Archive For பிப்ரவரி 1, 2009

குட்டப்பன் கார்னர் ஷோப் – பதினொன்று

By |

<!--:ta-->குட்டப்பன் கார்னர் ஷோப் – பதினொன்று<!--:-->

  Vaarthai Column – Feb 2009 இரா.முருகன் தைமாத நடுவாந்திரத்தில் மார்கழியை அசைபோடுவதை அன்பர்கள் மன்னிக்க வேண்டும். மாதப் பத்திரிகைக்குப் பத்தி எழுதும்போது சாவகாசமாகச் சாய்ந்து உட்கார்ந்து, விட்டு விலகி நின்று அவதானித்துப் பிரித்து மேய்ந்து வழி செய்வதால் இந்த time lag-ம் வேண்டுவதே இம்மாநிலத்து. கடந்து போன மார்கழியில் புத்தியில் உறைத்து இறும்பூது எய்த வைத்த முதல் விஷயம் என்ன என்றால் சென்னை சங்கீத சபாக்களின் மேடைகள் அழகிப் போட்டிக்கான முதல் கட்ட அணிவகுப்பு…




Read more »

பெயரில் என்ன இருக்கு

By |

  ‘பசுமாட்டுக்குப் பெயர் வைத்து அன்போடு கூப்பிட்டால் பால் அதிகம் கறக்கும்’. பாட்டியம்மா சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து டிவியில் பழைய ‘கோமாதா’ சினிமா பார்த்துக் கொண்டு, வெற்றிலைச் சீவலை சாஷேயில் இருந்து வாயில் கவிழ்த்தபடி சொன்னால், ‘உங்களுக்கு வேறே வேலை இல்லை. ஆவின் ஆபீசுக்கு வேணும்னா எழுதிப் போடுங்க’ என்று டிவி சானலை மாற்றும் இளசுகள் அதிகம். பாட்டி இல்லை. வெள்ளைக்காரன் அறிவித்திருக்கிறான். இங்கிலாந்தின் நியூகாஸில் பல்கலைக் கழகம் நடத்திய லேடஸ்ட் ஆய்வு முடிவு – பசுவுக்குப்…




Read more »

செருப்பு விடு தூது

By |

  Kungumam column அற்ப விஷயம் -26 இரா.முருகன் பாதுகைகள் நடக்க ஆரம்பித்துப் பல காலம் ஆகிறது. இராம பிரான் காலடியில் இருந்து பரதனின் தலையேறிய காலணிகள் அடுத்து அரியணையும் ஏறின. அந்த ஒரு ஜோடி பாதுகைகளைத் தைத்துக் கொடுத்த புராணகாலத்து அயோத்தி நகரத் தொழிலாளி கூட்டத்தில் ஒருவனாக நின்று பார்த்துப் பெருமிதப்பட்டிருப்பான். அவன் உழைப்புக்குக் கிடைத்த மறைமுகமான அங்கீகாரம் அது. கொடுமையின் மொத்த உருவமாக வேடம் புனைந்து மேடையில் வலம் வந்த நாடகக் கலைஞன் மேல்,…




Read more »

மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீ

By |

  Kungumam column – அற்ப விஷயம் 23 இரா.முருகன் கூட்டம் நடத்துவது என்ன மாதிரியான சங்கதி என்று இன்னும் சரியாகப் புலப்படவில்லை. அரசியல் கூட்டங்களைப் பற்றிய அங்கலாய்ப்பு இல்லை இது. அரசியல் போக, வேறே இலக்கியம், கலை, நற்பணி மன்றம் தொடங்கி, வைதேகி ப்ளாட்ஸ் கட்டிடக் குடித்தனக்காரர்கள் சங்கக் கூட்டம் வரையான பல தரப்பட்ட இனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறும். கூட்டங்கள் நடக்க என்ன காரணம்? இம்மாதிரியான யோசனைகள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது…




Read more »

சத்திய சோதனை ஆந்திரா ஸ்டைல்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -24 எட்டுக்கால் பூச்சிக்குப் பட்ட காலிலே பட்டால் பரவாயில்லை. சொச்சம் இருக்கப்பட்ட ஏழு காலை வைத்து ஒப்பேற்றி வலை கட்டித் தொங்கிவிடலம். கம்ப்யூட்டர் துறை எட்டுக்கால் பூச்சி இல்லை என்பதால் அடி மேல் அடி விழுந்ததும் தாங்கச் சக்தி இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு தேசம் தந்த புத்தாண்டுப் பரிசு இந்த சட்டக் கல்லூரி ஹாஸ்டல் ஸ்டைல் அடி. சாதாரணமாகவே பெரும்பாலான கம்ப்யூட்டர் கம்பெனிகளில் எழுதாத விதி ஒன்று…




Read more »

மர்மயோகி ரசித்த படம்

By |

  வார்த்தை பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் 1ப் அவசியம் இதைப் பாருங்க. அப்புறம் படியுங்க. மர்மயோகி ஒரு குறுவட்டையும், கூடவே புத்தகத்தையும் நீட்டினார். இயக்குனர் பிரதியாக ஓர் ஆங்கிலத் திரைப்படம். பெயர் மேக்னோலியா. அதோடு இணைப்பாகப் படத்தின் திரைக்கதை புத்தக வடிவத்தில். பால் தாம்சன் ஆண்டர்சன் எழுதியது. படத்தை இயக்கியதும் ஆண்டர்சன் தான். இளைஞர். வழக்கம் போல் புத்தகத்தின் கடைசிப் பக்கத்திலிருந்து புரட்ட ஆரம்பித்தேன். மொதல்லே சி.டியைப் பார்க்கச் சொன்னேன். அப்புறம் படிக்கலாம். அன்பான…




Read more »