Archive For டிசம்பர் 27, 2004
முன்னுரைகளின் முகவுரை இரா.முருகன் எஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து நிற்கவே ஏகப்பட்ட பிரயத்தனம்…
யாசுநாரி காவாபாத்தா எலும்பும் தோலுமாக ஓர் அமெரிக்க ராணுவ வீரன். சிறைப் பிடித்து வைக்கப்பட்டவன். அவனை வளைத்துப் பிடித்த எதிரிகள் குரூரமானவர்கள். ஒரு நாளைக்குப் பதினாலு மணி நேரத்துக்கு மேல் அடிமை போல் இடுப்பொடிய வேலை செய்ய வைக்கிறார்கள். அடர்ந்த வனாந்தரங்கள், மலைச்சரிவுகள் வழியே ரயில் பாதை அமைக்கிற வேலை. உழைப்புக்கு ஊதியம் கிடையாது என்பதோடு அப்படி மாடு மாதிரி உழைக்க உடம்பில் சக்தி இருக்கச் சாப்பாடும் சரியாகப் போடுவதில்லை. பசியால் சோர்ந்து போய் வேலை…