Archive For டிசம்பர் 31, 2012
இந்தச் சந்தம் இணையத்தில் சுழல் அஞ்சலாகச் சுற்றி வருகிறது தத்தோம் தகிதோம் ததிகிட தித்தோம் திகிதோம் வாய்விட்டுப் பாடினால் வந்த பாட்டு …எந்தமிழ்.. எம்மக்கள்.. வந்தோம் வளர்ந்தோம் வளம்பெருக நின்றோம் நிலைத்தோம் தந்தோம் எந்தம் தலைமுறையை தாய்க்குலத்தை மகவையெலாம் எந்தோள் எரியும்வரை காத்தோம் எம்தேயம் வென்றோம் எரித்தாலும் எம்மண்ணில் புதைத்தாலும் எக்களித்தோம் இன்றல்ல என்றேனும் ஒருநாள் எதிர்வருவோம் பெரும்படையாய்த் தமிழ். ***************************** தொலைக்காட்சி தமிழன் விருது (இலக்கியம்) பரிந்துரைக்கக் கோரிப் படிவம் அனுப்பியிருந்தார்கள். பிரித்ததும் தான் தெரிந்தது…
விஸ்வரூபம் நாவல் புத்தகமாக சற்று நேரம் முன் கையில் கிடைத்தது. நல்ல அமைப்பு. பத்ரிக்கும் கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கும் நன்றி. பக்கங்கள் 790 விலை ரூ 400
அம்பை எழுதுகிறார் – //மும்பையில் பெண்கள் பெட்டியில் பத்துப் பனிரெண்டு வயது வரை சிறுவர்கள் ஏறலாம். இரண்டு வாரங்கள் முன்பு நான் பெட்டியில் ஏறியபோது ஒரு சிறுவன் –பத்து வயதிருக்கும் — இரண்டு கால்களையும் கிட்டத்தட்டப் பாதி உடம்பையும் வெளியே நீட்டியபடி வாயில் அருகே உட்கார்ந்திருந்தான். மாணவன் இல்லை. வண்டியில் எதையாவது விற்க வரும் பையனும் இல்லை.ஸ்டேஷன்களில் அங்கிங்கு அலையும் சிறுவர்களில் ஒருவன் போலும். சரியாக உட்காரச் சொல்லி அதட்டினேன். மறுத்தான். ”விழுந்துவிடுவாய் பையா, பிடிவாதம் பிடிக்காதே”…
திருவெம்பாவை – 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 14 திருப்பாவை – 14 உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்…
இதுவும் அதுவும் உதுவும் – 4 இரா முருகன் இரா.முருகன் சென்னையின் வேனல் கால முகம் யாது? தெரு ஓரத்தில் ஆலைக் கரும்பைப் பிழிந்து அழுக்குப் பனிக் கட்டிச் சீவலும், எலுமிச்சை சாறும் சேர்த்து நுரைக்க நுரைக்க கிளாஸ் டம்ளரில் நீட்டும் வண்டி. அதன் பக்கம் வியர்த்து விறுவிறுத்து, கையில் பிடித்த சூட்கேஸோடு காத்திருந்து, வாங்கிக் குடித்த பிறகு சிகரெட் பற்ற வைக்கும் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவாக அந்த முகம் எனக்குத் தென்படும். டிசம்பர் பதினைந்திலிருந்து ஜனவரி பதினைந்து…
திருப்பாவை – 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்? அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். 12 திருவெம்பாவை – 12 ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும்…