Archive For மார்ச் 12, 2010
ஏன் அப்டேட் செய்யலேன்னு நண்பர்கள் கேள்வி. கொஞ்சம் பிசி. மய்யம் வேலை எல்லாம் ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு. போன வாரம் திரு.கமலும் நானும் திருவனந்தபுரத்திலே நீல.பத்மநாபன் சார் நேர்காணல் ஒளிப்பதிவு நடத்தினோம். ஆராய்ச்சி அறிஞர் தொ.ப சந்திப்பும் உண்டு. மூணு வாரம் முந்தி குமுதம் ரா.கி.ரங்கராஜன். வித்தியாசமான இணையத் தலைவாசலாக இருக்கும் மய்யம். போன வாரம் நண்பர்கள் வட்டத்துக்காக ‘மை நேம் இஸ் கான்’ பார்த்தேன். சிறிய வட்டம் தான். பத்து பேருக்கும் குறைவு. ஆப்பரேட்டிங்…
துளசி கோபால் (ப்ரியமான துளசி சேச்சி) எழுதிய ‘நியூசிலாந்து’ அனுபவங்கள் புத்தகம் வெகு விரைவில் வெளியாகிறது. அதற்கு நான் எழுதிய முன்னுரை —————————————————————————– இருபத்து ஐந்து வருஷம் முந்தி முதல் தடவையாக வெளிநாட்டுக்குப் போனபோது என் அழகான வீட்டுக்காரி -அப்போ அப்படித்தான் இருந்தாள்- ‘டிக்கட் எடுத்து வச்சுண்டாச்சா?, பாஸ்போர்ட் எடுத்து வச்சாச்சா?’ இம்மாதிரியான ஸ்டாண்டர்ட் கேள்வித்தாளுக்கு வெளியே கடந்து, பருப்புப் பொடி, புளியஞ்சாதப் பொடி, எள்ளுப்பொடி இன்னோரன்ன சமாச்சாரங்களையும் வினாத் தாளுக்குள் கொண்டு வந்து என்னைத்…