Archive For பிப்ரவரி 25, 2014
நாளை மறுநாள் சுஜாதா சார் நினைவு நாள். நான் புதிய தலைமுறை 27-2-2014 இதழில் எழுதியுள்ள கட்டுரை இது (புதிய தலைமுறைக்கு நன்றியோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்) சுஜாதா நினைவு இரா.முருகன் ————————— திரும்பிப் பார்ப்பதற்குள் சுஜாதா இல்லாத இன்னொரு ஆண்டு கடந்து போய் அடுத்த நினைவு தினம். நாற்பது, நானூறு பேர் கூடி, ஆளுக்கு நாலு சுஜாதா தொட்ர்பான சம்பவங்கள், திமலா சிறுகதை விசேஷம், சுஜாதா இல்லாத எந்திரன் சினிமா என்று பேசி, ஒரு நிமிடம்…
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 7 இன்று மீன் ஒலிபரப்பு இல்லை. சாயந்திரம் ‘பரிபாலய ரகுராமா’ இல்லை. டாக்டர் வீட்டில் இருந்து அழுகை சத்தம். ‘நீ என்ன காப்பி கொண்டு போறது.. நான் சாதம் போட மாட்டேனா.. எங்கேயோ ஒழியறேன்… எல்லாரும் சௌக்கியமா இருங்கோ.. சந்தி சிரிச்சா என்ன போச்சு?’ டாக்டர் வீட்டு மாமி குரல் தான். மாமி விடுவிடுவென்று படி இறங்கிப் போனாள். ‘அம்மா..’ வீரபத்ரன் பின்னாலேயே ஓடினான். ‘விடுடா வீரபத்ரா.. நெட்டூருக்கு நிலத்தைப்…
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 6 நான் உள்ளே நுழைந்தபோது, வீட்டுக் கூடத்தில் மெகருன்னிஸா. இப்படிச் சுவரில் சாய்ந்து கொண்டு, காலை நீட்டிக் கொண்டு தொடர்கதை படிப்பதை அசன் ராவுத்தர் பார்த்தால் தொலைந்து விடுவார். அம்மாவுக்கு அவள் என்னமோ செல்லம். நித்தியப்படிக்கு மதியம் இங்கே தான். அம்மாவுக்கு எம்பிராய்டரி தெரியும். அதைக் கற்றுக் கொள்ள வருவதாகச் சாக்கு. ’நீங்க வச்ச மைசூர் ரசம் ரெம்ப நல்லா இருந்திச்சு மாமி… இவஹளே பூராக் குடிச்சுட்டாஹ..’ என்று அக்பரின்…
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 5 முறை வைத்துக் கொண்டு மீன் ஆபீஸிலும் சைக்கிள் ஆபீஸிலும் ஒலிபரப்பு நடத்தினார்கள். மீன் ஆபீஸில் ‘கப்பலோட்டிய தமிழன்’ பாட்டும், ‘திருவிளையாடல்’ வசனமும் போட்டார்கள். ‘நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி..சீவி.. சீவி..’ என்று கிராமபோன் மக்கர் செய்த போது நிறுத்தி, ‘நான் கவிஞனுமில்லை’ போட்டார்கள். ‘இங்கே ஒரு வருஷமாக விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கின்றன.. காப்போம் தேசம். இல்லையென்றால் நாசம்’.. என்று எழுதி வைத்துக் கொண்டு யாரோ படித்தார்கள்….
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 4 டாக்டருக்கு மீன். பாலுசாமிக்கு சைக்கிள். கேட்டதும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மீனை சுலபமாக சாக்குக் கட்டியாலோ பேனாவாலோ வரைந்து விடலாம். டிராயிங் மாஸ்டர் சொல்லிக் கொடுத்ததில் அதுதான் சுலபமாக வரைய முடியும். ஆனால் சைக்கிள்? ஓட்டத்தான் முடியும். ஒரு சுவர் விடாமல் மீன் வரைந்து தள்ளி விட்டார்கள். மிஞ்சிய இடத்தில் சைக்கிள் எழுத ஒருத்தன் பிரஷ்ஷும் கையுமாக அலைந்தான். வக்கீல் ஆபீஸுக்குப் பக்கத்து வீட்டில் ‘சைக்கிள்’ ஆபீஸ். நாங்கள்…
நண்பர் ஒருத்தர் விடிகாலையிலே யோசிக்க வைத்து விட்டார். ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார் – ஏன் சார், ஈபுக் ஈபுக்குனு சொல்றீங்களே.. அறிவியல் ஈபுக் இருக்குதுன்னு வைங்க… புத்தகம் வந்து வித்துட்டு இருக்கற போதே அந்த டெக்னாலஜி மாறிடலாம்.. அப்போ வாங்கின புத்தகத்தை என்ன செய்யறது? இன்னொரு புது பதிப்பு வரும்.. வாங்கி வச்சுக்க வேண்டியது தான்.. அது எதுக்கு முழு புத்தகத்தையும் திரும்ப ஒரு தடவை டௌண்லோட் செய்யணும்.. எது மாறி இருக்கோ அதை…