Archive For மே 1, 2005
ஹரிவராசனம் எப்போது துவங்கியது? தேசாபிமானி இதழில் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு இது) நான் ரசித்த கட்டுரை – சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரவு பதினொன்று மணிக்கு நடை அடைப்பது, கானகந்தர்வன் ஏசுதாஸ் பாடிய ஹரிவராஸனம் பாடலோடுதான். பகவான் அய்யப்பனுக்கும், அய்யப்ப பக்தர்களுக்குமான தாலாட்டு போன்றது இப்பாடலை இசைப்பது சபரிமலையில் பல ஆண்டுகளாகத் தொடரும் பழக்கமாக உள்ளது. ஹரிவராஸனம் எப்படி சபரிமலைக்கு வந்து சேர்ந்தது? ஐம்பது வருடம் முன்னால் சபரிமலை சந்நிதானத்தில் மேல்சாந்தியாக இருந்த…
அதிக வேகத்தோடு பேசப்படுவதால், முதல் சொல்லின் கடைசிச் சீரும், அடுத்த சொல்லின் முதல் சீரும் குழம்பி ஒலிப்பது இந்தப் பேச்சில் முக்கியமானது. அது தவிர சில பிரயோகங்கள் – அஸ்ஸலாயி, கேமனாயி (நல்லாயிருக்கு), ஸ்ஸி (கொஞ்சம்), ‘ன்னிட்டு’ (என்றால்) – இந்தப் பேச்சுமொழிக்குத் தனித்துவம் கொடுப்பவை. ஒரு நம்பூதிரி பலிதம் (பொழுதுபோக்கு கதை) அந்தப் பேச்சு வழக்கிலேயே.