Archive For அக்டோபர் 7, 2010

விசாரணை

By |

<!--:ta-->விசாரணை<!--:-->

  இந்திரா காந்தியின் முதலாண்டு நினனவு தினத்தில் பானர்ஜி கையில் ஒரு பெரிய அட்டைப் பெட்டியோடும் மனதில் ஒரு கேள்வியோடும் ஆபீசுக்குள் நுழைந்தார். அட்டைப் பெட்டி ஆபீஸ் காரியமாக எடுத்துப் போன வால்ட்டேஜ் ஸ்டெபிலைசர். தில்லி கிளையில் அதை பிளக்கில் செருகினால் எம்பிக் குதித்து ப்யூஸ் போகிறது. கொண்டு போனதை அங்கங்கே நசுங்கலோடு திருப்பி எடுத்து வந்து விட்டார். மனதில் கேள்வி ஆபீஸ் வேலைக்கு சம்பந்தம் இல்லாதது. வங்காள ஆர்ட் சினிமா டைரக்டர் தத்தாவின் கடைசியாக வெளிவந்த…




Read more »

சிவகங்கை வரலாற்றுக் குழப்பங்கள்

By |

  தகவல் பழசாக ஆக ஆக, ஏகத்துக்குத் தண்ணி விளம்பிக் கதை விட சாத்தியக் கூறுகள் நிறைய. தலபுராணம், மதாச்சாரியார் சரித்திரம் என்றால் கேட்கவே வேணாம். டிவியில் மிட்நைட் மசாலாக்கள் அரங்கேறிய பிறகு அலம்பி விடுகிறதுபோல் வெங்கடேசப் பெருமாளுக்கு பட்டாச்சாரியார் குளித்து விடுவதைக் காட்டித் தொடர்ந்து கனிவான பார்வையோடு பிரசங்கம் செய்கிற பெரிய, சின்ன வயசு மகான்கள் உதிர்க்கிற தகவல் எல்லாம் ஆபீஸ் போகிற அவசரத்திலும் கர்ம சிரத்தையாகக் கேட்கப் படும். ஆபீஸ் லஞ்ச் ஹவர் அரட்டையில்…




Read more »

Random jottings

By |

<!--:ta-->Random jottings<!--:-->

  படியேறி மூச்சிறைக்கப் பால்பாக்கெட் வைத்துத் தடுமாறிப் போகின்றாள் தாயி – நொடியில் அறையெங்கும் பாலாறு அக்கிழவி பாவம் குறையொன்றும் இல்லைகண் ணா (நடந்தபடி நகர்வெண்பா)




Read more »

ஏதோ ஒரு பக்கம்

By |

  சமீபத்திய சந்தோஷங்களில் ஒன்று ‘ரெட்டைத் தெரு’ குறும்பட வெளியீடு. பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் சென்னை வழக்கத்தை விட மற்ற ஊர் வளமுறை கொஞ்சம் இறுக்கம் தளர்ந்திருப்பது வாடிக்கை. அது சில சமயம் ஓர் ஆசுவாசம் தரும். பல நேரங்களில் எரிச்சலையும் உண்டாக்கும். இந்த ‘சரி, செஞ்சுடலாம்’ ரிலாக்சேஷன் அரசுத் துறை அதிகாரிகளில் இருந்து ஆரம்பிக்கும். ஒரு பிற நகர் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஏழெட்டு வயசுப் பிள்ளைகள் அணி அணியாகப் பொரிவெய்யிலில் பழைய மரபெஞ்சுகளில் காத்திருந்தார்கள்….




Read more »

குமார அசம்பவம்

By |

  ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் ‘பரமசிவன் விதவன். தெரியுமா?’ கேட்ட நண்பர் டால்கம் பவுடரையாவது கொஞ்சம் போல் நெற்றியில் பூசாமல் வெளியே புறப்படாத சைவர். ஒன்றுக்கு ரெண்டு பெண்டாட்டி உள்ள பரமசிவனைக் கைம்பிள்ளை ஆகச் சொன்னதின் சூட்சுமம் புரியாமல் விழித்தேன். ‘காளிதாசனின் குமார சம்பவம் படி’ என்றார் அவர். சிருங்காரச் சுவை கொண்ட கவிதை ஆச்சே. மொழிபெயர்ப்பு கிடைத்தால் யாருடைய மைனர் விளையாட்டு சம்பவங்களை அந்த மகாகவி விவரித்திருக்காரோ, தெரிஞ்சுக்கத் தடை ஏது?




Read more »

நகர் வெண்பாவும் பதில் கவிதையும்

By |

  மூணே முக்காலுக்கு எழுந்து டி.வியைப் போட்டு, யூ டிவி ஓர்ல்ட் சானலில் ஆர்ட் பிலிம் பார்த்தபடி உடற்பயிற்சி செய்கிற சந்தோஷத்தை விபாசனா உபன்யாசச் சக்கரவர்த்தி (வாஸ்வானி?) கெடுத்துத் தொலைத்தார். சானல் சானலாக தேடி நல்ல படம் செலக்ட் செய்து அப்புறம் உடல் பயிற்சி தொடங்க ஐந்து நிமிடம் அதிகம் பிடிக்கிறது. இன்றைக்கு மறுபடி செ குவேராவின் வாழ்க்கைக் கதையான ‘ மோட்டார்சைக்கிள் டயரி’ பார்த்து விட்டு வேக நடைக்கு நடேசன் பூங்காவில் நுழைந்தேன்.




Read more »