Archive For அக்டோபர் 14, 2013
காலைத் தொலைக்காட்சி தொல்லை குறைந்தது என்று நினைத்தால் – சற்று முன் ஒரு சேனலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய பேச்சுக் கச்சேரி. பேச்சாளர் மைக்கைப் பிடித்ததும் ‘எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்க’ என்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒளிபரப்பும் சேனலுக்கு கூட்டமாக நன்றி செலுத்த வேண்டுமாம். எதுக்கு என்ன என்று கேட்காமல் நம்மாட்கள் யாராவது வற்புறுத்தினால் என்ன செய்வார்களோ அதைத்தான் அரங்கில் இருந்த கூட்டமும் செய்தது. எழுந்து நின்றார்கள் எல்லோரும். வயதானவர்கள் சிரமத்தோடும், மற்றவர்கள் கடமை உணர்வோடும்…
Sharing my friend Chithan Prasadh’s review of the novel ‘Viswaroopam’. Excerpts from this have been published in the current weekly issue of Kalki. விஸ்வரூபம் ———————— உருகும் மெழுகென, கணிக்க இயலாத காலம், கரைந்து ஒழுகிக் கொண்டேயிருக்கிறது. காலக்கரையின் விளிம்பில் அமர்ந்து, அதில் அளைந்து கொண்டே, அது சுழித்துப் பிரவாகிப்பதைக் கண்டவாறே, நேற்றைய கழிதல்களும் நாளைய கனவுகளுமாய், விரல்களின் இடுக்களினூடே நழுவி வழிந்தோடுவதிலிருந்து, துளிகள் பழையன சில கோரி…
எழுதிக் கொண்டிருக்கும் ‘சுஜாதா சிறுகதைகள் தொகுப்புரை’ யில் இருந்து. இறுதிப்பிரதியில் இது இருக்கலாம், உதிர்ந்திருக்கலாம். இந்த நிமிடத்து ஸ்னாப்ஷாட் – சுஜாதா மொழிநடை அவருக்கு அடுத்த தலைமுறையை வெகுவாக பாதித்த ஒன்று. அவர் கதையில் ஒரு இடத்திலாவது எழுவாய் இல்லாமல் சட்டென்று ஒரு சொற்றொடர் தொடங்கும் – ’காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள்’ என்பது போல். யார் காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள், எங்கே எப்போது என்பதெல்லாம் சாவகாசமாக வரும். வராமலும் போகலாம். இன்னொரு சுஜாதா பிரயோகம் ‘விரோதமாக’. ஜீவராசிகளுக்கு…
அமெரிக்க விஜயம் முடித்து வந்த பிரதமர் நாளைக் காலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவாராம். அவசரச் சட்டம் பற்றி ஜனாதிபதி கருத்துச் சொல்லியிருப்பதால் இது முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்று தெரிகிறது. நாளைக் காலையை விட்டால் இந்த சந்திப்பு இப்போதைக்கு நடக்க முடியாதாம். ஏனென்றால் நாளை மதியம் ஐந்து நாள் நல்லெண்ண சுற்றுப் பயணமாக துருக்கி, பெல்ஜியம் போறாராம் ஜனாதிபதி. ஒண்ணு மட்டும் புரியலை. சாப்ட்வேர் கம்பெனிகள்லே தான் க்ளையண்ட் மீட்டிங், ப்ரபோசல் டிபென்ஸ், தீயணைப்பு நடவடிக்கை இப்படிஅதிகாரிகள்…
கார்ப்பரேட் கலாச்சாரத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஓர் அம்சம் மனிதம். காலை ஒன்பது மணிக்கு வாக்-இன் நேர்காணல் என்று கூப்பிடுவார்கள். உங்களுக்குத் தகுதி இருப்பதாக முன் வரிசை நேர் காணுகிறவர்கள் (பெரும்பாலும் கத்துக்குட்டிகள்) கருதினால், திருப்பதியில் அடுத்த கூடத்துக்கு அனுப்புவது போல் அனுப்பப் படுவீர்கள். அங்கே காத்திருந்து முதல் கட்ட நேர்காணல். அது முடிந்து அடுத்த கூடம். அதற்குள் மதியம் ஆகி விடும். நேர்காணுகிறவர்கள் உணவுக்குப் போக, நேர்கண்டு வேலை பெற வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கூட்டத்துக்கு…
Tr Santhanakrishnan shared a link. 19 September நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை ரசிப்பது ஒரு சுகம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் சாவி எழுதிய “இவர்கள் இப்படித்தான்” படித்ததுண்டா? பால்காரரிளிருந்து வீடு பேருக்கும் வேலைக்காரி வரை அனைவரின் குணாதிசயங்களையும் அழகுற எழுதி நம் மனதில் ஒரு நேசம் கலந்த புன்னகையை வளர்த்து விடுவார். இருபது ஆண்டுகளுக்கு முன் சுஜாதா எழுதிய “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” இதே வகையைச் சேர்ந்தது தான். பத்தணா அய்யங்காராக மருவிய பத்மநாப அய்யங்காரை…