Archive For ஜனவரி 30, 2013
சார், இன்னிக்குக் கோயிலுக்குப் போயிருந்திருக்கா போலே இருக்கு யார் சார்? என் மகள் தான் சார் எந்தக் கோவில்? ஊர்லே ஒரு கோவில் விட மாட்டா.. நான் இப்படின்னா அவ அப்படி.. திட்டினீங்களா? எதுக்கு? கையைக் குவிச்சு வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்துலே வந்தா.. அப்பா, உன் நெத்தியிலே என்ன இங்கே கீறல்.. அவ கையாலே மெல்ல நெற்றியைத் தொட்டுட்டு ‘ஓ..ஒண்ணுமில்லே’ன்னு போயிட்டா.. எனக்குத் தெரியும்.. என் நெத்தியில் சின்னக் கீத்தா அவ வீபுதி இட்டிருக்கா.. சிரிக்கிறார். அதில்…
1953-ம் வருடத்து தமிழ், மலையாள தினப் பத்திரிகைப் பிரதிகள் நண்பர்கள் யாரிடமாவது உண்டா? போட்டோ காப்பி எடுத்துக் கொண்டு நன்றியோடு (அடுத்த நாவலில் இரண்டாம் பக்கம்) திருப்பி அனுப்பப் படும். அட்வான்ஸ் தேங்க்ஸ்:-) ——————————————————————————————- எஸ்.ஜானகி தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதைப் புறக்கணித்திருக்கிறார் – தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களை விட வட இந்தியர்களே பத்ம விருதுகளுக்காக அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி. அவர் குறிப்பிடும் bias உண்மைதான். ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட தேசிய அங்கீகாரத்தைப் புறம் தள்ளுவது…
நானும் மனுஷ்யபுத்ரனோடு. நண்பர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன். இரா.முருகன் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்கு கண்டனம் சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த 17 வயது சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்த தமிழக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு எதிராக மதவாதிகள் தாக்குதல் தொடுப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் திங்களன்று (ஜன.28) வெளியிட்ட அறிக்கை…
பிரசவ வைராக்கியம் போல் பொய்யாக சென்னைப் புத்தகக் கண்காட்சி 2013 இன்னொரு முறை (இதோடு சரி) போனேன். 1) தமிழக அரசால் பொது உடமையாக்கப்பட்ட படைப்புகளை தி.ஜ.ர முதல் இரண்டு டஜன் படைப்பாளர்களாவது படைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை மறுபிரசுரம் செய்வதில் இங்கே கடை போட்டிருக்கும் நானூற்றுச் சில்லரை பதிப்பகங்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அரசுத் துறையிலேயே இந்தப் புத்தகங்களைக் குறைந்தது பத்தாயிரம் காப்பி அடித்து நூலகங்களில் வைத்து மீந்ததை வெளியே விற்கலாமே? 2) பொதுவுடமையாக்கப்பட்ட கல்கி தான்…
அன்பு நண்பர்களே இந்த வாரம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியான விஸ்வரூபம் நாவல் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகத்தோடு சேர்ந்து ஒரு நூல் அறிமுக விழா பிப்ரவரியில் நடத்த திட்டம் உண்டு. அதோடு கூட பிப்ரவரி 17 அல்லது 24 தேதி மாலை சென்னை கடற்கரையில் ஒரு சந்திப்பு வைத்துக் கொள்ளலாமா? நண்பர்கள் நாவலைப் படித்து உரையாட கிட்டத்தட்ட 4 வாரங்கள் நேரம் கிடைக்கும். உங்கள் பின்னூட்டங்களின் அடிப்படையில்…
கர்னாடகா மனம் இரங்காததால் காவிரி நீர் இல்லை. மழையும் பொய்த்துக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா விவசாயிகள் மூன்று போகம் சாகுபடி செய்த நிலை போய் ஒரு போகம் – குறுவை சாகுபடியோடு, அதையும் நிச்சயமில்லாத விளைவுகளை எதிர்பார்த்து நிறுத்த வேண்டிய நிலை. ஏக்கருக்கு ஐந்து அல்லது ஆறாயிரம் ரூபாய் நெல் விற்ற கணக்கில் கிடைக்கும் லாபம் எல்லாம் பணத்தில் சேர்த்தியா? தமிழக விவசாயி அவமானப்படுத்தப்பட்டு நிற்கும் நேரத்தில் வீட்டுமனை வியாபாரிகள் ஆசை காட்டி விளைநிலங்களை அவர்களிடமிருந்து வாங்குகிறார்கள்….