Archive For பிப்ரவரி 8, 2014
என்னளவில் ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்’ ஒரு முக்கியமான படைப்பாகும். சம்பிரதாயமான கதையாடலில் இருந்து விலகி மாய யதார்த்தத்தை நோக்கி நான் நகர்ந்தது இந்தக் குறுநாவல் மூலம் தான். பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்ட புதிய பார்வை இதழில் பிரசுரமான இந்தக் குறுநாவலுக்குப் பிறகு, ‘மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’ தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதைகள் வழியே ‘அரசூர் வம்சம்’ வந்தடைந்தேன். —————————— முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 1…
பகல் பத்து ராப் பத்து – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1 என் குறுநாவல்களில் மும்பாயைக் களனாகக் கொண்டது ‘பகல் பத்து ராப்பத்து’. 1990-களின் மத்தியில் மும்பை வங்கிக் கிளைகளில் கிளையண்ட் சர்வர் கம்ப்யூட்டிங்கில் யூனிக்ஸ் பிரதிஷ்டை செய்து சைபேஸ் டேட்டாபேஸ் கட்டி எழுப்புவது தொடங்கி நாங்களே உருவாக்கிய சி-மொழி அடிப்படையான மென்பொருளும், ஹப், டெர்மினல் கான்சண்ட்ரேட்டர் இன்னோரன்ன வன்பொருளும் சீராக நிறுவி வெற்றிகரமாக இயங்க வைக்க உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம். நாளின் 18…
பகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 9 ’முன்னூற்று முப்பத்தஞ்சு ரூபாய்’. ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். மொட்டை மாடி அரை இருட்டு. காரை பெயர்ந்த தரையில் நேர் கோடாகக் கிடக்கும் தண்ணீர்க் குழாய்களைத் தாண்டித் தவிர்த்தபடி. ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். நீளக் கட்டிய பிளாஸ்டிக் கயிற்றுக் கொடியில் உலர்த்தி எடுக்க மறந்துபோன மார்க் கச்சையின் கொக்கி காதில் பிறாண்ட .. யாரோடது இத்தனை பெரிசா.. லேசான ஈர வாடையை முகர்ந்தபடி….
பகல் பத்து ராப் பத்து – இரா.முருகன் அத்தியாயம் 8 ‘ஆவிக்னான் பட்டணத்துக்காரிகள்.. கேள்விப் பட்டிருக்கியா ப்ரீதி?’ பெரைரா காரை ஓட்டிக் கொண்டே கேட்டான். சோடியம் வேப்பர் விளக்குகளின் சீரான வெளிச்சத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டிருந்தது விக்டோரியா டெர்மினஸ். பரபரப்பெல்லாம் ஓய்ந்து வெறிச்சோடிக் கிடந்த தெருவில் வாழைப்பழ வண்டிக்காரர்களின் குரல் தான் மிச்சம் இருந்தது. ‘ஆவிக்னான்.. பிகாஸோ வரைஞ்ச ஓவியம் தானே? தெரியும். காலேஜ்லே ஆர்ட் அப்ரிசியேஷன் ஒரு பாடம் எடுத்துப் படிச்சதுலே தான் பிகாஸோ, வான்கோ,…
பகல் பத்து ராப் பத்து – இரா.முருகன் அத்தியாயம் 7 டங்கல். இது ஒரு மனிதனின் பெயரா இல்லை ஏதாவது வஸ்துவா என்று சாந்தாபாய்க்குப் புரியவில்லை. மதியத்திலிருந்து சாரிசாரியாக வந்த ஆரஞ்சு நிறத் தலைப்பாகைக் காரர்கள் விக்டோரியா டெர்மினஸ் முன்னால், மலைப்பாம்பு கிடப்பது போல, நீள வளைந்து போகிற சங்கிலி போல, கையைக் கோர்த்து நின்றபோது, உரத்த குரலில் திரும்பத் திரும்பச் சொன்னது ‘டங்கல்’. ஆஸாத் மைதானத்தில் அப்புறம் அவர்கள் பிரம்மாண்டமான கூட்டமாகக் கூடி இந்தியிலும், மராத்தியிலும்…
பகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 6 ப்ரீதி வெராண்டாவில் வந்து நின்றாள். ஐந்து மணிக்குக் கார் அனுப்புவதாக விக்ரம் சொல்லியிருக்கிறான். பெரைரா நேரே ஓட்டலுக்கு வந்து விடுவானாம். பெரைரா சரி என்றால் எல்லோருக்கும் சரி தான். பெரைரா ஆர்ட் பிலிம் எடுக்க என்.எப்.டி.சிக்கு கடன் கேட்டு மனுப் போட்டிருக்கிறானாம். யார் கண்டது, எல்லாம் கூடி வரும் பட்சத்தில் ஷபானா ஆஸ்மி போல, தீப்தி நவ்வால் போல, ஸ்மிதா பட்டீல் போல… ப்ரீதி அஹூஜா… வேண்டாம்…..