Archive For டிசம்பர் 31, 2013
1. ’நான் ஓர் எழுத்தாளன்’ என்ற எண்ணம் முதலில் எப்போது தோன்றியது? நான் எழுதத் தொடங்கியது புதுக் கவிதைதான். தூண்டுதலுக்காக ரொம்ப தூரம் வெளியே போக வேண்டி இரு்க்காமல், எங்கள் ஊர் சிவகங்கையிலேயே, அதுவும் நான் படித்த கல்லூரியிலேயே எனக்குப் பேராசிரியராக இருந்தவர் தமிழ்ப் புதுக் கவிதையை மக்களிடம் எடுத்துச் சென்ற கவிஞர் மீரா (பேரா.மீ.ராசேந்திரன்). அவருடைய ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ புது கவிதைத் தொகுதியின் மூலம் எழுபதுகளில் உருவான கவிஞர்களில் நானும் ஒருவன்….
ப்ரிவாதினியில் நண்பர் ஓவியர் கேஷவ் சொற்பொழிவு – LecDem on ‘My Experiments with Krishna’. அந்நியோன்யத்தின் மறு பெயர் கேசவ். அடக்கத்துக்கும் அவர் முகவரிதான். காலையில் ஹிந்து பத்திரிகையில் கேசவின் அரசியல் கார்ட்டூனைப் பார்ப்பதில் பாதிப் பொழுது விடிகிறது என்றால், ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் அவருடைய ‘அன்றைய கிருஷ்ணா’ ஓவியத்தை தரிசிக்கும்போது காலை நிறைவாகத் தொடங்குகிறது நம்மில் பலருக்கும். ஒருநாள் கேசவ் ஓவியம் மேலே கூறிய சமூக வலைத் தளங்களில் வரவில்லை என்றால் காலை நேரத்துக் காப்பியைத்…
பரிவாதினி ‘பர்னாந்து’ விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. லலிதாராம் எதிர்பார்த்தபடி முதலில் கண்ணில் பட்டு வழக்கமான அன்பும் உற்சாகமுமாக வரவேற்றார். பர்னாந்து விருது – மிருதங்கம் உருவாக்கும் கலையில் விற்பன்னராக இருக்கும் குடும்பத்தில் போன தலைமுறை சாதனையாளார் காலம் சென்ற திரு பர்னாந்து என்ற பெர்னாண்டஸ். அவருடைய தகப்பனார் செவத்தியான் என்ற செபாஸ்டியனிடம் கற்று வழிவழியாக வரும் உருவாக்கக் கலை. பரிவாதினி இன்று விருது வாங்கி கவுரவித்தது பர்னாந்துவின் மகனான மிருதங்க உருவாக்கக் கலைஞர் திரு…
பெருந்தகவல் (Big Data) – இரா.முருகன் —————————————————————- பென்சில். அதை வைத்து துண்டு காகிதத்தில் அவசரமாகத் தொலைபேசி எண் எழுதி வைக்கலாம். ஆயிரத்து முன்னூற்று எண்பத்தெட்டை அறுபத்தேழால் பெருக்கினால் என்ன எண் வரும் என்று அதே காகிதத்தில் மிச்ச இடம் இருந்தால் கணக்குப் போட்டுப் பார்க்கலாம். படிக்கிற புத்தகத்தில் பிடிக்கிற இடங்களைக் கோடு போட்டு அலங்காரமோ அலங்கோலமோ படுத்தலாம். முனை மழுங்கினால் சீவலாம். காணாமல் போனால் இன்னொரு பென்சில் வாங்கலாம். பென்சிலை வைத்துச் செய்யக் கூடியவை இவை…
ஒவ்வொரு பாரதி பிறந்த நாளன்றும் அவரைப் பற்றிப் புதுசு புதுசாக நிறையப் படிக்கிறேன். இந்த வருடம் பத்திரிகையில் படித்ததிலிருந்து ‘அறிந்து கொண்டது’ – 1) பாரதி புதுவையில் இருந்தபோது மனைவி செல்லம்மா பாரதியிடம் ஒரு குவளை காப்பி கேட்க, அவர் இல்லை என்று சொல்லியிருக்கிறார். பாரதி கோபித்துக் கொண்டு வெளியே போய்விட்டார். 2) அப்போது அவரைத் தேடி வீட்டுக்கு வந்த பாரதிதாசன் விஷயம் அறிந்து பாரதியைத் தேடிப் போய் ஒரு டீக்கடை வாசலில் சந்திக்கிறார். அவர்களுடைய முகமதிய…
இது நண்பர் சு.ரவி வரைந்த ஓவியம் -ரவிவர்மா படைப்பை அடிப்படையாகக் கொண்டு இது நண்பர் கிரேசி மோகன் வெண்பா – ’’மரணா கதிக்கஞ்சி மார்கண்டன் செய்த சரணா கதிகண்ட சம்பு, -முரணாகக் கொன்றான் எமனையே, காப்பளித்து பக்திக்கு என்றும் பதினாறாய் ஏற்பு’’….கிரேசி மோகன்…. இது என் வெண்பா – என்றும் பதினா றெமக்கினிக் கிட்டாது அன்றலரும் பூவாக ஓவியங்கள் பொன்பாக்கள் மன்றாடீ நான்ரசிக்க மண்ணில்தா நட்பாக என்றும் அறுபத்தொன் று. ——————- செயல் மறந்து வாழ்த்துதுமே’, as…