Archive For செப்டம்பர் 21, 2014
‘வீடு மாதிரியே சகல வசதியும் கொண்ட‘ என்று விளம்பரப் படுத்தப்படும் சாப்பாட்டு ஹோட்டலையோ, லாட்ஜையோ கண்டால் பலபேர் எப்படி காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்புத் துண்டாக அங்கே போய் விழுகிறார்கள் என்பது புரியாத சமாசாரம். இப்படியான ‘ஹோம்லி’ அடைமொழியை விளம்பரப் பலகையில் பார்த்ததுமே கங்காருவாக நாலடி அந்தாண்டை தாண்டிக் குதித்து ஓடி ரட்சைப்பட வேண்டாமோ! படாதவன் பட்ட பாடு, அதுவும் பரங்கி தேசத்தில் – ஏன் கேக்கறீங்க, இதோ. “முழிச்சிக்கோ பாய், இடம் வந்தாச்சு. வீடு கணக்கா சவுகரியமான…
இவிடம் நாவிற்கினிய எள்ளுப் புண்ணாக்கு அது என்னமோ தெரியவில்லை. சுவாரசியமான அறிவிப்புப் பலகைகள் என்னை விடாமல் துரத்துகின்றன. ஒரு மழைக்கால சாயந்திரத்தில் கையில் உயர்த்திப் பிடித்த குடையோடு புறநகர் கடைத்தெருவில் போய்க் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இது -‘இவ்விடம் நாவிற்கினிய அரிசி, குருணை, தவிடு மற்றும் எள்ளுப் புண்ணாக்கு கிடைக்கும்.’ அடுப்பில் ஏற்றி வடித்தால் பொலபொலவென்று மல்லிகைப்பூ வெண்மையோடு சோறாக உதிரும் அரிசி இந்த நாக்கு இருக்கும் வரை சுவையானதுதான். குருணை? நாலு நாள் காய்ச்சலில் நாக்கு…
சற்றே நகுக – தினமணி கதிர் பத்தி – 2006 – இரா.முருகன் மத்தியம வில்லன் காலையில் பத்திரிகை வந்து விழக் காத்துக் கொண்டிருந்தபோது கை விரல் தன் பாட்டுக்கு டெலிவிஷன் பெட்டியின் ரிமோட்டை அழுத்துகிறது. சானல் சானலாகத் தாவுகிற காட்சி. சகலமான மொழியிலும் போன, முந்தைய தலைமுறைக்காரர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு சானலில் பழைய சினிமா பாட்டு சீன். புஷ்டியான கருப்பு வெள்ளை சுந்தரிகள் சேலை மாதிரி எதையோ தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு தொம்தொம்மென்று தரையதிரக் குதிக்கிறார்கள்….
எம்டன் போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் குண்டு போட்டது செப்டம்பர் 22-ம் தேதி 1914-ம் ஆண்டில். இந்த ஆண்டு எம்டனுக்கு நூறு ஆண்டு! இதைக் கொண்டாட கிட்டத்தட்ட 100 நிமிடம் நிகழும் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறேன். 1914-ல் கொத்தவாசல் சாவடியை முக்கிய நிகழ் களனாகக் கொண்டு நடைபெறும் நாடகம் இது. பெயர் ‘சாவடி’ (கொத்தவால் சாவடி). நாடகத்தை செப்டம்பரில் நிக்ழத்தினால் எத்தனை பேர் பார்க்க ஆர்வமாக உள்ளனர் என்று அறிய ஆவல். மற்ற தமிழக நகரங்களிலும் ஆர்வலர்…
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 3 தேசிகர் ஒடுக்கத்தில் இருக்கிறார். வெளியே ஓதுவார்கள் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமான தேவாரப் பண் இல்லை. இங்கிலீஷ் மோஸ்தரில் கட்டிய பாட்டு… ’துங்கஞ்சார் தருதுரைசை யில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே…’ அலையில் மிதக்கிற படகுபோல, பெங்குவின் பறவைகள் கூட்டமாக அடியெடுத்து வைக்கிறது போல், தோய்த்து உலர்த்திய காவித் துணிகள் காற்றில் பறந்து அலைக்கழிவது போல… காதிலே ஜவ்வந்திப் பூ வைத்து, கூரை வேய்ந்த மண்டபம் அதிரக் குதித்துக்…
(தி இந்து தமிழ் இதழில் 25.2.2014 இதழில் வெளியானது) ஆதியில் இனியாக் இருந்தது. 2,000 சதுர அடி இடத்தில் 18,000 மண்டை வால்வுகளை அடுக்கி, இணைத்து உருவாக்கிய கணிப்பொறி அது. 10 இலக்க எண்களை நினைவில் வைத்துக் கூட்டிக் கழித்து, அந்த முதன்மை (மெயின் ஃப்ரேம்) கணிப்பொறி 1940-களில் அமெரிக்க சர்க்கார் கணக்குகளைப் போட்டது. “இனியாக் போல இன்னும் 10 முதன்மைக் கணிப்பொறிகள் போதும், உலகக் கணக்கு வழக்குகளை யெல்லாம் போட்டுவிடலாம்” என்ற அறிவியல் ஆரூடம் பொய்யானது…