Archive For பிப்ரவரி 28, 2009

(Updated) சுஜாதா – கிரேசி மோகன் அஞ்சலி

By |

  கதையா கவிதையா கட்டுரையா கேட்போர்க்(கு) எதையும் வழங்கும் எழுத்துப் – புதையலே சீரங்க தேவதையே ஈரங்க ராஜனே பாரிங்கு நீரின்றிப் பாழ் அந்தரங்க சுத்தியுடன் அந்தணங்கு ஆண்டாள்போல் அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க வந்திறங்கி வைகுண்டம் வாவென்று கைகொடுத்துத் தூக்கிவிடும் பைகொண்ட நாகமுற்ற பொற்பு. – க்ரேஸி மோகன் (28.2.2009)




Read more »

போகிற போக்கில் 3

By |

  Feb 27, 2009 வெள்ளி காலை 5 மணி. நாரதகான சபா மூத்திர வாடை வழக்கப்படுத்திக் கொண்ட சமாசாரம். அதுவும் முதல் நாலைந்து வரிசை வி.ஐ.பி வரிசைகளில் உட்கார்ந்தால், கதவு திறக்கும் போது, மூடும் போது ‘கழிவறை உலகம் செய்தீர்’ என்று ஞானக்கூத்தனோடு சேர்ந்து மணம் கமழச் சொல்லலாம். சங்கீத சீசனில் சபா கேண்டீனில் கீரை வடை மேற்படி வாடையோடு சாப்பிட்டு சாப்பிட்டு கல்யாணி, காம்போதி, கீரை வடை, ஜோன்புரி, சுப பந்துவராளி என்று எதைக்…




Read more »

போகிற போக்கில் 2

By |

  Feb 23, 2009 திங்கள் காலை 7 மணி நேற்றுப் பகல் (ஞாயிறு, 22, ஃபிப்ரவரி 09) க்ரேஸி மோகனின் ‘சாக்லெட் கிருஷ்ணா’ 150-வது மேடையேற்றம் நாரதகான சபாவில் கோலாகலமாக நடந்தது. நம்ம வீட்டுக் கல்யாணம். கமல் அவர்கள் சிறப்பு விருந்தினர். மோகன் இதுவரை எழுதிய நாடகங்கள் 21. எல்லாமே குறைந்த பட்சம் 100 தடவையாவது மேடையேறியவை. இவற்றில் பல 200 ரன், மற்ற சில 500 ரன் அடித்து சனத் ஜெயசூர்யா மாதிரி இன்னும்…




Read more »

போகிற போக்கில்

By |

  Feb 22, 2009 ஞாயிறு காலை 5 மணி ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ (ஆழி பதிப்பகம் வெளியீடு) படித்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஐம்பது வருடமாகத் தமிழ்க் கவிதையில் தடம் பதித்த கவிஞரின் மொத்தப் படைப்புகளையும் ஒரு சேரப் படிக்கும் போது அவருடைய கவிமொழி, பாடுபொருள், கட்டமைப்பு, பார்வை, என்று எல்லாமே மலைக்க வைக்கிறது. மரபுத் தொடர்ச்சி இழை அற்றுப் போகாமல் புதுக் கவிதைக்குத் தடம் மாறுகிற வித்தையை ஞானக்கூத்தனிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். கோயில் வடைகளே…




Read more »

ஆண்கள் மற்றும் சம்சாரிகள்

By |

  Kungumam column – அற்ப விஷயம்-29 இரா.முருகன் இரண்டு தலைமுறை முன்னால் கேள்விப் பட்டிருக்க முடியாத விஷயங்களைப் பட்டியல் போடு. ரொம்ப அக்கறையாக யாராவது வீட்டுக் கதவைத் தட்டி விசாரித்தால், இண்டர்நெட், டெலிவிஷன் மெகா சீரியல், மினரல் வாட்டர், பிட்சா என்று விரலை மடக்கலாம். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்துவிட்டு இந்த லிஸ்டில் ஆணுறையையும் சேர்க்கலாமா? மகா மகா தப்பு. அதை எடுத்து விடவும். 1937-ம் வருடத்துப் பத்திரிகை ஒன்றை மேய்ந்து கொண்டிருந்தபோது கிடைத்த…




Read more »

காரில் நிச்சயிக்கும் கல்யாணங்கள்

By |

  விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ஊர் வழக்கப்படி, மாநிலப் பழக்கப்படி அரைக் கிலோ நெய் வடியும் ரவா கேசரி. கேசரிக்கு கம்பெனி கொடுக்க சம அளவில் ரவா உப்புமா. அதுக்குத் தோழியாக வெல்லம் கரைத்து ஊற்றிய அசட்டு தித்திப்பு சாம்பார். பின்பாரமாக பில்டர் காப்பி. இந்தப்படிக்கு வயிற்று உபசாரம் முடிந்தது. அடுத்து என்ன செய்யலாம்? வாசல் திண்ணையில் உட்கார்ந்து யோசித்தார் முத்தாலிக். சுகமாக எழுந்து வந்த ஏப்பம் பதில் சொன்னது. வானர சேனை தொடங்குக. கேசரி…




Read more »