Archive For அக்டோபர் 18, 2014

பங்குக்கு முந்தலாமா?

By |

பங்குக்கு முந்தலாமா?

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் என் கட்டுரை பங்குச் சந்தை என்னும் மாய உலகம் எப்படியெல்லாம் இயங்குகிறது! பங்குச் சந்தை சுவாரசியமான இடம். அங்கே ஜெயித்தவர்கள் மேலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், ‘ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெறுவது எப்படி?’ என்று புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மூலதனத்தைப் பொதுமக்களிடம் பங்குத்தொகையாக வாங்கிச் சேர்த்து நடைபெறும் நிறுவனங்களின் லாப நிலவரம், வளர்ச்சிக்கான வாய்ப்பு, சொத்து மதிப்பு இப்படிப் பலவற்றையும் பொறுத்துப் பங்கு மதிப்பு உயரும் அல்லது தாழும். பங்கு விலை குறையும்போது வாங்கி,…




Read more »

வாரபலன் – திண்ணை பத்தி (2004)

By |

முன்பெல்லாம் மாத ஜோதிடம், பவான்ஸ் ஜெர்னல் தவிரப் பிற பத்திரிகைகள் வருடம் பிறந்தது முதல்கொண்டு நர்சரி குழந்தைகள் போல் ஏபிசி ஏபிசி என்று நொடிக்கொரு தடவை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆடிட் பீரோ ஓஃப் சர்க்குலேஷன் என்ற இந்த ஏ.பி.சி இந்தியப் பத்திரிகைகளின் விற்பனை, வாசகர் தளத்தின் பரப்பளவு விவரங்களை மொழிவாரியாகத் தொகுத்து வருடா வருடம் வெளியிடும். நான் முந்தியா நீ முந்தியா என்ற மார்தட்டல், சவால் இன்னோரன்னவை மொழிக்கு மொழி அகில பாரத நாடகமாக அரங்கேறும் இந்த…




Read more »

அற்ப விஷயம் -11 நாக்கு மூக்கு

By |

அற்ப விஷயம் -11 நாக்கு மூக்கு இரா.முருகன் காப்பி சாப்பாட்டு ரசனை இன்னும் பிடி கிட்டாத ஒரு சங்கதி. காலை காப்பியில் ஆரம்பிக்கலாம். சில பல பேருக்கு வீட்டில் ரதியாக பெண்டாட்டி இருக்கக் கூடும். அந்தம்மா பின் தூங்கி முன் எழுந்து வாசலில் பத்திரிகையோடு வந்து விழும் ஆவின் பால் பாக்கெட்டை எடுப்பார். கள்ளிச் சொட்டாக காப்பி கலந்து கொண்டு வந்து ஐயாவை எழுப்புவார். இவர் அதைக் கடனே என்று குடித்து விட்டு செருப்பில் காலை நுழைத்துக்…




Read more »

அற்ப விஷயம்-5 காலர் வைத்த சட்டை

By |

“சட்டை போட்டிருக்கீங்களா சார்?” நான் கேட்டேன். தொலைபேசியில் எதிர்முனையில் ஒரு வினாடி மௌனம். ‘புரியலையே’. மும்பையிலிருந்து வாரக் கடைசியில் சென்னை வந்திருக்கும் பிரபல இயக்குனர் அவர். சர்வதேச அளவில் அவருடைய கலைப்படங்கள் விருதுகளை வாரிக் குவித்தவை. ‘ஓய்வாக உட்கார்ந்து சாப்பிட்டபடியே இலக்கியம், சினிமா பற்றி எல்லாம் பேசலாம்’ என்று அவரிடம் யோசனை சொன்னது நான் தான். எங்கே உட்கார்ந்து பேசுவது? பத்திரிகையாளரும் நேற்றைய விளையாட்டு நட்சத்திரமுமான இன்னொரு நண்பர் உதவிக்கு வந்தார். இயக்குனருக்கு அவரும் சிநேகிதர்தான். ‘எங்க…




Read more »

பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார் – தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை

By |

இன்றைய தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார் ’புடவையும், சட்டைத் துணியும், அடுக்குப் பாத்திரமும், குடையும், இங்க் பாட்டிலும், கொண்டை ஊசியும், கடிகாரமும், ரூல்தடியும், பேனாக்கத்தியும், சாமி படமும், குண்டூசி டப்பாவும் என்று உலகில் படைக்கப்பட்ட சகலவிதமான பொருள்களையும் மணியை அடித்து அடித்துக் கொடுக்க, கண்ணாடிக்காரரும், நீலச்சட்டைக்காரரும், கழுத்தில் மப்ளர் சுற்றி இருக்கிறவரும், வலது கோடியில் உசரமாக நிற்கிற அண்ணாச்சியும் வாங்கிக் கொண்டு கூட்டத்தில் கலக்க, ராத்திரி பத்து மணியானதே தெரியாது’….




Read more »

லண்டன் டயரி புத்தகத்தில் இருந்து தலைவெட்டி லண்டன்

By |

லண்டன் டயரி புத்தகத்தில் இருந்து தலைவெட்டி லண்டன் டியூடர் வம்ச முதல் அரசனான ஏழாம் ஹென்றி காலம் லண்டன் மாநகரின் அமைப்பையும் வளர்ச்சியையும் பொறுத்தவரை ஒரு பொற்காலம். ஐரோப்பியக் கலை, இலக்கிய உலகில் புதிய சிந்தனைகள் வெளிப்பட்டுப் புதுமை படைத்த மறுமலர்ச்சிக் காலம் (ரினைசான்ஸ்) இதுவே. வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலய வளாகத்தில் மறுமலர்ச்சிக் காலத்துக்கே உரிய அற்புதமான கட்டிட அமைப்போடு கூடிய, கிட்டத்தட்ட உலக அதிசயங்களில் ஒன்றான ‘ஏழாம் ஹென்றி வழிபாட்டு அரங்கு’ அமைத்தான் ஏழாம் ஹென்றி. தனக்கு…




Read more »