Archive For மார்ச் 3, 2013
நேற்றைக்கு விஸ்வரூபம் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. மூத்த தமிழ் இலக்கிய எழுத்தாளர், கவிஞர்களான இ.பா சார், வைதீஸ்வரன் சார் முதல் விழாவில் கலந்து கொண்ட என் அருமை நண்பர்கள், சுற்றம் எல்லோருக்கும் ஒவ்வொருவராக அழைத்து வார்த்தைப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்து நன்றி சொல்ல வேண்டும். எழுதுகிறேன். விழா தொடங்க ஐந்து நிமிடம் முன் தொலைபேசி வாழ்த்து தெரிவித்து, தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாததற்கு வருந்தி, விழா முடிந்த பிறகு ஞாபகமாக மறுபடி தொலைபேசி…
கல்யாண்ஜி ஃபேஸ்புக்கிலே இனிமே கவிதை எழுத மாட்டேன்; எப்பவாவது தோணிச்சுன்னா திரும்பி வருவேன். இல்லேன்னா இல்லேதான்னு system shut down செஞ்சுட்டார். வருத்தமா இருக்கு. எதுக்கு ஃபேஸ்புக்கை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கணும்? இது பத்திரிகையோ புத்தகமோ இல்லை. நண்பர்களோடு, முப்பது பேரோ மூவாயிரம் பேரோ எல்லோரோடயும் casual-ஆக அரட்டை அடிக்க, social networking செய்ய ஒரு இடம்.. one’s own publicly private digital space. அத்ரயே உள்ளு. நான் இங்கே என் நாவலை promote செய்யும்போது…
என் அன்புத் தங்கை ஓவியர் – கவிஞர் ஜெயா (கோவை) விஸ்வரூபம் நாவல் பற்றி எழுதி அனுப்பியிருக்கிறாள். வீடு, பள்ளி (ஆசிரியை), என்று ஆயிரத்தெட்டு பணிகளுக்கு நடுவில் என் நாவலையும் படித்துக் கவித்துவத்தோடு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். கண்கள் பனிக்கின்றன. விழாவில் இதைப் படிக்கலாம் என்று இருக்கிறேன். viswaroopam (1) விஸ்வரூபம் —————— அருமை அண்ணாவிற்கு சின்னதாய் ஒரு பகிர்தல் விஸ்வரூபம் பற்றி புத்தக வெளியீடு நடக்கும் முன்பே எனக்கு கிடைக்கும்படி செய்ததற்கு முதலில் நன்றிகள் சொல்லும்…
திண்ணையில் பிரசுரமான ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வடிவம் கண்டு வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது. வாசக நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். அரசூர் வம்சம் மற்றும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் என்ற என் இரு நாவல்களைப் பிரசுரம் செய்த திண்ணைக்கு பிரத்யோகமாக நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது பல காரணங்களால் இடைவெளி விட்டு நாவலை வளர்த்துப் போய், எழுதி அனுப்பிய அத்தியாயத்தில் திருத்தம் போடச் சொல்லி நச்சரித்து எல்லாத் தொல்லையும் நான் கொடுத்தாலும்…
1919-ல் அமிர்தசரஸ் நகரில் பல இந்திய உயிர்களைத் துப்பாக்கிச் சூட்டில் ஆங்கிலேய ஏகாத்திபத்தியம் ஜெனரல் டயர் மூலம் பலி கொண்டதற்கு இன்றைய பிரிட்டீஷ் பிரதமர் கேமரூன் மன்னிப்புக் கேட்க வேண்டும். 1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட காலம். தில்லியின் கடைசி முகமதிய சுல்தான் கவி பஹதூர் ஷா ‘ஸஃபர்’ அரண்மனையான தில்லி செங்கோட்டையில் அவருடைய பாதுகாப்பைக் கோரி ஓடி வந்து தங்கி இருந்தார்கள் ஆங்கிலேயப் பெண்களும், குழந்தைகளும். கம்பேனியார் அதிகாரி துரைமார்களின் மனைவி – மக்கள்…
தி ஹிந்து பத்திரிகையின் இணையத் தளத்தில் சற்று நேரம் முன்னால் புகுந்தபோது இந்தச் செய்தி கண்ணில் பட்டது. பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருக்கிறேன். ஒரு 12 வயதுச் சிறுவனை.. அவன் குழந்தைத்தனமான முகம் மறக்க முடியாதபடி மனதைச் சுற்றிச் சுற்றி வருகிறது. முதல் இரண்டு புகைப்படத்தில் பங்கரில் உட்கார்ந்திருக்கிறான். சட்டையைக் கழற்றச் சொல்லிக் கட்டளை இட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு கைத்தறித் துண்டைத் தோளில் போட்டபடி ஒரு 12 வயதுப் பையன் உட்கார்ந்திருப்பது போல் இந்த 12 வயதுப்…