Archive For The “Yugamayini column” Category
லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள் (என்.எஸ்.மாதவன்) மலையாள நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு (இரா.முருகன்) – இன்று மொழியாக்கிய ஒரு சிறு பகுதி ”மரியா, வா. உன்னைப் பலதடவை தொட்ட இந்தக் கை இன்னொரு முறை உன்னைத் தொடட்டும்”. “நீங்க யாரு?”, அப்பன் கேட்டார். அப்போது சந்தியாகுசேட்டனும், அவர் கூட டாட்டா கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பர்களும், சேவியரும் வந்து சேர்ந்தார்கள். “கோட்டும், பாபாஸ் ஷூவும் மாட்டி, கையிலே வெள்ளைப் பிரம்போட வந்திருக்கற பேண்ட் மாஸ்டர் யார், வல்ய ஆசாரி?”. “எங்களுக்கு…
இரா. முருகனின் புதிய சிறுகதைத் தொகுப்பு / நண்டு மரம் இரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழுத்தாளருக்குரியது. சிறந்த வாசகனைக் கோரி நிற்பது. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. சில கதைகள் ஓர் எழுத்தாளன் சோதனை செய்து…
லந்தன்பத்தேரிக்கு போர்த்துகீஸ் கக்கூஸ் வந்து ஏறக்குறைய இரண்டரை நூற்றாண்டு கடந்திருந்தது என்றாலும் லந்தன்பத்தேரிவாசிகள் அண்மைக்காலம் வரை, அதிகாலையில், கிழக்கே ஆற்றில் முதல் படகு ஓடுவதற்கு முன்பு, பரங்கி ஜபக்கூடத்தின் அருகில் சர்ச்சுக்கு சொந்தமான நிலத்தில் தான் காலைக்கடன் கழித்து வந்தார்கள். சுகாதாரத்தில் அக்கறை கொண்டவரும், தண்ணீர்ப் பிசாசு பிடித்து அடிக்கடி கை கழுவுகிறவருமான பிலாத்தோஸ் பாதிரியார் போஞ்ஞிக்கரை திருச்சபைக்கு உத்தியோக மாற்றத்தில் வந்ததும் அந்த நிலத்தில் ஒரு அறிவிப்பு வைக்கப்பட்டது : “இங்கே சிறுநீர், மலம் கழிக்கக்…
நண்டு மரம் – முன்னுரை இது என் பத்தாவது சிறுகதைத் தொகுப்பு. சிறுகதையிலும் குறுநாவலில் மும்முரமாக இயங்கிய 1990-களுக்கு அப்புறம் நாவலில் கவனம் குவிந்த கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவையெல்லாம். அனேகமாக எல்லாக் கதைகளுமே பத்திரிகைகள் கேட்டு வாங்கிப் பிரசுரித்தவை. இந்தப் பத்திரிகைகளில் இலக்கியச் சிற்றிதழ்களும், பெரும் வணிக இதழ்களும் அடங்கும். வடிவத்தில் சோதனை நிகழ்த்தப்பட்ட கதைகளோடு கதானுபவத்தையும், கதை சொல்வதில் உண்டாகும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதற்கென எழுந்த கதைகளும் இதிலுண்டு. வேகமாக நகரும்…
Snippet of translation from the Malayalam novel #Lanthan_Batheriyile_Luthiniyakal by Mr.N.S.Madhavan (Expected date of completion :10th August 2917) வெய்யில் ஏறத் தொடங்கியபோது ஒன்பதாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் படித்த எங்களை விட மூத்த மாணவர்கள் ‘விமோசன சமரம் ஜிந்தாபாத்’, ‘கம்யூனிஸ்ட் சர்க்கார் முர்தாபாத்’ போன்ற முழக்கங்களோடு மல்லாந்து தெருவில் படுத்துக் கொண்டார்கள். பள்ளிக்கூட மணி முழங்கி அன்றைக்குப் பள்ளிக்கூட நேரம் முடிந்ததாக அறிவித்தது. எல்லா மாணவர்களும் தெருவில் முழக்கமிட்டுப் படுத்திருப்பவர்களைப் பார்த்தபடி…
Snippet of translation from Lanthan Batheriyile Luthiniyakal (Malayalam) – The work is 60% completed as of now லாரன்ஸ் பள்ளத்து எங்களைப் பயமுறுத்தத் தொடங்கினார். நரகம் பற்றிய நடுங்க வைக்கும் வாக்குகளை ராத்திரி நேரத்தில் எடுத்துச் சொல்லும் பிரசாரகர் போல அவர் உரக்கக் குரல் கொடுத்தார் : “காது கொடுத்துக் கேளுங்கள். சிவப்புக் குதிரையின் காலடிச் சத்தம் இடி முழக்கம் போல் கேட்கவில்லையா? சாத்தானின் உலா தொடங்கி இருக்கிறது. முன்னால் கட்டி…