Archive For ஏப்ரல் 7, 2013
சிறந்த தமிழ் நாவல்கள் – என் பட்டியல் ———————————————– தேர்வுக்கான தகுதி : கதையமைப்பு, சொன்ன விதம், வசவச என்று இல்லாமல் படிக்க சுவாரசியமான நடை. 1) கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர் 2) தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி 3) சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை (முற்றுப் பெறாவிட்டாலும்) – பாரதியார் 4) பொய்த் தேவு – க.நா.சு 5) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா 6) அலை ஓசை –…
திரு முருகன் அவர்களுக்கு, இரண்டே நாளில் படித்து முடித்தேன். இங்கேயும் அங்கேயும் அலைபாயும் கதை என்றாலும், கீழே வைக்க விடாமல் செய்தது உங்கள் நடை. வார்த்தை விளையாட்டுக்கள் அமர்க்களம். முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்த வனப்பு மிக்க மலையாள எழுத்துக்கள் உவமையில் இருந்து நாவலின் இறுதி வரையிலும் தொடர்ந்த அந்த நடை தான் நாவலின் பெரிய பலம். மகாலிங்கையர் கரும்புத் தோட்டத்தில் பால் கொடுக்கும் பெண்ணை அடிக்க அந்த நேரத்தில் குழந்தைக்குப் பால் கொடுக்கும் ஆப்பிரிக்கப் பெண், இரண்டு…
இ.பா சாரிடம் இருந்து சற்று முன் ‘விஸ்வரூபம்’ நாவலுக்காக பாராட்டுக் கடிதம் /கட்டுரை பெற்றேன். அவர் அனுமதியோடு பதிப்பாளர் நண்பர் பத்ரியோடு பகிர்ந்து கொண்டுள்ளேன். விரைவில் இங்கே வலையேற்றுவேன். நன்றி இ.பா சார்
1970-களின் முற்பகுதி. மதுரை. மதுரா கோட்ஸ் துணி உற்பத்தி நிறுவனத்தின் அலுவலகம். காலை பத்து மணி கடந்திருக்கிறது. தலைமை நிர்வாகி வேகமாக உள்ளே வருகிறார். அலுவலக ஹாலில் ஓரமாகப் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனின் மேசை. அங்கே அவர் பார்வை நிலைக்கிறது. அந்தப் பையனுக்கு முன்னால் உட்கார்ந்து ஒட்ட வெட்டிய நரைத்த தலைமுடியும், நாலு முழ வேட்டியும், அரைக்கைச் சட்டையும், முகத்தில் பட்டிக்காட்டுக் களையுமாக ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருக்கிறார். நிர்வாகிக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ‘யாருய்யா அது,…
Django Unchained has the sub text layered skillfully within the narrative, be it with names like Broomhilda (corruption of Brunnhilde, the German name) or the hound like looks and body language of Samuel Jhonson (as Stephen, the liberated slave), the matter-of-fact suave yet cruel to the core expressions of De Caprio (I expected an academy…
இன்று எங்க ஹெட்மாஸ்டர் வெங்கடகிருஷ்ணன் சார் 81-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். வாழ்த்த வயதெல்லாம் தேவையில்லை. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன். சிறந்த தேசபக்தரும் சிவகங்கையின் இரண்டாவது எழுத்தாளருமான கவியோகி சுத்தாநந்த பாரதியாரின் இளவலில் மகன். (சிவகங்கையின் முதல் எழுத்தாளர் முத்துக்குட்டி ஐயர் பற்றி சாவகாசமாக எழுதுகிறேன். அவர் தான் தமிழ் உரைநடைக்கும் முன்னோடி). எங்க ஹெட்மாஸ்டர் சாரின் 80-ம் ஆண்டு நிறைவு சிவகங்கையில் விரைவில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. விழா மலருக்காக நான் எழுதிய…