Archive For அக்டோபர் 25, 2010
‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’ பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார். மகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி பஸ் உள்ளே போட்டார்கள். ‘எதுக்கு மாமா கூஜாவும் மண்ணாங்கட்டியும்?’
இன்னொரு மலையாளக் கவிஞர் இறந்தார். ‘அய்யப்பன் விடபறஞ்ஞு ஆரோருமறியாதெ’ என்று மாத்ருபூமி முதல் பக்கத்தில் துக்கம் பங்கு வைத்ததில் என்னை பாதித்தது இந்த ‘யாருக்கும் தெரியாமல்’ தான். அனாதையான அறுபத்தொன்று வயதுக்காரனாக திருவனந்தபுரம் தம்பானூர் ஸ்ரீகுமார் தியேட்டர் பக்கம் விழுந்து கிடந்திருந்த ஐயப்பனை போலீஸ்காரர்கள் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் போதே அவர் அஃறிணை ஆகியிருந்தார். அது வியாழன் (21-10-2010) மாலை.
நவராத்திரி முழுக்கப் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யாராவது சொன்னால் அப்புறம் பேச என்னிடம் வேறே எதுவும் இல்லை என்று மூஞ்சியைத் திருப்பிக்கொள்ள வேண்டி வரும். மனதில் இன்னும் பத்து வயதில் இருக்கிற ஒரு சிறுவன் நவராத்திரியை ஆசையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். நவராத்திரி கொலு வைப்பதற்கென்றே தச்சு ஆசாரியார் எந்தக் காலத்திலோ செய்து கொடுத்த மரப்படிகள் சமையலறைக்கு இடம் பெயர்ந்தது நான் பிறந்ததற்கு முன்னால் நிகழ்ந்த ஒன்று. மாவடு ஊறும் கல்சட்டி, தோசைக்கு அரைத்து…
இந்திரா காந்தியின் முதலாண்டு நினனவு தினத்தில் பானர்ஜி கையில் ஒரு பெரிய அட்டைப் பெட்டியோடும் மனதில் ஒரு கேள்வியோடும் ஆபீசுக்குள் நுழைந்தார். அட்டைப் பெட்டி ஆபீஸ் காரியமாக எடுத்துப் போன வால்ட்டேஜ் ஸ்டெபிலைசர். தில்லி கிளையில் அதை பிளக்கில் செருகினால் எம்பிக் குதித்து ப்யூஸ் போகிறது. கொண்டு போனதை அங்கங்கே நசுங்கலோடு திருப்பி எடுத்து வந்து விட்டார். மனதில் கேள்வி ஆபீஸ் வேலைக்கு சம்பந்தம் இல்லாதது. வங்காள ஆர்ட் சினிமா டைரக்டர் தத்தாவின் கடைசியாக வெளிவந்த…
தகவல் பழசாக ஆக ஆக, ஏகத்துக்குத் தண்ணி விளம்பிக் கதை விட சாத்தியக் கூறுகள் நிறைய. தலபுராணம், மதாச்சாரியார் சரித்திரம் என்றால் கேட்கவே வேணாம். டிவியில் மிட்நைட் மசாலாக்கள் அரங்கேறிய பிறகு அலம்பி விடுகிறதுபோல் வெங்கடேசப் பெருமாளுக்கு பட்டாச்சாரியார் குளித்து விடுவதைக் காட்டித் தொடர்ந்து கனிவான பார்வையோடு பிரசங்கம் செய்கிற பெரிய, சின்ன வயசு மகான்கள் உதிர்க்கிற தகவல் எல்லாம் ஆபீஸ் போகிற அவசரத்திலும் கர்ம சிரத்தையாகக் கேட்கப் படும். ஆபீஸ் லஞ்ச் ஹவர் அரட்டையில்…