Archive For அக்டோபர் 7, 2008
சென்னையில் கோவிந்த் நிஹலானியோடு ஒரு சந்திப்பு எல்லாப் பக்கத்திலிருந்துன் விஸ்தாரமாகத் தோண்டித் துளைத்து அங்கங்கே தேசலான பழைய தார்த் தடம் தெரிய பரிதாபமாகக் கிடக்கிற திருமலைப் பிள்ளை சாலை. பெருந்தலைவர் காமராஜ் அவர் வீட்டு வாசலில் கருப்புப் பளிங்குச் சிலையாக நின்று ‘இதெல்லாம் என்னங்கறேன்’ என்கிற போஸில் இடுப்பில் கைவைத்து எல்லா அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் தள்ளி நான். காரை எப்படியோ ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மொபைல் ஃபோனைக் காதில் ஒட்டி வைத்தபடி தெரு…
குங்குமம் பத்தி – அற்ப விஷயம் -17 ‘திரு.அ இறந்துவிட்டார்’. மொபைல் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ் தகவல். இந்த மாதிரியான செய்திகள் பெரும்பாலும் தூங்கப் போன பிற்பாடு வந்து படுக்கைக்குப் பக்கத்தில் பொறுமையாகக் காத்திருக்கும். விடிந்ததும் படிக்கக் கிடைத்து அன்றைய தினத்தையே தடம் புரட்டிப் போட்டுவிடலாம். யார் காலமானார், அனுப்பியவருக்கு என்ன உறவு அதைவிட முக்கியமாக நமக்கு யார் என்பதைப் பொறுத்த பாதிப்பு இது. முதல் எதிர்வினை உடனடி தொலைபேசி அழைப்பு. அநேகமாக, தகவல் அனுப்பியவரை அழைத்து…
குங்குமம் பத்தி – அற்ப விஷயம் (இல்லை) விடிகாலையில் சுத்த பத்தமாகக் குளித்துவிட்டு டி.வியில் மத்திய அரசு சானலைப் போட்டால் பெருமாள் தரிசனம் கிடைக்குதோ என்னமோ, பைஜாமா குர்த்தா ஆசாமிகள் கண்ணில் தட்டுப்படத் தவறுவது இல்லை. முகத்தில் இந்தித் தனம் எழுதி ஒட்டியிருக்கும் இளைஞன் ஒருத்தன் மாட்டு வண்டியில் சாய்ந்து பேசுவான். முட்டாக்குப் போட்ட அம்மா இந்திப் பசுமாட்டைப் பால் கறந்தபடி கேட்பாரள். கம்பளிப் போர்வையோடு கட்டை மீசைத் தாத்தா சத்தமாகச் சொல்வார். இவர்கள் எல்லோரும்…
குங்குமம் பத்தி – அற்ப விஷயம் -11 காப்பி சாப்பாட்டு ரசனை இன்னும் பிடி கிட்டாத ஒரு சங்கதி. காலை காப்பியில் ஆரம்பிக்கலாம். சில பல பேருக்கு வீட்டில் ரதியாக பெண்டாட்டி இருக்கக் கூடும். அந்தம்மா பின் தூங்கி முன் எழுந்து வாசலில் பத்திரிகையோடு வந்து விழும் ஆவின் பால் பாக்கெட்டை எடுப்பார். கள்ளிச் சொட்டாக காப்பி கலந்து கொண்டு வந்து ஐயாவை எழுப்புவார். இவர் அதைக் கடனே என்று குடித்து விட்டு செருப்பில் காலை…
அற்ப விஷயம் -12 ஆலப்புழை எக்ஸ்பிரஸ் முக்கி முனகியபடி ஊடல் கொண்ட புதுப் பெண்டாட்டி மாதிரி ஊர்கிறது. மேற்கே சூலம், தென்மேற்கில் ஈட்டி, வடக்கே பிச்சுவா என்று ஜோசியர்கள் காலை நேர பண்பலை ஒலிபரப்பில் சொன்னதாலோ என்னமோ ரயில்பெட்டியில் கூட்டமே இல்லை. நடுராத்திரியில் கம்பளிப் போர்வையை பிடித்திழுத்து உலுக்கி எழுப்பி என்னை யாரோ விசாரிக்கிறார்கள் – ‘சேட்டா ஆலப்புழைக்கா?’ இல்லே, அமெரிக்கா போறேன் என்று சொல்லலாமா? வேணாம். இந்த ஆள் அதை ‘ஆ மரிக்கப் போறேன்’…