Archive For மார்ச் 19, 2013

A marriage in Kannurகண்ணூரில் ஒரு கல்யாணம்

By |

எழுத்துக்கு முதல் வாசகர் எழுதுகிறவர் தான். நாவல் எழுதும்போது முக்கியமாக அதை எடிட் செய்யும் போது இந்த வாசிப்பு திரும்பத் திரும்ப நிகழ வேண்டிய கட்டாயம் உண்டு. எழுதியதை எல்லாம் அப்படியே பதிப்பாளரிடம் கொண்டு போய்க் கூடையைக் கவிழ்த்துவிட்டு அவர் நல்ல முறையில் புத்தகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது முழுச் சோம்பேறித்தனமும் அலட்சியமுமான மனோபாவமும் ஆகும். ’புத்ர’ நாவலுக்கு நான் எத்தனை ட்ராப்ட் போட்டேன் தெரியுமோ? எங்க வீட்டுக்கு வந்து பாரு.. மேலே ஒரு…




Read more »

Comrade Nayanarதோழர் நாயனார்

By |

தோழர் நாயனார் First Year Remembrance (Onnam Charama Vaarshikam) – ————————————————————————- (written – May 2004 on the eve of Comrade Nayanar’s demise) தோழர் நாயனார் காலமானார். ஏரம்பால கிருஷ்ணன் நாயனாரைப் பற்றிய கலைடாஸ்கோப் பிம்பங்களாக அடுக்கடுக்கான நினைவுகள். அசல் கண்ணூர் மலையாளத்தில் எந்தத் தலைவரையும் பற்றி ‘ஓன்’ (அவன்) என்று குறிப்பிடும் சகஜம், யார் எத்தனை சொல்லியும் கவலையே படாமல் தோழர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டைக் கட்சிக் கூட்டத்தில் குறும்பாக ‘திருமேனி’…




Read more »

Kathakali and a wooden stoolகதகளியும் மர ஸ்டூலும்

By |

இன்னும் எத்தனை காலம் தான் புகைப்படத்தை தூரிகையில் முழுக்காட்டி வரும் ‘ஓவியம்’ தான் உயர்ந்த ஓவியப் படைப்பு என்று இங்கே சொல்வோமோ தெரியவில்லை. அஜந்தா, எல்லோராவில் தொடங்கி, தஞ்சைப் பெரிய கோவில் ஓவியம், நாயக்கர் கால ஓவியம், மொகலாய ஓவியம், மதுபனி ஓவியம், கம்பெனி ஓவியம், மரபு, நியோ கிளாசிசிசம், இம்ப்ரஷனிஸம், மாடர்னிஸ ஓவியம் என்று நல்ல ஓவியத்தை (இதில் மாலி, கோபுலு, மணியம் இப்படி பத்திரிகை ஓவியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்) அறிமுகப்படுத்த ஓவியர்கள் கூட்டு முயற்சி…




Read more »

Viswaroopam – Novel release function – videoவிஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா – ஒளிக் காட்சித் தொகுப்பு (சென்னை 2 மார்ச் 2013)

By |

விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா – ஒளிக் காட்சித் தொகுப்பு Viswaroopam – Novel release function – Video நன்றி கிழக்கு பதிப்பகம், பத்ரி சேஷாத்ரி Thanks (Please get this video from www.kizhakku.nhm.in)




Read more »

Pazhani Vaishnavarபழநி போன வீர வைஷ்ணவர்

By |

நமக்கு வேண்டப்பட்ட ஒரு வடகலையார் பழநி போனார். ஊரெல்லாம் பஞ்சாமிர்தமும், முருகா முருகா சத்தமும், ஜவ்வாது வீபுதியும் மொட்டைத் தலையில் சந்தனமும் மணக்கிறது. போகிறவன் எல்லாம் பழநி ஆண்டவரைத் தொழ மலை ஏறுகிறான். வருகிறவன் எல்லாம் இறங்கி வருகிறான். வீர வைஷ்ணவர் முருகன் கோவிலுக்குப் போவாரா என்ன? தேடிக் கொண்டு, லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வழி விசாரித்து ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தார். பெருமாள் தரிசனத்துக்கு இவர் போய் நிற்க, அவர் கோவணத்தோடு அனந்த சயனம் நீங்கி…




Read more »

Thalam and Si.Su.Chellappaசி.சு.செல்லப்பாவும் தளமும்

By |

தளம் சி.சு.செல்லப்பா நூற்றாண்டு சிறப்பிதழைப் பாதி படித்தேன். எனக்கு சி.சு.செல்லப்பா அவர்களோடு தொடர்பு கொள்ள ஒரு சந்தர்ப்பம் தான் வாய்த்தது. 1976-1981ல் சிவகஙகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணியில் இருந்தபோது தினமணி கதிர் பத்திரிகையில் (சாவி ஆசிரியர்) கோபுலு படங்களோடு மூன்று பக்கம் ஒரு புதுக்கவிதை – ’மாற்று இதயம்’ (இரவல் இதயம்?). சி.சு.செல்லப்பா எழுத்து பத்திரிகையில் எழுதியிருந்ததை சாவி கதிரில் மறு பிரசுரம் செய்தது அபூர்வமான நிகழ்வு. செல்லப்பா பற்றிய என் தேடல் அப்போதுதான் தொடங்கியது….




Read more »