Archive For The “Yugamayini column” Category
snippet of the translation #Lanthan_Bathery of Mr N.S.Madhavan காந்திஜியோட பிரசங்கத்தை கேட்க, அரை மைல் நீளமும், கால் மைல் அகலமுமா பெருங்கூட்டம் கூடும். கொச்சியிலே இருந்த இங்கிலீஷ்காரங்களுக்கு அது பிடிக்கலே. இடுப்புக்கு மேலே துணி உடுத்தாதவர், நம்ம பங்களாவிலே வேலைக்காரனாக் கூட இருக்க தகுதியில்லாதவர் இந்த காந்தி. இப்படியே போனா, இந்தியாவைக் கைகழுவ வேண்டியதுதான். சின்ன வயசு இங்கிலீஷ்காரன், அவன் ஒரு ஏரோப்ளேன் பைலட், அவன் சொன்னான் : நல்லா பார்த்துக்குங்க. இந்த காந்திங்கற…
Snippet from the translation I’m doing currently #Lanthan_Bathery மறுநாள் மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ், ஸ்டாலின் ஆகியவர்களின் நீலம் கலந்த பச்சை வர்ணம் அடர்ந்த, ரஷ்யாவில் அச்சடித்த எண்ணெய்ச்சாயப் படங்களை ஷெனாய், எரணாகுளத்தில் இருந்து கொண்டு வந்தார். இந்தப் படங்களில் ஸ்டாலினுடைய படம் எல்லோரையும் பயமுறுத்தத் தொடங்கியது. பெரிய மீசையைப் பார்த்து ஏற்பட்ட பயம் இல்லை அது. உயிர்த்து, உற்று நோக்கும் கண்கள் ஏற்படுத்திய பயம். ஸ்டாலினிடமிருந்து தப்பி ஒளிந்து கொள்ள முடியாது. எங்கே போய்…
நாள் தெருவுக்கு இணைகோடாக முதுகு வளைந்து வீடுதோறும் ஆவின் வழங்கும் முதுபெண்ணும் நிறம் கொண்டு முகமெழுதிய திருஷ்டிப் பூசணியும் கறிவைக்க அடர்சாம்பல் படர்ந்த வெறும் காய்களும் அடுத்தடுத்து அடுக்கிய நடைபாதைக் கடையில் விலை குறித்து விசாரமோ வாங்க வந்தது எதுவென மறந்தோ, பார்த்து நிற்கும் புது ஸ்கூட்டர்காரரும் பூங்கா சுற்றி நடை இடமிருந்து வலமா வலமிருந்து இடமா முடிவுக்கு வராத முன்னாள் நடிகையும் காலி சவப்பெட்டியோடு மடடார் வேன் நிறுத்தி கையில் காகிதம் பார்த்து டீக்கடையில் விசாரிப்பவனும்…
A snippet from the Malayalam novel I’m currently translating – Lanthan Bathery பிலாத்தோஸ் பாதிரியார் கேட்டார் : “குழந்தைக்கு வைக்கப் போகிற பேர் என்னன்னு தீர்மானம் செஞ்சிருக்கீங்களா?” “ஜெஸிகா”, என்றாள் விக்கி பெரியம்மா. “அந்தப் பெயர்லே ஒரு புனிதர் உண்டா?”, கோவில் பணிக்கார ஆண்டனி கேட்டான். எட்வின்சேட்டனும் விக்கி பெரியம்மாவும் என் அப்பனைப் பார்த்தார்கள். ஜெஸிகா என்ற பெயருக்கு ஒரு நீண்ட சரித்திரம் இருக்கிறது. என் அம்மாவின் குழந்தைப் பருவத்தின்போது, அவளுடைய அம்மாவான…
மலாக்கா ஹௌஸின் முதல் மாடியில் இருக்கும் முதலாவது அறையைத் திறந்துகொண்டு ராகவன் சொன்னார்: “இது தான் ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு ஆபீஸ். தோழர் இங்கே படுத்து உறங்கலாம்”. சொல்லியபடி, அவர் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றினார். “ஏன் இங்கே முழுக்க மர பெஞ்சு போட்டு வச்சிருக்கு?” என்று ஷெனாய் கேட்டார். “சமயத்துலே மூணு நாலு பேருக்குப் புகலிடம் கொடுக்க வேண்டிப் போகும். அதனாலே தான்” ”இங்கே உள்ளூர்க்காரங்க யாரும் வரமாட்டாங்களா?” “வர்ற வழக்கமில்லே. கட்சியை தடை செஞ்சதாலே…
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும், திரு.என்.எஸ்.மாதவன் எழுதிய ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி மசாலாப்பொடியை எட்வின்சேட்டன் நகமுனையால் அளந்து, வெந்த இறைச்சி மேல் தூவினார். அதன் மேல் மூன்றில் ஒருபாகம் சோற்றைப் பரப்பினார். தண்ணீர் விட்டுக் கரைத்திருந்த மஞ்சள்பொடியை அவர் சோற்றின் மேல் தெளித்தார். அதன் மேல் எட்வின்சேட்டன் இன்னொரு மெல்லிய அடுக்கு சோற்றைப் பரப்பினார். அதன்மேல், வறுத்த முந்திரிப் பருப்பும், உலர்ந்த திராட்சையும், வெங்காயமும். இன்னொரு நகக்கண் அளவு மசாலாப்பொடி. மேலே, இன்னொரு…