Archive For செப்டம்பர் 28, 2014

பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார் – தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை

By |

இன்றைய தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார் ’புடவையும், சட்டைத் துணியும், அடுக்குப் பாத்திரமும், குடையும், இங்க் பாட்டிலும், கொண்டை ஊசியும், கடிகாரமும், ரூல்தடியும், பேனாக்கத்தியும், சாமி படமும், குண்டூசி டப்பாவும் என்று உலகில் படைக்கப்பட்ட சகலவிதமான பொருள்களையும் மணியை அடித்து அடித்துக் கொடுக்க, கண்ணாடிக்காரரும், நீலச்சட்டைக்காரரும், கழுத்தில் மப்ளர் சுற்றி இருக்கிறவரும், வலது கோடியில் உசரமாக நிற்கிற அண்ணாச்சியும் வாங்கிக் கொண்டு கூட்டத்தில் கலக்க, ராத்திரி பத்து மணியானதே தெரியாது’….




Read more »

லண்டன் டயரி புத்தகத்தில் இருந்து தலைவெட்டி லண்டன்

By |

லண்டன் டயரி புத்தகத்தில் இருந்து தலைவெட்டி லண்டன் டியூடர் வம்ச முதல் அரசனான ஏழாம் ஹென்றி காலம் லண்டன் மாநகரின் அமைப்பையும் வளர்ச்சியையும் பொறுத்தவரை ஒரு பொற்காலம். ஐரோப்பியக் கலை, இலக்கிய உலகில் புதிய சிந்தனைகள் வெளிப்பட்டுப் புதுமை படைத்த மறுமலர்ச்சிக் காலம் (ரினைசான்ஸ்) இதுவே. வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலய வளாகத்தில் மறுமலர்ச்சிக் காலத்துக்கே உரிய அற்புதமான கட்டிட அமைப்போடு கூடிய, கிட்டத்தட்ட உலக அதிசயங்களில் ஒன்றான ‘ஏழாம் ஹென்றி வழிபாட்டு அரங்கு’ அமைத்தான் ஏழாம் ஹென்றி. தனக்கு…




Read more »

வீடு கணக்கா ஓட்டல்

By |

‘வீடு மாதிரியே சகல வசதியும் கொண்ட‘ என்று விளம்பரப் படுத்தப்படும் சாப்பாட்டு ஹோட்டலையோ, லாட்ஜையோ கண்டால் பலபேர் எப்படி காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்புத் துண்டாக அங்கே போய் விழுகிறார்கள் என்பது புரியாத சமாசாரம். இப்படியான ‘ஹோம்லி’ அடைமொழியை விளம்பரப் பலகையில் பார்த்ததுமே கங்காருவாக நாலடி அந்தாண்டை தாண்டிக் குதித்து ஓடி ரட்சைப்பட வேண்டாமோ! படாதவன் பட்ட பாடு, அதுவும் பரங்கி தேசத்தில் – ஏன் கேக்கறீங்க, இதோ. “முழிச்சிக்கோ பாய், இடம் வந்தாச்சு. வீடு கணக்கா சவுகரியமான…




Read more »

இவிடம் நாவிற்கினிய எள்ளுப் புண்ணாக்கு

By |

இவிடம் நாவிற்கினிய எள்ளுப் புண்ணாக்கு அது என்னமோ தெரியவில்லை. சுவாரசியமான அறிவிப்புப் பலகைகள் என்னை விடாமல் துரத்துகின்றன. ஒரு மழைக்கால சாயந்திரத்தில் கையில் உயர்த்திப் பிடித்த குடையோடு புறநகர் கடைத்தெருவில் போய்க் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இது -‘இவ்விடம் நாவிற்கினிய அரிசி, குருணை, தவிடு மற்றும் எள்ளுப் புண்ணாக்கு கிடைக்கும்.’ அடுப்பில் ஏற்றி வடித்தால் பொலபொலவென்று மல்லிகைப்பூ வெண்மையோடு சோறாக உதிரும் அரிசி இந்த நாக்கு இருக்கும் வரை சுவையானதுதான். குருணை? நாலு நாள் காய்ச்சலில் நாக்கு…




Read more »

சற்றே நகுக – தினமணி கதிர் பத்தி – 2006 – இரா.முருகன்

By |

சற்றே நகுக – தினமணி கதிர் பத்தி – 2006 – இரா.முருகன் மத்தியம வில்லன் காலையில் பத்திரிகை வந்து விழக் காத்துக் கொண்டிருந்தபோது கை விரல் தன் பாட்டுக்கு டெலிவிஷன் பெட்டியின் ரிமோட்டை அழுத்துகிறது. சானல் சானலாகத் தாவுகிற காட்சி. சகலமான மொழியிலும் போன, முந்தைய தலைமுறைக்காரர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு சானலில் பழைய சினிமா பாட்டு சீன். புஷ்டியான கருப்பு வெள்ளை சுந்தரிகள் சேலை மாதிரி எதையோ தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு தொம்தொம்மென்று தரையதிரக் குதிக்கிறார்கள்….




Read more »