Archive For நவம்பர் 1, 2008
Short Story published in Amudhasurabhi Deepavali Malar 2008 கருப்பு வெளுப்பில் ஒரு படம் *********************** நாயர். யாரோ கூப்பிட்டார்கள். அவனைத்தான். நாயர் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று இந்தப் பட்டணத்தில் குடியேறும் எல்லா மலையாளிகளையும் பழக்கியிருக்கிறார்கள். அல்லது அவரவர்களாகவே வந்த நாலைந்து நாளில் புரிந்து கொள்கிறார்கள். ‘டீ வேணுமா, நாயர்?’ கூப்பிட்ட சின்னப் பையன் கையில் இரும்பு வளையத்தில் தூக்கு மாட்டித் தொங்கிய டீ கிளாசுகளும், அலுமினியத் தட்டில் எண்ணெய் மினுக்கோடு…
‘வார்த்தை’ பத்தி மூணரை மணிக்கு எழுந்தேன். அதிகாலைக்கு முற்பட்ட அசதியான காலை. தரையில் ஊன்றிய வலது குதிகால் போய்யா புண்ணாக்கு என்று முனகுகிறது. குளித்துத் தொழுது, ரசஞ் சாதமும் சுட்ட அப்பளமுமாகச் சாப்பாடு. தூக்கக் கலக்கத்தோடு வீட்டுக்காரி கேட்கிறாள் – உங்களுக்கே கேணத்தனமாத் தெரியலை இது? நாலரை மணிக்கு சென்னை விமான நிலையம். தில்லி, மும்பை, கொல்கத்தா என்று எல்லா பெருநகரங்களுக்கும் போகிற முதல் விமானங்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கிளம்புவதால் செக்யூரிட்டி செக் இன்…
ஏதோ ஒரு பக்கம் -9 சரஸ்வதி பூஜை. தி.ஜானகிராமன் தான் உடனடியாக ஞாபகம் வருகிறார். சரஸ்வதி பூஜையன்று எதையும் படிக்கக் கூடாது என்று சாத்திரம். ஆனால் அன்றைக்குத் தான் எதையாவது படிக்க மனம் அலைபாய்கிறது. பல்பொடி மடித்து வந்த காகிதமாக இருந்தால் கூட சரிதான். ஜானகிராமனின் அச்சு அசல் வார்த்தைகளில் இதைப் படிக்க அம்மா வந்தாளைத் தேடணும். இன்றைக்கு முடியாது. என் வலது கால் நான் சொல்வதைக் கேட்க மறுத்து வேலை நிறுத்தம் செய்து இன்றோடு…
Crazy Creations 100th performance of Chocolate Krishna ‘சாக்லெட் கிருஷ்ணா’ நூறாவது நிகழ்ச்சி காணும் அன்பு நண்பர்கள் கிரேசி மோகன், மாது பாலாஜி இருவருக்கும் அவர்களுடைய குழுவினருக்கும் என் நல்வாழ்த்துகள். நூறு முடிந்திடத் தேரை விடுத்தவா நூறுணா நூறுயில் நிலைத்தவா –நூறு முறையெங்கள் சாக்லெட் கிருஷ்ணா படைத்த இறையின்று போலென்றும் இரு. (மோகன் – 30 அக்டோபர் 2008)
குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி ‘இந்தத் தேதியில் கல்யாணம். ரிசப்ஷன். வந்து வாழ்த்தவும்.’ ஆடி பிறந்து ஆத்தா கோவில்களில் ஒலிபெருக்கி கட்டி எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு போட ஆரம்பிக்கும்வரை தொடர்வது திருமண அழைப்புகளின் படையெடுப்பு. மனசு நிறைய அன்பும், வாழ்த்த வாயில் வார்த்தையும் இருக்குது தான். ஆனாலும் ஒரு கல்யாணப் பந்தல் விடாமல் ஏறி இறங்கினால் ஆபீசில் லீவும் பர்ஸில் பணமும் கரைந்து போகும். செருப்பு அடிக்கடி காணாமல் போகும். டிவிடி மாதிரி வட்டமாக, கோலக் குழலாக…
குங்குமம் பத்தி – ‘அற்ப விஷயங்கள்’ தினசரிப் பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு தெருவோடு நடந்தால், பின்னால் இருந்து குரல். ‘ஏன் சார், நான் மாஞ்சு மாஞ்சு சுத்தம் செஞ்சுக்கிட்டிருக்கேன். நீங்க பாட்டுக்கு குப்பை போட்டுக்கிட்டுப் போறீங்களே’. திரும்பிப் பார்க்கிறேன். தலையைப் தழையத் தழைய வாரி மல்லிகைப் பூ சூடிக் கொண்டு மாநகரத் துப்புரவில் ஈடுபட்டிருக்கும் நீல் மெட்டல் பனாகா நிறுவனப் பெண். அவள் சொன்னது உண்மைதான். அவள் சுத்தமாகப் பெருக்கி குப்பை செத்தை எல்லாம்…