Archive For ஜூலை 31, 2012
Outraged Kiran Bedi asked Delhiites to take to the streets on Tuesday and said it was time for people to show their anger.// காவல்துறையில் மிக உயர்ந்த பதவி வகித்து பணி ஓய்வு பெற்ற ஓர் அதிகாரி பேசும் முறையல்ல இது. ‘take to the streets’ மொழிபெயர்ப்பில் ‘தெருவுக்கு வாருங்கள்’ என்று கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட வன்முறையைத் தூண்டும் குரல் இது. மண்ட்சார் மாருதி…
விவித பாரதியில் பேட்டிக்காக அழைத்திருந்தார்கள். பத்து வருடத்துக்கு மேலாகி விட்டது சென்னை வானொலி நிலையத்துக்குப் போய். தொண்ணூறுகளில் அவ்வப்போது ஓலை அனுப்புவார்கள் – ‘அழுகை’ என்ற பொருளில் சிறுகதை பதினைந்து நிமிடத்துக்கு மேல் போகாமல் எழுதி எடுத்து வந்து படியுங்கள்’. அப்படிப் படித்த கதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கலாம்.. பிரதி இல்லாமல் தொலைந்து விட்டன் அவை. ஒரு நிகழ்ச்சியில் நாலும் நண்பர் வண்ணதாசனும் கலந்துரையாடினோம். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் மனம் விட்டுப் பேசியது வானொலியில்…
லண்டன் ஒலிம்பிக்ஸ் துவக்க விழா நிகழ்ச்சி இரண்டு பேருக்காக நினைவில் தங்கி விடும். வழக்கமான இரண்டாம் உலகப் போர் நோஸ்டால்ஜியாவைத் தவிர்த்து, பிரிட்டிஷ் நகைச்சுவை தூக்கலாகத் தெரிய ஒரு பிரம்மாண்டமான நாடகம் போல் வடிவமைத்த டேனி பாயில் முதலாமவர்.