Archive For டிசம்பர் 12, 2011
நேற்று மதியம் அலுவலகத்தில் பரபரப்பாக நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவருடைய குரலில் உற்சாகம் என்றால் உடனே புரிந்து போகும் – அவர் ஒரு புதுப் புத்தகத்தைப் படித்திருக்கிறார். ’Grey Wolf: The Escape of Adolf HitlerGrey Wolf: The Escape of Adolf Hitler’ படிச்சுட்டீங்களா? இல்லியே சார், ஹிட்லர் இன்னும் மூச்சு விட்டுக்கிட்டு இருக்கார்னு சாதிக்கறாங்களா? இல்லை. அவர் அர்ஜெண்டினாவுக்குத் தப்பி ஓடினதாகவும், அமெரிக்காவும் ஜெர்மனியும் இதுக்கு வழி செய்ததாகவும்,…
சென்ற ஆண்டு நண்பர் திரு.கமல் பிறந்தநாளுக்குக்காக அவரை வாழ்த்தியபோது இரண்டு விஷயங்களை வற்புறுத்தினேன் – மய்யம் இணையத் தளம் தொடங்குவது, அவருடைய கவிதைத் தொகுப்பை வெளியிடுவது. அற்புதமான நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், நல்ல பாடகர், அருமையான இயக்குனர் என்று பிரமிக்கவைக்கும் நிறைய ஆளுமைகள் அவருக்குள் உண்டு. அவற்றில் கமல் என்ற கவிஞர் எனக்கு நெருக்கமானவர்.
1) அவை நிறைவாக நடந்த அரவான் இசை வெளியீட்டு விழாவுக்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே போய் அண்ணா நூலகத்தில் இதையும் அதையும் படித்துக் கோண்டிருந்தேன். கலைஞரின் பெயரைக் காலாகாலத்துக்கும் சொல்ல புது அசெம்பிளி கட்டிடம் வேண்டாம். இந்த நூலகம் போதும். 2) நாடி வந்து வரவேற்ற வசந்தபாலனின் வரவேற்பு இதம்.
இன்று பொழுது துக்கத்தோடு புலர்ந்தது. என் குரு மெய்யன் முகுந்தன் சார் சிவகங்கையிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார். எங்கள் அன்புக்குரிய தோழர் காசி நேற்று காலமானார் என்று செய்தி. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சிவகங்கையில் கட்டமைப்பது சுலபமான பணி அல்ல. அந்த ஊர் காங்கிரஸ் கோட்டை. ஆர்.வி.சுவாமிநாதன் மூன்று முறையோ அதற்கு மேலுமோ எம்.எல்.ஏ ஆகி காங்கிரஸை அசைக்க முடியாத இடத்தில் வைத்திருந்தார். 1962-ல் தி.மு.க் தொகுதி அடிப்படையிலான உடன்பாடு செய்து கொண்டு ராஜாஜியின் சுதந்திரா கட்சி…
Adri gets The Hindu 2nd page coverage. Wish him future-next BAPASI presidentship. BAPASI deserves that Pl provide feedback on my book ‘Project Management’ (Tamil) available at Kizhakku stall & published by them – serialized in Dinamani Kadhi lining up 2 novels ‘Viswaroopam’ and ‘Duplex Street’ for this year along with a book ‘Crazy mudhal…
சூர்யோதயம். எத்தனையோ வருஷம் கழிச்சு இதை ரசிச்சுப் பார்க்கறேன். திரைப்படத்துக்கு நான் எழுதிய முதல் வசனம் இது. ராத்திரியில் எழுதியது. ஆபீஸ் முடிந்து வந்து சுக்கா ரொட்டிக்காக சாப்பாட்டு மேஜையில் காத்திருக்கும்போது வேட்டிக்கு மாறாமல், டையைத் தளர்த்தாமல் பஞ்ச பஞ்ச உஷத் காலத்தைப் எழுத வைத்தது ஒரு தொலைபேசி அழைப்பு. கைப்பேசி பெயர் சொல்லாமல் மறைத்தும் குரல் சொல்லிவிடுகிறது. ‘முடிஞ்சுதா சார்?’.