Archive For பிப்ரவரி 20, 2014

Vishnupuram thErthal – Part 3விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 3

By |

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 3 ———————————————————————— ‘என்னடா அம்பி.. படக்கூடாத எடத்துலே கிரிக்கெட் பந்து பட்டு வீங்கிடுத்தா?’ டாக்டர் சதானந்தம் ஒரு கட்டு வெற்றிலையை மேஜை மேல் வைத்து சாவதானமாக மென்று கொண்டிருந்தார். ‘இல்லே டாக்டர் மாமா.. இது மருந்து சீசா..’ நான் டிரவுசர் பையிலிருந்து வெளியே எடுத்தேன். ‘தாத்தாவுக்கு… மூணு நாளா..’ அசங்கிய விஷயம். எப்படிச் சொல்வது? ‘கொல்லைக்கு வரலியாமா?’ மவுனமாக சீசாவை நீட்டினேன். ‘வாயு எல்லாம் கிரமமா பிரியறாரோ..’ நான் முழித்தேன்….




Read more »

Vishnupuram ThErthal – Part 2விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 2

By |

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 2 அந்த ஆள் பார்க்க வினோதமாக இருந்தான். வயது கிருபாகரன் அண்ணன் புருஷோத்தமனை விட கொஞ்சம் கூட இருக்கலாம். இவனுக்குப் பெரிய மீசை இருந்தது. பட்டையாக நெற்றியில் வீபுதி பூசி இருந்தான். சந்தனம், குங்குமம், ஜெமினி கணேசன் போல தொளதொள பேண்ட். கோயிலுக்குப் போய்விட்டு, ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடத் தயாராக நிற்கிற ஜெமினி. கோயில் வாசலிலேயே நிற்கிறான். ஒரு கையில் தொப்பி. கையில் ஏதோ காகிதம். கோபுரத்தை அண்ணாந்து…




Read more »

Vishnupuram Therthal – Part 1விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 1

By |

விஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் (இரா.முருகன்) – பகுதி 1 ’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம். இந்தக் குறுநாவலே ’பயோபிக்‌ஷன்’ வாழ்க்கை வரலாற்று நாவலாக 2005-ல் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாகிப் பின்னர் நூல் வடிவமும், குறும்பட வடிவமும் பெற்ற ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’வுக்கு ஊற்றுக்கண். என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில் (அட்சரா வெளியீடு – 1995) இடம்பெற்ற படைப்பு இந்த…




Read more »

Muththamma Teacher – novella – completeமுத்தம்மா டீச்சர் – குறுநாவல் – முழுமையானது

By |

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் என்னளவில் ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்’ ஒரு முக்கியமான படைப்பாகும். சம்பிரதாயமான கதையாடலில் இருந்து விலகி மாய யதார்த்தத்தை நோக்கி நான் நகர்ந்தது இந்தக் குறுநாவல் மூலம் தான். பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்ட புதிய பார்வை இதழில் பிரசுரமான இந்தக் குறுநாவலுக்குப் பிறகு, ‘மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’ தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதைகள் வழியே ‘அரசூர் வம்சம்’ வந்தடைந்தேன். —————————— அத்தியாயம் 1 பாக்கியலட்சுமி…




Read more »

Muththamma Teacher – chapter 7முத்தம்மா டீச்சர் – அத்தியாயம் 7

By |

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 7 ’கனகாம்பரம்.. மல்லி.. பிச்சிப்பூ..’ எருமைக்காரன் தெருவில் அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. வீடு வீடாக நின்று போகிற பூக்காரி முத்தம்மா டீச்சர் வீட்டு ஜன்னல் பக்கம் ஒரு வினாடி நின்று குரல் கொடுத்தாள். இன்றைக்கு வெள்ளிக்கிழமை இல்லை. டீச்சர் கதம்பம் வாங்கி வீட்டில் படத்துக்கு எல்லாம் சார்த்துவது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான். ஆனால் என்ன.. மற்ற நாளில் பூ வாங்கக் கூடாதா என்ன? ‘மல்லிப்பூ நாலு…




Read more »

Muththamma Teacher – Chapter 6முத்தம்மா டீச்சர் – அத்தியாயம் 6

By |

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 6 கடைசி ஒத்திகைக்கான ஞாயிற்றுக் கிழமை, காலையிலிருந்தே ஜோதி அக்கா அழுது கொண்டிருந்தாள். புகுந்த வீட்டிலிருந்து பிரசவத்துக்கு வந்து ஒரு மாதமாகிறது. வீட்டுக்காரனோ வேறு யாருமோ வந்து பார்க்கவில்லையாம். சீர் செனத்தியில் குறைச்சலாம்.. ‘பொம்பளைப் புள்ளே… சின்னவ இவ தலையெடுத்து எல்லாம் செய்ய வேண்டியிருக்கு..கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா பொறுத்துக்குங்க சம்பந்தி.. அடுத்த மாசம் லோன் போடப் போறா..’ போட்டு வைத்திருக்கிறது. ஒரு பவுனில் மோதிரம்…




Read more »