Archive For டிசம்பர் 20, 2010
ஊமைப் பாட்டி 1966 இரா.முருகன் ரெட்டைத் தெருவில் சாக்குப் படுதா கட்டிய ஒரே வீடு ஊமைப் பாட்டி வீடாகத்தான் இருக்கும். பாண்டியன் மளிகைக் கடையில் கடலைப் புண்ணாக்கும் அரிசியும் அடைத்து வந்த காலி சாக்குகளை யாசித்து வாங்கி வந்து வீட்டுத் திண்ணையில் வரிசையாகத் தொங்க விடுவாள் பாட்டி. வெய்யிலோ மழையோ அவள் உலகம் மளிகை வாடையடிக்கும் சணல் திரைகளுக்குப் பின்னால் இடுங்கியிருக்கும். அவள் மட்டுமில்லை, பேரன் நாகநாதனின் உலகமும் கூட.
ரெட்டைத் தெரு தான் உலகம். ராஜா ஹைஸ்கூல் தான் பிரபஞ்சம். அறிஞர் அண்ணா ஒரே வருடத்தில் காலமாகி, தலை நிறைய சுருள் முடியும் கருப்பு மீசையுமாகக் கலைஞர்தான் தமிழ்நாடு முதல்வர். இறந்து போகும் பிரதமர்களுக்கு இடைப்பட்டு, குல்சாரிலால் நந்தா தான் பத்து பதினைந்து நாள் வரும் டெம்பரவரி தேசியத் தலைவர். டூரிங் தியேட்டரில் ‘இந்தா இந்தா எடுத்துக்கோ’ என்று விஜயலலிதாவோ, ஜோதிலட்சுமியோ பாடியபடி உடம்பைக் குலுக்க, திரையில் ஒரு கண்ணும், தரையில் மற்றதுமாக விட்டலாச்சாரியா படம்…
ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் கும்பகோணம் என்று எங்கேயாவது கேட்டால் எனக்கு வென்னீர் பக்கெட் தான் உடனடியாக நினைவு வரும். அதென்னமோ, வேறே நாட்டுக்கு, ஊருக்குப் பயணம் போகும்போது எல்லாம் சாவதானமாக திட்டம் போடுவேன். ராமராஜ் ஜட்டி தொடங்கி பல் துலக்கும் பிரஷ் ஈறாக எடுத்துப் போக வேண்டியவற்றின் பட்டியல் தயாரிக்கப்படும். சேர்த்து வைத்திருந்த அந்தப் பட்டியல்களை இப்போது பார்க்கும்போது ஒன்று சட்டென்று புரிகிறது. பத்து வருடம் முன்னால் பாங்காங் போக எடுத்துப் போனதை விட…
‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’ பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார். மகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி பஸ் உள்ளே போட்டார்கள். ‘எதுக்கு மாமா கூஜாவும் மண்ணாங்கட்டியும்?’
இன்னொரு மலையாளக் கவிஞர் இறந்தார். ‘அய்யப்பன் விடபறஞ்ஞு ஆரோருமறியாதெ’ என்று மாத்ருபூமி முதல் பக்கத்தில் துக்கம் பங்கு வைத்ததில் என்னை பாதித்தது இந்த ‘யாருக்கும் தெரியாமல்’ தான். அனாதையான அறுபத்தொன்று வயதுக்காரனாக திருவனந்தபுரம் தம்பானூர் ஸ்ரீகுமார் தியேட்டர் பக்கம் விழுந்து கிடந்திருந்த ஐயப்பனை போலீஸ்காரர்கள் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் போதே அவர் அஃறிணை ஆகியிருந்தார். அது வியாழன் (21-10-2010) மாலை.
நவராத்திரி முழுக்கப் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யாராவது சொன்னால் அப்புறம் பேச என்னிடம் வேறே எதுவும் இல்லை என்று மூஞ்சியைத் திருப்பிக்கொள்ள வேண்டி வரும். மனதில் இன்னும் பத்து வயதில் இருக்கிற ஒரு சிறுவன் நவராத்திரியை ஆசையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். நவராத்திரி கொலு வைப்பதற்கென்றே தச்சு ஆசாரியார் எந்தக் காலத்திலோ செய்து கொடுத்த மரப்படிகள் சமையலறைக்கு இடம் பெயர்ந்தது நான் பிறந்ததற்கு முன்னால் நிகழ்ந்த ஒன்று. மாவடு ஊறும் கல்சட்டி, தோசைக்கு அரைத்து…