Archive For பிப்ரவரி 7, 2014

Pakal Paththu Raa Paththu – Chapter 9பகல் பத்து ராப் பத்து – அத்தியாயம் 9

By |

பகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 9 ’முன்னூற்று முப்பத்தஞ்சு ரூபாய்’. ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். மொட்டை மாடி அரை இருட்டு. காரை பெயர்ந்த தரையில் நேர் கோடாகக் கிடக்கும் தண்ணீர்க் குழாய்களைத் தாண்டித் தவிர்த்தபடி. ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். நீளக் கட்டிய பிளாஸ்டிக் கயிற்றுக் கொடியில் உலர்த்தி எடுக்க மறந்துபோன மார்க் கச்சையின் கொக்கி காதில் பிறாண்ட .. யாரோடது இத்தனை பெரிசா.. லேசான ஈர வாடையை முகர்ந்தபடி….




Read more »

Pakal Paththu Raa Paththu – Chapter 8பகல் பத்து ராப் பத்து – அத்தியாயம் 8

By |

பகல் பத்து ராப் பத்து – இரா.முருகன் அத்தியாயம் 8 ‘ஆவிக்னான் பட்டணத்துக்காரிகள்.. கேள்விப் பட்டிருக்கியா ப்ரீதி?’ பெரைரா காரை ஓட்டிக் கொண்டே கேட்டான். சோடியம் வேப்பர் விளக்குகளின் சீரான வெளிச்சத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டிருந்தது விக்டோரியா டெர்மினஸ். பரபரப்பெல்லாம் ஓய்ந்து வெறிச்சோடிக் கிடந்த தெருவில் வாழைப்பழ வண்டிக்காரர்களின் குரல் தான் மிச்சம் இருந்தது. ‘ஆவிக்னான்.. பிகாஸோ வரைஞ்ச ஓவியம் தானே? தெரியும். காலேஜ்லே ஆர்ட் அப்ரிசியேஷன் ஒரு பாடம் எடுத்துப் படிச்சதுலே தான் பிகாஸோ, வான்கோ,…




Read more »

Pakal Paththu Raa Paththu – Chapter 7பகல் பத்து ராப் பத்து – அத்தியாயம் 7

By |

பகல் பத்து ராப் பத்து – இரா.முருகன் அத்தியாயம் 7 டங்கல். இது ஒரு மனிதனின் பெயரா இல்லை ஏதாவது வஸ்துவா என்று சாந்தாபாய்க்குப் புரியவில்லை. மதியத்திலிருந்து சாரிசாரியாக வந்த ஆரஞ்சு நிறத் தலைப்பாகைக் காரர்கள் விக்டோரியா டெர்மினஸ் முன்னால், மலைப்பாம்பு கிடப்பது போல, நீள வளைந்து போகிற சங்கிலி போல, கையைக் கோர்த்து நின்றபோது, உரத்த குரலில் திரும்பத் திரும்பச் சொன்னது ‘டங்கல்’. ஆஸாத் மைதானத்தில் அப்புறம் அவர்கள் பிரம்மாண்டமான கூட்டமாகக் கூடி இந்தியிலும், மராத்தியிலும்…




Read more »

Pakal Paththu Raa Paththu – Chapter 6பகல் பத்து ராப் பத்து – அத்தியாயம் 6

By |

பகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 6 ப்ரீதி வெராண்டாவில் வந்து நின்றாள். ஐந்து மணிக்குக் கார் அனுப்புவதாக விக்ரம் சொல்லியிருக்கிறான். பெரைரா நேரே ஓட்டலுக்கு வந்து விடுவானாம். பெரைரா சரி என்றால் எல்லோருக்கும் சரி தான். பெரைரா ஆர்ட் பிலிம் எடுக்க என்.எப்.டி.சிக்கு கடன் கேட்டு மனுப் போட்டிருக்கிறானாம். யார் கண்டது, எல்லாம் கூடி வரும் பட்சத்தில் ஷபானா ஆஸ்மி போல, தீப்தி நவ்வால் போல, ஸ்மிதா பட்டீல் போல… ப்ரீதி அஹூஜா… வேண்டாம்…..




Read more »

Pakal Paththu Raa Paththu – Chapter 5பகல் பத்து ராப் பத்து – அத்தியாயம் 5

By |

பகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 5 ’மணி என்ன நசீம்பாய்?’ சாந்தாபாய் பின்கழுத்து வியர்வையைத் துடைத்தபடி கேட்டாள். யாருக்கோ பாட்டில் கழுவுகிற பிரஷ் எடுத்துக் கொடுத்தபடி மூன்று விரலைக் காட்டினான் அவன். மூன்று மணி. ஏதாவது சாப்பிட்டால்தான் கொஞ்சம் போலாவது தெம்பு வரும். பணம் வைக்கிற தகர டப்பாவைப் பார்த்தாள். பரவாயில்லை…அறுபத்தைந்து ரூபாய்க்கு வியாபாரமாகி இருக்கிறது. கிளம்புகிறதுக்குள் ஒரு இருநூறு தேறினால், ஜம்னாதீதி முகத்தில் விட்டெறியலாம். சாப்பிடறே.. புடவையை வழிச்ச்சுட்டுக் குத்த வைக்கறே.. சாப்பிடாத…




Read more »

Pakal Paththu Raa Paththu – Chapter 4பகல் பத்து ராப் பத்து – அத்தியாயம் 4

By |

பகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 4 ராமபத்ரன் ஓபராய் ஓட்டலை ஒட்டி நிழலில் நின்றார். டிபன்வாலா நேரம் தவறாமல் கொண்டு வந்து கொடுத்த காரியரில் வத்தல் குழம்பும் தயிர் சாதமும் சாப்பிட்ட திருப்தி. நல்ல வேளையாக அகிலாண்டம் புளியோதரை வைக்கவில்லை. ‘சூனாம் தே..’ தட்டுக்கடைக்காரன் டூத் பேஸ்ட் போல ட்யூபில் அடைத்த சுண்ணாம்பை நீட்டினான். கடற்காற்று மெரின் டிரைவ் பக்கமிருந்து சீராக வீச ஆரம்பித்திருக்கிறது. மணி பார்த்தார். இரண்டு முப்பது. இன்னும் ஒரு பதினைந்து…




Read more »