Archive For டிசம்பர் 1, 2014
அச்சுதம் கேசவம் 1 மழை குளிரக் குளிரப் பெய்து கொண்டிருந்தது. நேற்று விடிகாலையில் அது தயக்கத்துடன் ஆரம்பித்தது. தலையில் துணி வைத்து உட்கார்த்திய பலாப் பழமும், தோளில் தொங்கும் துணி முடிச்சில் பழுத்துக் கொண்டிருக்கும் மாம்பழங்களும், கையில் பிடித்த பூவன் பழக் குலையுமாக வீட்டு வாசலில் நின்று கதவைத் தட்டுகிற வயசன் அம்மாவன் போல மழை. தவறான வீட்டுக்கு முன் நின்று ஒச்சையிட்டுக் கதவு தட்டுகிறதாகத் தோன்ற பம்மிப் பதுங்கி நிற்கிற கிழவன். வரணும் வரணும். ஸ்ரீகிருஷ்ணன்…
எஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து நிற்கவே ஏகப்பட்ட பிரயத்தனம் தேவை. இதோடு கூடவே புதிதாகப்…
ஆப்பிரிக்கத் தமிழ்க் கிராமக் கதைகள் (‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி) எழுத்தாளனாக இருப்பதில் ஒரு சௌகரியம். இலக்கியம் சம்பந்தமாக எந்த நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் அநேகமாக சம்மன் இல்லாமல் ஆஜராகி விடலாம். அதுவும் வேற்று நாட்டில், குறிப்பாக ஸ்காட்லாந்து என்றால் கேட்கவே வேண்டாம். ஸ்காட்லாந்தில் வெய்யில் காலம் ஆரம்பிக்கும்போது அந்தப் பிரதேசமே விழாக் கோலம் பூண்டுவிடும். ஒரே நாளில் பத்து இடத்தில் நாடக விழா, இன்னொரு நாலு தியேட்டரில் கலைப் படங்கள், நாலைந்து மேடைகளில் சாஸ்திரிய, பாப்…
(Excerpt from a forthcoming book ) ஏதோ ஒரு பக்கம் (இரா.முருகன்) குறும்பட சந்தோஷம் சமீபத்திய சந்தோஷங்களில் ஒன்று ‘ரெட்டைத் தெரு’ குறும்பட வெளியீடு. நேர்பட, எதுவும் தவறாமல் நடந்து முடிந்த் விழா அது. பொதுவாக, பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் சென்னை வழக்கத்தை விட மற்ற ஊர் வளமுறை கொஞ்சம் இறுக்கம் தளர்ந்திருப்பது வாடிக்கை. அது சில சமயம் ஓர் ஆசுவாசம் தரும். பல நேரங்களில் எரிச்சலையும் உண்டாக்கும். இந்த ‘சரி, செஞ்சுடலாம்’ ரிலாக்சேஷன் அரசுத்…
(Excerpt from a forthcoming book ) ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் கும்பகோணம் என்று எங்கேயாவது கேட்டால் எனக்கு வென்னீர் பக்கெட் தான் உடனடியாக நினைவு வரும். அதென்னமோ, வேறே நாட்டுக்கு, ஊருக்குப் பயணம் போகும்போது எல்லாம் சாவதானமாக திட்டம் போடுவேன். ராமராஜ் உள்ளாடை தொடங்கி பல் துலக்கும் பிரஷ் ஈறாக எடுத்துப் போக வேண்டியவற்றின் பட்டியல் தயாரிக்கப்படும். சேர்த்து வைத்திருந்த அந்தப் பட்டியல்களை இப்போது பார்க்கும்போது ஒன்று சட்டென்று புரிகிறது. பத்து வருடம் முன்னால்…
இன்றைய (நவம்பர் 13, 2014) தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள என் கட்டுரை வீட்டுக் கடனைக் கட்டிப் பார் வங்கிகள் பிறப்பதற்குக் கன காலம் முன்பே வசிப்பிடத்தின் பேரில் வழங்கப்படும் வீட்டு அடமானக் கடன் (Mortgage Loan) புழக்கத்துக்கு வந்துவிட்டது. வீட்டு உடமைக்கான ஆவணத்தைக் கடன் வழங்கும் வங்கியிடம் கொடுத்து வைத்திருந்து, வாங்கிய தொகையை வட்டியோடு கட்டி முடித்தவுடன் அந்தப் பத்திரத்தைத் திரும்ப வாங்குவது அடமானக் கடனுக்கான நடைமுறை. பெரும்பாலும் புது வீடு கட்டவோ, கட்டிக் குடியிருக்…