Archive For மே 4, 2010
மலையாள மூலம் : கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழ் மொழியாக்கம் (transcreation) : இரா.முருகன் · புலருவான் ஏழர ராவேயுள்ளு, பூங்கோழி கூவிக் கழிஞ்ஞேயுள்ளு கண்ணீரில் முங்ஙிக் குளிகழிஞ்ஞு, வெண்ணீரு கொண்டு குறிவரச்சு, துரிதம் கொண்டொரு நிறபற நிறச்சு, கூளக் குடுக்க எறிஞ்ஞுடச்சு, தாளத்தில் மூன்னு வலத்து வெச்சு, இலவாட்டித் துக்கம் பொதிஞ்ஞு கெட்டி, மாறாப்பில் ஸ்வப்னம் நிறச்சு கெட்டி,
(ஏதோ ஒரு பக்கம் பத்தி) Hype சம்பந்தப்பட்ட ரெண்டு விஷயங்களை முற்றாகத் தவிர்த்து விடுவது சகலமான விதத்திலும் சால நன்மை பயக்கும். சொல்றேனே தவிர, பல சமயம் ஹைப்பில் ஏமாறி கைக்காசும் கால நேரமும் வீணாகிப் போய் நொந்த சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனாலும் தமிழ்ப் புத்தகம் அதுவும் இலக்கியம் பற்றி ஹைப் எதுவுமே இதுவரைக்கும் கிடையாது என்று நினைத்து இறுமாந்திருந்த போது, இப்படி வகையாக ஏமாறுவேன் என்று சத்தியமா நினைக்கலேடா சாமி.
எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல் இரா.முருகன் எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல் சும்மா, ‘எம்.டி’ என்று சுருக்கி அவர்கள் விளிப்பதில் அபிமானமும், ‘எங்க ஆளாக்கும்’ என்ற பெருமையும் புரியும். ஐம்பது வருடமாக நாவல், நாடகம், சிறுகதை என எழுதி மலையாள இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறவர். திரைக்கதை என்ற கலை – இலக்கிய வடிவத்தில் இவர் அளவு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறவர்கள் இல்லை….