் பேங்க். மத்த பேங்க்களையும் முடுக்கி விட்டு லோன் கொடுக்க வைக்கற கடமை நமக்குண்டு. முதல் ஈட்டுலே எதை எடுத்துக்கலாம்னு நினைச்சுப் பார்த்தேன். ஒண்ணும் புரிபடலே”. “தேனி வளர்ப்பு என்னன்னு பார்க்கலாமே முதல்லே”, நான் மேலே பேசுவதற்குள் அக்கவுண்டெண்ட் சொன்னார், “கேளு நாயர் அப்ளிகேஷன்…
New Novel ‘1975’ : எமர்ஜென்சி பற்றி நெகட்டிவ் ஆகச் சொல்கிறார். பக்கத்தில் நின்றாலே ஆபத்து. விலகி நின்றேன்
By Era Murukan |
மூன்று மணிக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது, “உள்ளம் உருகுதையா” என்று கோவிலில் மார்கழி மாதத்துக் காலையில் பாடுவது போல் லவுட்ஸ்பீக்கர் பாடிக் கொண்டிருந்தது. “இருபது அம்சத் திட்டம்”, என்று எழுதி இருந்த துணி பேனர்களை கதர் உடுத்த சிலர் மேடைக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டிருந்தனர். உள்ளூர் ரெவின்யூ தாசில்தாரும், அவர் ஆபீஸ் கூட்டமும் என்று மேனேஜர் சொன்னார். தாசில்தாரும், கலெக்டரும் பொதுக்கூட்டத்துக்கு பேனர் கட்டி, சவுண்ட் டெஸ்டிங் ஒன் டு த்ரீ என்று ஒலிபெருக்கி, மைக் டெஸ்ட்…
New Novel ‘1975’ – தேவகோட்டையில் புரட்சி வணக்கம் கெட்ட வார்த்தை, கெட்ட செயலுக்குத் தொடக்கமோ என்னமோ
By Era Murukan |
Excerpt from my novel ‘1975’, being written : “ஸ்வீப்பரம்மா போய் சூடா ரெண்டு டீ மாயளகு கடையிலே வாங்கிட்டு வந்துடுங்க. அப்படியே ஒரு பாக்கெட் பிஸ்கட்டும். சார்ஜஸ் போட்டுத் தரேன்னு சொல்லுங்க”. ஸ்வீப்பரம்மா விளக்குமாறைத் தூக்கியபடி ஒரு வினாடி நின்றார். “இன்னொரு டீ சாருக்கு. நேத்து புதுசா வந்திருக்கார்” என்று அவருடைய புரிந்து கொள்வதற்காகச் சொன்னார் பழநி. “அவரையும் தெரியும்,, அவங்க அப்பனையும் தெரியும், எனக்கு தம்பி முறைதான் இவங்கப்பன். இவனுக்குப் பொறந்து ரெண்டு…
New Novel : 1975 :Excerpts இப்போதெல்லாம் ஒரு கைக்குட்டை வாங்கணும் என்றால் கூட பஸ் பிடித்து மதுரை போகிற கூட்டம் ஊரில் கூடிப் போயிருக்கிறது
By Era Murukan |
“ஒரே நாள்லே ரெண்டு செண்டிமீட்டர் வளர்றது தலைமுடி” என்றார். அவர் கண்கள் பயத்தில் வெறித்து ஒரு வினாடி இருந்து சகஜ நிலைக்குத் திரும்பின. “நல்லது தானே” என்றேன் சமாதானமாக. “நிச்சயமா இல்லே. ஒரு நாளுக்கு ரெண்டு செண்டிமீட்டர். ஒரு வாரத்திலே பந்த்ரெண்டு”. பதினாலு இல்லையோ. ஞாயிற்றுக்கிழமை முடி வளராதோ. ஒரு மாசத்துலே ஐம்பது செண்டிமீட்டர் என்றார் அவர். திரும்ப கணக்கு பிசகு. இருந்தாலும் உண்மை. நிலைமையின் பயங்கரம் எனக்கு அப்போது உறைத்தது. இன்னும் ஒரு மாதம் போனால்…