Archive For டிசம்பர் 9, 2008
சுஜாதாவுக்கு அஞ்சலி – 1 விகடனில் சுஜாதாவின் ‘பத்ரிநாத் யாத்திரை’ மறுபிரசுரமான கட்டுரை படித்தேன். ஒரே ஒரு சுஜாதாதான். ஏறக்குறைய இல்லை, முழுக்க முழுக்க ஜீனியஸ். சுஜாதாவுக்கு அஞ்சலியாக என் கேரளப் பயணக் கதை மறுபிரசுரம் இங்கே. இரா.முருகன் 9 திசம்பர் 2008 888888888888888888888888 கேரளா டயரி எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 1 அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ்…
சுஜாதாவுக்கு அஞ்சலி – 2 விகடனில் சுஜாதாவின் ‘பத்ரிநாத் யாத்திரை’ மறுபிரசுரமான கட்டுரை படித்தேன். ஒரே ஒரு சுஜாதாதான். ஏறக்குறைய இல்லை, முழுக்க முழுக்க ஜீனியஸ். சுஜாதாவுக்கு அஞ்சலியாக என் கும்பகோணப் பயணக் கதை மறுபிரசுரம் இங்கே. இரா.முருகன் 9 திசம்பர் 2008 888888888888888888888888888888888 ஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி நேரம் – நாலு கோவில் வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத்…
‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் – ஒன்பது இன்றைக்கு துலா மாசத்து சஷ்டி. அப்பா திதி. விஷ்ராந்தி போயிருந்தேன். பாலவாக்கம் மாதாகோவிலோடு திரும்பிக் கடற்கரையை நோக்கிப் போகும்போது உள்ளொடுங்கி இருக்கிற கட்டிடம் விஷ்ராந்தி. நிராதரவான முதியவர்களுக்கான காப்பகம். அம்மாவும் பாட்டித் தள்ளையுமாக வயசான பெண்களுக்கு மட்டுமான அந்த விடுதிக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை போகிற வழக்கம். அங்கே ஒவ்வொருவரோடும் கொஞ்சம் பேசி, சாப்பிடும்போது பரிமாறி, இலையில் அல்லது ஏந்திய கையில் இனிப்பையோ பழத்தையோ…
Kungumam column – அற்ப விஷயம் -18 தினப் பத்திரிகைகளின் ஞாயிற்றுக்கிழமை இணைப்புகள் சுவாரசியமானவை. தெரிந்த மொழியில் எல்லாம் பத்திரிகை படிக்கிற பழக்கம் இருந்தால், இப்படி வந்து விழுந்த, அச்சடித்த காகிதம் அனைத்தையும் படித்து முடிப்பதற்குள் விடிந்துபோகும். அடுத்த நாள் பத்திரிகை வாசலுக்கு வந்துவிடும். போனவாரம் நேரத்தோடு மல்லுக்கட்டி, வேற்றுமொழிப் பத்திரிகையின் ஞாயிறு மலரைத் தற்செயலாக மேய்ந்தபோது முழுப் பக்கச் செய்தி ஒன்று கவன ஈர்ப்பு செய்தது. அது தற்செயலான நிகழ்ச்சிகளைப் பற்றியதாக அமைந்து போனதும்…
நெம்பர் 40, ரெட்டைத் தெரு புத்தகத்திலிருந்து பதினேழு நவராத்திரி முடிந்து விஜயதசமி காலையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்துக் கட்டாயத்தின் பேரில் படித்துக் கொண்டிருக்கும்போது ரெட்டைத் தெருவில் போகிற ஒவ்வொரு லாரியும் கவனத்தை ஈர்க்கும். ஊருக்குள் போவதால் மெதுவாகப் போகிற அவற்றில் ஒன்று மட்டும் ஊர்ந்தபடி வரும். அது தென்பட்ட நாலு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், தெருவில் இருக்கப்பட்ட ஏழிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்கள் கூட்டம் ரங்கன் வாத்தியார் வீட்டு வாசலில் கூடிவிடும். ரங்கன்…