Archive For The “Yugamayini column” Category
வெளிவர இருக்கும் என் நாவல் ‘1975’ – ஒரு சிறு பகுதி ஆகஸ்டில் பின்னணிப் பாடகர் முகேஷ் இறந்ததற்காகத் துக்கம் அனுஷ்டித்தார்கள். செப்டம்பரில், மராத்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பில் தமிழர்களிடையே பிரபலமானவருமான வி.எஸ்,கண்டேகர் மறைவுக்கு அடுத்த துக்கம் காத்தார்கள். இதெல்லாம் ஒரு சாக்கு தான் என்றும் அவர்கள் துக்கம் கொண்டாடியது இன்னும் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் எமர்ஜென்சிக்காகத்தான் என்றும் அவர்கள் அவ்வப்போது அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு காதில் கிசுகிசுப்பார்கள். காண்டேகர் துக்க தினக் கூட்டம் என்று அறிவித்து…
பின்கதையில் இருந்து சங்கரன் போத்தி 1990 டிசம்பர் வரை டெல்லியில் வங்கி அதிகாரியாகப் பதவி வகித்தான். மே 1977-ல் சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டான். பாயல் மேல் அவன் வைத்த பொருந்தாத மையல் சற்றே அடங்க, அவனுடைய கல்யாணம் ஜூன் 1977-ல் நடந்தேறியது. அதன் பிறகு உலகம் எப்படிப் போகிறது என்பதில் அவ்வளவாகச் சிரத்தை இல்லாத இல்லறத்தானாக புதுடில்லி லாஜ்பத் நகரிலும், கிரேட்டர் கைலாஷிலும் யமுனா நதிக்கரையில் மயூர் விஹாரிலும் இரண்டு அறை அபார்ட்மெண்ட்களில் அடுத்த பதின்மூன்று வருடம்…
ஊரில் ரெட்டைத் தெருவுக்கு ஒரு முகம் உண்டு. கிழடு தட்டிக் கொண்டிருக்கும் அந்த முகம் தலையில் டர்பன் கட்டியிருக்கும். கொஞ்சம் சிடுசிடுவென்று இருக்கும். இங்கிலீஷ் சரளமாகப் புரண்டு வரும் நாக்கு. லா பாயிண்ட்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லக்கூடிய மூளையும் டர்பனுக்கு உள்ளே உண்டு. ஊர்ப் பிரமுகர்களில் முக்கால்வாசிப்பேர் டர்பன் கட்டிய ரெட்டைத் தெரு வக்கீல்கள். சமயத்தில் பந்து வக்கீல் ஆபீசுக்குள் புகுந்துவிடும். டர்பன் கட்டிய வக்கீல்களின் ஆபீசில் படியேறிப் பந்தைக் கேட்டால் இங்கிலீஷில் பாய்ந்து வரும்…
New : நாவல் 1975 : என்னைத் தவிர யாரும் கதை நான்லீனியராக நகர்வதை லட்சியம் செய்யவில்லை என்பதை உணர்ந்த கணத்தில்
By Era Murukan |
நான் எழுதி வரும் (நிறைவு செய்து கொண்டிருக்கும்) நாவல் 1975-இல் இருந்து சில பகுதிகள் ஹோலியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்திருக்கிறது. மார்ச் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இது. தெருவில் தெரிந்தவர்களும் பரிச்சயமில்லாதவர்களும் வண்ணப்பொடி கலந்த தண்ணீரை எதிர்ப்படுகிறவர்கள் மேலெல்லாம் அடித்து விளையாடும் நாள். குளிர் இந்தத் தினத்தோடு விடைபெறும். #1975_நாவல் குளிரோடு எமர்ஜென்சியும் கூடவே இந்திரா காந்தி அரசும் விடைபெற்றுப் போகப்போவதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. எமர்ஜென்சி ஒழிந்து போகிறது என்ற மகிழ்ச்சி அத்தனை முகங்களிலும்…
தினமும் நான் நண்பர் கிரேசி மோகனுக்கு ஒரு வெண்பா அனுப்புவேன். அவர் அதற்குப் பதில் வெண்பா அனுப்புவார். அவர் அனுப்பி நான் பதில் அனுப்புவதும் உண்டு. வெண்பாவை அனுப்பும்போது வழக்கமாக முடிப்பது, ‘The ball is in your court’. கடந்த சில நாட்களில் அனுப்பிப் பெற்ற வெண்பாக்கள் இவை. பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில…
பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே என்று தொடங்கும் பிரார்த்தனையையும் ஓதிய பிறகு, மண்டியிட்டிருந்த என் தலைதொட்டப்பனாகும் எட்வின்சேட்டனையும், தலைதொட்டம்மாவாகும் விக்டோரியா பெரியம்மாவையும் பிலாத்தோஸ் பாதிரியார் கேட்டார் : “குழந்தைக்கு என்ன பெயர் வைக்கணும்னு தீர்மானம் செஞ்சிருக்கீங்களா?” “ஜெசிக்கா”, என்றாள் விக்கி பெரியம்மா. “அந்தப் பெயர்லே ஒரு புனிதர் உண்டா?”, கோவில்பிள்ளை ஆண்டனி கேட்டார். எட்வின்சேட்டனும் விக்கி பெரியம்மாவும் என் அப்பனைப் பார்த்தார்கள். ஜெசிக்கா என்ற பெயருக்கு ஒரு நீண்ட சரித்திரம் இருக்கிறது. என் அம்மாவின் குழந்தைப் பருவத்தின்போது, அவளுடைய…