Archive For மே 19, 2013
மூத்த நண்பரும் தேசிய அளவில் சிறந்த இயக்குனர் / ஒளிப்பதிவாளருமான திரு கோவிந்த் நிஹலானியோடு நேற்று பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய கதைக்கருவை வைத்து நான் ஆங்கிலத்தில் திரைக்கதை எழுதிய ஒரு மராத்தி / இந்தி சினிமா இப்போதைக்கு இல்லை என்று ஆனதால், அந்த ஸ்கிரிப்டை நாடகமாக்கிக் கொண்டிருக்கிறேன். ப்ளாக் ஹ்யூமர் என்ற அவ்வளவாகக் கையாளப்படாத நகைச்சுவை உத்தி. ஒரு ஊடகத்திலிருந்து மற்ற ஒன்றுக்கு மாற்றுவது, அதுவும் காட்சி ரூபமான மீடியத்திலிருந்து வசன உருவான மேடையாக்கத்துக்கு மாற்றுவதில் ஏற்படும்…
இல்லறத்தானுக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் தலையாயது தினசரி கேலண்டரில் தேதி கிழித்தல். நினைவு வைத்துக் கொண்டு, காலையில் முதல் வேலையாக கேலண்டர் பக்கம் போய், ரெண்டு மூணு தாள் முன்கூட்டியே அவசரமாகக் கிழிபடாமல், நேற்றைய தேதிக்கான தாளை மட்டும் கிழிக்க வேண்டும். அப்புறம் முக்கியமானது கிழித்ததைப் படித்து விட்டுக் குப்பையில் போட வேணும். அல்லது படித்து விட்டுக் கிழித்தாலும் சரிதான். முன்பெல்லாம் தெற்கு மாவட்டங்களில் பல வீடுகளில் விவேகானந்தா தினசரி கேலண்டர் தான் தட்டுப்படும். மதுரை விவேகானந்தா அச்சகம்…
காலை அவசரங்களுக்கு இடையே முரண்களும் அபத்தங்களும் எப்படியோ கண்ணில் பட்டு விடுகின்றன. விஜய் டிவியில் சமயச் சொற்பொழிவு. அவை நிறையக் கூட்டம். கிருஷ்ண கான சபாவா, நாரத கான சபாவா என்று தெரியவில்லை. முதல் வரிசையில் என் அன்பு நண்பர் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன். ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. புலவராகிய பேச்சாளர் சீரங்கத்து உறங்காவில்லிதாசனை, அவனுக்கு அரங்கனின் பேரழகைக் காட்டித் தந்த ஆசாரியனைப் பற்றி எல்லாம் அருமையாகப் பேசுகிறார். ஆச்சாரியனுக்கும் ஆசிரியருக்கும் வேறுபாடு உண்டு. ஆசிரியர் நன்றாக…
காலை நேரச் சென்னை மாநகரம். அது ஹோட்டல்களின் மூடிய கதவுகளுக்குப் பின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டபரா டம்ளர்களை அலம்பிச் சரசரவென்று சரித்து அடுக்கும் ஓசையாலும், கோயம்பேட்டிலிருந்து காய்கறி ஏற்றி வந்த மினி வேன்கள் பூங்கா பக்கம் அவற்றை நாலு நல்ல வார்த்தைகளோடு இறக்கி விட்டு போகிற சத்தத்தாலும், ‘ஆகட்டும், சீக்கிரம் வாங்க, பஸ் எடுக்கணும்’ என்று திருப்பதி தினசரிப் பயண பஸ் டிரைவர்கள் அவசரமாக ஓடி வரும் பக்த கோடிகளை இன்னும் பதற்றமடைய வைக்கும் குரல் ஒலியாலும்…
அன்புள்ள முருகன் வணக்கம் சும்ம ஒரு புள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு, எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறாருன்னு.. நானுமெழுத உக்காந்தாத்தான் கஷ்டம் புரியும்.உண்மையிலேயே பெரிய்ய கேன்வாஸ்தான். அரசூர் வம்சம் படிக்கும்போதே ஆச்சரியம் தாங்கலை.. என்ன ஒரு வேகம் என்ன ஒரு கேலியும் கிண்டலுமான நடை.அது இதிலும் தொடர்கிறது.நான் அம்பலப்புழை கிருஷ்ணனைப் பார்த்ததில்லை. எனக்கு ஆரண்முலா கிருஷ்ணன்தான் அறிமுகம். பம்பா ஆறும் அவன் உசந்த கோயில் படிக்கட்டும் அம்பலப்புழைக்கு தானாகவே மாறிக் கொண்டது.அதுவும் ஒரு மாயாவாதம் தானே.நீ/நீங்கள் சொல்கிற மாதிரிகொஞ்சம் சரித்திரப்…
வெள்ளி (மே 3) தினத்தில் இந்தியத் திரைப்படத்துக்கு நூறு வயது. தாதாசாகிப் பால்கேயின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ முதல் இந்தியத் திரைப்படமாக வெளியான தினம் மே 3, 1913. நான் பார்த்த முதல் படம் ‘டாக்ஸி டிரைவர்’. தேவ் ஆனந்த் படம். 5 வயது சிறுவனாக என் தந்தையோடு (அவர் அப்போது சென்னை தி நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனேஜர்) ராஜகுமாரி தியேட்டரில் பார்த்த படம். வருடம்? 1958-59. இந்தப் படத்தை இப்போது தலத் மெஹமுத் பாடிய…