Archive For அக்டோபர் 14, 2014
முன்பெல்லாம் மாத ஜோதிடம், பவான்ஸ் ஜெர்னல் தவிரப் பிற பத்திரிகைகள் வருடம் பிறந்தது முதல்கொண்டு நர்சரி குழந்தைகள் போல் ஏபிசி ஏபிசி என்று நொடிக்கொரு தடவை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆடிட் பீரோ ஓஃப் சர்க்குலேஷன் என்ற இந்த ஏ.பி.சி இந்தியப் பத்திரிகைகளின் விற்பனை, வாசகர் தளத்தின் பரப்பளவு விவரங்களை மொழிவாரியாகத் தொகுத்து வருடா வருடம் வெளியிடும். நான் முந்தியா நீ முந்தியா என்ற மார்தட்டல், சவால் இன்னோரன்னவை மொழிக்கு மொழி அகில பாரத நாடகமாக அரங்கேறும் இந்த…
அற்ப விஷயம் -11 நாக்கு மூக்கு இரா.முருகன் காப்பி சாப்பாட்டு ரசனை இன்னும் பிடி கிட்டாத ஒரு சங்கதி. காலை காப்பியில் ஆரம்பிக்கலாம். சில பல பேருக்கு வீட்டில் ரதியாக பெண்டாட்டி இருக்கக் கூடும். அந்தம்மா பின் தூங்கி முன் எழுந்து வாசலில் பத்திரிகையோடு வந்து விழும் ஆவின் பால் பாக்கெட்டை எடுப்பார். கள்ளிச் சொட்டாக காப்பி கலந்து கொண்டு வந்து ஐயாவை எழுப்புவார். இவர் அதைக் கடனே என்று குடித்து விட்டு செருப்பில் காலை நுழைத்துக்…
“சட்டை போட்டிருக்கீங்களா சார்?” நான் கேட்டேன். தொலைபேசியில் எதிர்முனையில் ஒரு வினாடி மௌனம். ‘புரியலையே’. மும்பையிலிருந்து வாரக் கடைசியில் சென்னை வந்திருக்கும் பிரபல இயக்குனர் அவர். சர்வதேச அளவில் அவருடைய கலைப்படங்கள் விருதுகளை வாரிக் குவித்தவை. ‘ஓய்வாக உட்கார்ந்து சாப்பிட்டபடியே இலக்கியம், சினிமா பற்றி எல்லாம் பேசலாம்’ என்று அவரிடம் யோசனை சொன்னது நான் தான். எங்கே உட்கார்ந்து பேசுவது? பத்திரிகையாளரும் நேற்றைய விளையாட்டு நட்சத்திரமுமான இன்னொரு நண்பர் உதவிக்கு வந்தார். இயக்குனருக்கு அவரும் சிநேகிதர்தான். ‘எங்க…