Archive For ஜனவரி 15, 2013
விஸ்வரூபம் நாவல் பிரதிகள் நேற்று வந்து விட்டன. மும்பையில் அச்சானவை. நேற்று கூரியர் நிறுவனம் பொங்கல் விடுமுறை என்பதால் கிழக்கு ஸ்டாலுக்கு வந்து சேர தாமதம்.. இன்று வந்து விடும் என்கிறார் பத்ரி. பேஷாக வரட்டும். புத்தகம் மின்னஞ்சல் மூலம் பெற https://www.nhm.in/shop/978-81-8493-749-7.html *************** காலை ஐந்தே முக்காலுக்கு பணிக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் காலை நடை இல்லை. இன்னும் நாலு நாள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ”வேலை பார்த்ததெல்லாம் போதாதா, இருக்கறதே எதேஷ்டம்.. ரிடையர் ஆகி,…
PVR sir கன்னட ரவா உப்புமா நேசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் சற்று முன் – விஸ்வரூபம் நாவலில் இருந்து – ஏப்ரல் 14 1899 விகாரி வருடம் சித்திரை 2 திங்கள்கிழமை குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி தரையில் வந்து உட்கார்ந்தான் வேதையன். அண்ணாவுக்கு இலையைப் போட்டு பரசேஷணம் செய்ய ஜலம் எடுத்து வையடா. துளு பிராமணன் உக்கிராணத்தைப் பார்த்து உரக்கச் சொல்லிவிட்டு உடனடியாகத் திருத்திக்கொண்டான். இலையைப் போட்டு சூடா ரெண்டு கரண்டி உப்பிட்டு விளம்பு. ரவா கேசரியும்…
நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த பொங்கல் வாழ்த்துகள். பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக. ****************************** மேற்கில் இருந்து இன்று நல்ல சேதி வருதாம்.. ’விஸ்வரூபம்’ பிரதிகள் வந்து சேர வாய்ப்பு உண்டு. புத்தகக் கண்காட்சி போகும் நண்பர்கள் கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லக் கோரிக்கை விடுக்கப் படுகிறது. ******************* பட்டர்பி ரான்கோதை கிட்டவந்து முப்பதுநாள் இட்டமுடன் பாடிய இன்னமுது கிட்டியதோ? தங்கும் பனியே துணையாகக் கூடவரப் பொங்கலொடு மார்கழி போம். இரா.மு 14.1.2013…
திருப்பாவை – 29 சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்; மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். 29 திருப்பள்ளி எழுச்சி – 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள், மண்ணகத்தே வந்து,…
திருப்பாவை – 27 கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 27 திருப்பள்ளி எழுச்சி – 7 அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார். இது அவன் திருஉரு;…
திருப்பாவை – 26 மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே, சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். 26 திருப்பள்ளி எழுச்சி – 6 பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும், மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின்…