Archive For ஜனவரி 31, 2014
பகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 4 ராமபத்ரன் ஓபராய் ஓட்டலை ஒட்டி நிழலில் நின்றார். டிபன்வாலா நேரம் தவறாமல் கொண்டு வந்து கொடுத்த காரியரில் வத்தல் குழம்பும் தயிர் சாதமும் சாப்பிட்ட திருப்தி. நல்ல வேளையாக அகிலாண்டம் புளியோதரை வைக்கவில்லை. ‘சூனாம் தே..’ தட்டுக்கடைக்காரன் டூத் பேஸ்ட் போல ட்யூபில் அடைத்த சுண்ணாம்பை நீட்டினான். கடற்காற்று மெரின் டிரைவ் பக்கமிருந்து சீராக வீச ஆரம்பித்திருக்கிறது. மணி பார்த்தார். இரண்டு முப்பது. இன்னும் ஒரு பதினைந்து…
பகல் பத்து ராப் பத்து இரா.முருகன் ——————————————————————————————– அத்தியாயம் 3 ப்ரீதி குளித்துக் கொண்டிருந்த பொழுது டெலிபோன் ஒலித்தது. விக்ரம்… கோகுல் .. டெல்லியிலிருந்து பல்பீர் .. சீனாக்காரி அண்ணி.. பாத்டப்பிலிருந்து ஒரு கையை உயர்த்தி எடுக்க, ரிசீவர் தண்ணீரில் மிதந்தது. ‘மாதம் ஆறாயிரம் வாடகை… ஃப்ளாட்டில் ஃபோன், கீஸர்ம் பாத்டப், மைக்ரோ அவன் என்று சகலமானதும் ரொப்பியிருக்கிறேன்.. ரெண்டு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் .. ஏதாவது ஒண்ணு நோக்காட்டில் விழுந்திருந்தால், உன் அட்வான்ஸ்…
பகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 2 ’பாஞ்ச் ரூப்யோ கோ தோ .. பாஞ்ச் கோ தோ ..’ சாந்தாபாய் யந்திரமாகக் கூவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் தவழும் கிருஷ்ணன். பொடிப்பொடியாகத் தரையில் விழுந்து கொண்டிருந்த கிருஷ்ணன் கோலத்தைச் சுற்றி விரையும் கால்கள். இது ஆபீஸ் போகிற கூட்டம். கொலாபாவும், நாரிமன் பாயிண்டும் இன்னும் சமுத்திரக் கரையை ஒட்டிய மகா உயரக் கட்டிடங்களுமே இவர்களின் காலை நேர லட்சியம். சாந்தாபாயும், கோலக் குழல் கிருஷ்ணனும்,…
என் குறுநாவல்களில் மும்பாயைக் களனாகக் கொண்டது ‘பகல் பத்து ராப்பத்து’. 1990-களின் மத்தியில் மும்பை வங்கிக் கிளைகளில் கிளையண்ட் சர்வர் கம்ப்யூட்டிங்கில் யூனிக்ஸ் பிரதிஷ்டை செய்து சைபேஸ் டேட்டாபேஸ் கட்டி எழுப்புவது தொடங்கி நாங்களே உருவாக்கிய சி-மொழி அடிப்படையான மென்பொருளும், ஹப், டெர்மினல் கான்சண்ட்ரேட்டர் இன்னோரன்ன வன்பொருளும் சீராக நிறுவி வெற்றிகரமாக இயங்க வைக்க உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம். நாளின் 18 மணி நேரம் கிளைகளிலும், மற்ற நேரம் செண்ட்ரல், வெஸ்டர்ன், ஹார்பர் என்ற மூன்று…
சென்னை புத்தகக் கண்காட்சி – ஜீவா சிற்றரங்கு காலச்சுவடு வெளியீடான ‘ஸ்ரீதரன் சிறுகதைகள்’ புத்தகத்தை பி.ஏ.கே அண்ணா வெளியிட்டுப் பேசினார். என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய நண்பர்கள் லண்டன் பத்மனாப ஐயர், மு.நித்தியானந்தன் ஆகியோர் நிறுவிய தமிழியல் தரும் நூல் இது. ஐயர் லண்டனிலிருந்து தொலைபேசி புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீதரன் கதைகளை வெளியிட்டுப் பேச வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்ததைத் தட்ட முடியவில்லை என்றார் பி.ஏ.கே. 2002-ல் ஸ்ரீதரன் கதைகளைப் புத்தகமாக்க முயற்சி எடுத்து…
Somehow I strongly believe that along with digital books, the emerging paradigm of publishing will lay more stress on graphic novels and audio books. The changing paradigm may help in restricting the role of social networking as the hyperbole enabler for all things literary, as observed now. The emerging trend in publishing could broadly be…