Archive For பிப்ரவரி 18, 2014
விஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் (இரா.முருகன்) – பகுதி 1 ’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம். இந்தக் குறுநாவலே ’பயோபிக்ஷன்’ வாழ்க்கை வரலாற்று நாவலாக 2005-ல் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாகிப் பின்னர் நூல் வடிவமும், குறும்பட வடிவமும் பெற்ற ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’வுக்கு ஊற்றுக்கண். என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில் (அட்சரா வெளியீடு – 1995) இடம்பெற்ற படைப்பு இந்த…
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் என்னளவில் ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்’ ஒரு முக்கியமான படைப்பாகும். சம்பிரதாயமான கதையாடலில் இருந்து விலகி மாய யதார்த்தத்தை நோக்கி நான் நகர்ந்தது இந்தக் குறுநாவல் மூலம் தான். பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்ட புதிய பார்வை இதழில் பிரசுரமான இந்தக் குறுநாவலுக்குப் பிறகு, ‘மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’ தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதைகள் வழியே ‘அரசூர் வம்சம்’ வந்தடைந்தேன். —————————— அத்தியாயம் 1 பாக்கியலட்சுமி…
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 7 ’கனகாம்பரம்.. மல்லி.. பிச்சிப்பூ..’ எருமைக்காரன் தெருவில் அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. வீடு வீடாக நின்று போகிற பூக்காரி முத்தம்மா டீச்சர் வீட்டு ஜன்னல் பக்கம் ஒரு வினாடி நின்று குரல் கொடுத்தாள். இன்றைக்கு வெள்ளிக்கிழமை இல்லை. டீச்சர் கதம்பம் வாங்கி வீட்டில் படத்துக்கு எல்லாம் சார்த்துவது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான். ஆனால் என்ன.. மற்ற நாளில் பூ வாங்கக் கூடாதா என்ன? ‘மல்லிப்பூ நாலு…
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 6 கடைசி ஒத்திகைக்கான ஞாயிற்றுக் கிழமை, காலையிலிருந்தே ஜோதி அக்கா அழுது கொண்டிருந்தாள். புகுந்த வீட்டிலிருந்து பிரசவத்துக்கு வந்து ஒரு மாதமாகிறது. வீட்டுக்காரனோ வேறு யாருமோ வந்து பார்க்கவில்லையாம். சீர் செனத்தியில் குறைச்சலாம்.. ‘பொம்பளைப் புள்ளே… சின்னவ இவ தலையெடுத்து எல்லாம் செய்ய வேண்டியிருக்கு..கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா பொறுத்துக்குங்க சம்பந்தி.. அடுத்த மாசம் லோன் போடப் போறா..’ போட்டு வைத்திருக்கிறது. ஒரு பவுனில் மோதிரம்…
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 5 இயற்கை மனிதனுக்கு அளித்த செல்வங்களில் மகத்தானவை நிலமும் நீரும் ஆகும். நிலத்தில் வளரும் செடிகொடிகளும், மரங்களும், மனிதனின் பசியைப் போக்க உணவையும், சுவாசிக்க நல்ல காற்றையும் வழங்குகின்றன. நிலத்தின் அடியிலும் இயற்கை பல்வேறு கனிம, படிவ வளங்களை வெகுமதியாகக் கொடுத்துள்ளது. நான் அவற்றில் ஒன்று. என் பெயர் நிலக்கரியாகும். முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டு திருத்திக் கொண்டிருந்தாள். ஏழாவது வகுப்புப் பாடம். முப்பத்தாறு நோட்டுகளில்…
வாய் நிறைய மனம் நிறைய அவரே அன்போடு வரவேற்றார் ‘தலைமுறைகள்’ ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரீவ்யூ தியேட்டரில் சிறப்புக் காட்சியின் போது. சமீபத்திய நாவல் பிரதிகளைக் கொடுத்தேன். வாங்கி ஒரு நிமிடம் குழந்தை கன்னத்தை வருடுகிற மாதிரி வாஞ்சையோடு வருடி விட்டுப் பின்னால் நின்ற நண்பரிடம் கொடுத்தார். ‘ஸ்கிரீனுக்கு ரொம்ப் பக்கத்தில் உட்கார்ந்திடாந்திங்க’ என்று பக்கத்து இருக்கையைக் காட்ட, அருகே எங்கள் மதிப்புக்குரிய தோழர் ஜி.ஆர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் தமிழ்நாடு செயலர்). ஜி.ஆர் இன்னும் படத்தின் பாதிப்பில் இருந்து…