Archive For The “Yugamayini column” Category
Puthagan – New Short story : Era.Murukan – Published in Theeranadhi August 2017 (தீராநதி ஆகஸ்ட் 2017 இதழில் பிரசுரமானது) நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நூல்நிலைய வாசலில் சிறகுகள் இறைந்து கிடந்தன. நூலகத்தை ஒட்டியிருந்த வீட்டில் ஒரு பெண்குரல் பக்திப் பாடல் ஒன்றை சினிமா மெட்டில் பாட, ஏழெட்டுக் குழந்தைக் குரல்கள் ஒவ்வொரு அடியாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன. நூலகக் கதவு அடைத்திருந்தது. ‘நகரசபை உறுப்பினர்கள் வந்து விட்டார்கள்’. எங்களைப் பார்த்து வழியோடு…
மலையாள நாவல் மொழிபெயர்ப்பு இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. இன்று மொழியாக்கியதின் ஒரு சிறு பகுதி : நஜீப் தன் சகோதரி ஸைனபாவோடு குந்தன் ம்யூசிக் க்ளப் உள்ளே வந்தார் அவர் தரையில் உட்கார்ந்து தபலா வாசிக்கத் தொடங்கினார். கில்பர்ட் சொன்னார் : “அந்த பாபுல் மோரா கொஞ்சம் பாடு. ஜெசிகாவுக்கு கேட்கணுமாம்”. “அய்யோ, நான் போகணும். ட்யூஷனுக்கு நேரமாச்சு” என்றேன். “ஏன் ட்யூஷனுக்கு லேட்?” என்று கேட்டார் புஷ்பாங்கதன்மாஸ்டர். பெர்மாட்டுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு தடையாக…
கட்சி உடைஞ்சா மற்றதை எல்லாம் பங்கு வச்சுப் பிரிச்சுக்கிட்ட மாதிரி உயிர் கொடுத்த தியாகிகளையும் பாகப் பிரிவினை செஞ்சுக்க வேணாமா
By Era Murukan |
(இன்று மொழிபெயர்த்ததில் ஒரு சிறு பகுதி) போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் புத்தகக்கடையை விட்டுப் புறப்பட்டார் ராகவன். ஆஸ்பத்திரி வீதியில் ‘ஹோட்டல் டெர்மினஸ்’ உள்ளே வைத்திருந்த மதுக்கடைக்கு நடந்தார் அவர். இருட்டும் வரை அங்கே குடித்துக் கொண்டிருந்தார். படகுத்துறைக்குத் திரும்ப நடக்கும்போது யாரோ அவரை ஆஸ்பத்திரிக்கு முன்னால் தடுத்து நிறுத்திக் கேட்டார்கள் : “ஒரு பாசிங்ஷோ சிகரெட் இருக்குமா?”. “ஷெனாய் தோழர்”, ராகவன்மாஸ்டர் ஷெனாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். ஷெனாய் மௌனமாக நின்றார். ராகவன் அவரைக்…
வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு லந்தன்பத்தேரியிலும், போஞ்ஞிக்கரையிலும், ராகவன்மாஸ்டர் மட்டுமே அனுதாபியாக இருந்திருக்க வேண்டும். கட்சியில் பிளவு ஏற்பட்ட நாட்களில், இடது கம்யூனிஸ்ட்கள் ராகவன்மாஸ்டரை எங்கே பார்த்தாலும் கேலி செய்தார்கள். அவர் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போகும்போது இடதுசாரிகள் மலாக்கா ஹௌஸ் மாடியிலிருந்து கேட்பார்கள் : “என்ன ராகவன் மாஸ்டரே, ஒருநபர் ஊர்வலம் நடத்தறீங்க போல?”. ஒரு முறை போனிபோஸ் பாலத்தின் முனையில் வைத்து ராகவன்மாஸ்டரை கட்சி உள்ளூர்ச் செயலாளர் ஜோசப் கேட்டார்: “மாஸ்டரே, என்ன இப்படி தனியா நடந்தபடி…
இன்று மொழிபெயர்த்ததில் ஒரு சிறிய பகுதி 1964 ஏப்ரல் மாதத்தில் ஒரு ராத்திரி, படகுப் போக்குவரத்து அன்றைய சேவை முடிந்ததற்குப் பிறகு, அரண்மனைப் படகுத்துறைக்கு ஒரு படகு வந்தது. கேரள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் மக்கள் மனம் கவர்ந்தவராக இருந்த ஏ.கே.ஜி என்று விளிக்கப்பட்ட ஏ.கே.கோபாலன் படகு விட்டு இறங்கி மலாகா ஹௌஸுக்கு நடந்தார். பங்குனி மாதத்தின் அதிகமான வெப்பம் காரணமாக லந்தன்பத்தேரிவாசிகள் ராத்திரி நேரம் சென்றே உறங்க இருந்தார்கள். அவர்கள் உறங்குவதற்கு முன் வழக்கமாகச் சொல்லும்…
(இன்று மொழிபெயர்த்ததில் ஒரு சிறு பகுதி) ”புனித லௌரந்தியோஸே” “எங்களுக்காக மன்றாட வேணுமே” ”புனித வினிசந்தியோஸே” “எங்களுக்காக மன்றாட வேணுமே” ”புனித கீவர்க்கியோஸே” “எங்களுக்காக மன்றாட வேணுமே” ”பலியானோஸ், செபஸ்தியானோஸ் என்ற புனிதர்களே” “எங்களுக்காக மன்றாட வேணுமே” ”குஸுமோஸும், தமனியோஸுமான புனிதர்களே” “எங்களுக்காக மன்றாட வேணுமே கவர்தீஸும் ப்ரோத்தாதீஸும் ஆகிய புனிதர்களே” “எங்களுக்காக மன்றாட வேணுமே” ”சில்வஸ்த்ரோஸும் க்ரிகோரியஸுமான புனிதர்களே” “எங்களுக்காக மன்றாட வேணுமே” ”இவானிமோஸும் அம்ப்ரோசிஸுமான புனிதர்களே” “எங்களுக்காக மன்றாட வேணுமே” (குட்டி, நீ போடற…